Flash News : குறுவளமைய ஒருங்கிணைப்பாளர் மேற்கொள்ளவேண்டிய பணிகள் குறித்த வழிகாட்டுதல் நெறிமுறைகள் பள்ளிக்கல்வித்துறை வெளியீடு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 12, 2019

Flash News : குறுவளமைய ஒருங்கிணைப்பாளர் மேற்கொள்ளவேண்டிய பணிகள் குறித்த வழிகாட்டுதல் நெறிமுறைகள் பள்ளிக்கல்வித்துறை வெளியீடு.

GO : 202 , DATE : 11.11.2019
ஒன்றியங்களில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட குறுவள மையமாக செயல் படும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் கீழுள்ள அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளை கண்காணிக்க தேர்ந்தெடுக்கப்பட்ட தலைமையாசிரியர்கள்  மேற்கொள்ளவேண்டிய பணிகள் சார்ந்து வழிகாட்டுதல் நெறிமுறைகள் குறித்து ஆணை வெளியிடப்படுகிறது.

Guidelines for HMs GO - Download here ( pdf)

அரசாணை(நிலை) எண் :202.நாள் : 11.11.2019

சுருக்கம்

*பள்ளிக் கல்வி - ஒன்றியங்களில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட குறுவள மையமாக செயல்படும் உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளின் கீழ் உள்ள அரசு தொடக்க / நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளை கண்காணிக்க தேர்ந்தெடுக்கப்பட்ட குறுவள மைய உயர்நிலை / மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் மேற்கொள்ள வேண்டிய பணிகள் சார்ந்து வழிகாட்டுதல் நெறிமுறைகள் (Guidelines) வழங்குதல்
 ஆணை வெளியிடப்படுகிறது.
➖➖➖➖➖➖➖➖➖➖➖
*ஆணை:*
*1.மேலே ஒன்றாவதாக படிக்கப்பட்ட செயல்முறைகளில் மாநில திட்ட இயக்குநர், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி அவர்களால் ஆசிரியர் பயிற்றுநர்கள் ஒன்றிய அளவில் குறிப்பிட்ட பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியினை குறுவளமையமாகக் கொண்டு கல்வி மேம்பாட்டுப் பணியினை மேற்கொள்ள அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.

*2) மேலே இரண்டாவதாகப் படிக்கப்பட்ட அரசாணையில் ஒரே வளாகத்தில் செயல்படும் அரசு / மாநகராட்சி / நகராட்சி / ஊராட்சி ஒன்றிய தொடக்க / நடுநிலைப் பள்ளிகளின் மாணாக்கர்களின் நலன் மற்றும் நிர்வாக மேம்பாடு கருதி, இப்பள்ளிகளின் கல்விச் செயல்பாடுகளை ஆய்வு செய்யும் அதிகாரத்தை அதே வளாகத்தில் செயல்படும் அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு வழங்கி ஆணைகள் வெளியிடப்பட்டுள்ளன.

*3)மேலே மூன்றாவதாக படிக்கப்பட்ட கடிதத்தில் பள்ளிக் கல்வி இயக்குநர், பள்ளிக் கல்வியில் நிர்வாக சீர்திருத்தம் மேற்கொள்ளும் வகையில் மேல்நிலைப் பள்ளியை குறுவள மையத் தலைமையிடமாக தெரிவு செய்து, மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியரது வழிகாட்டுதலின் கீழ் தொடக்கப் பள்ளி முதல் மேல்நிலைப் பள்ளி வரையான பள்ளிகளை கண்காணித்திடும் வகையில் உரிய அரசாணை வழங்கிடுமாறு அரசைக் கோரியுள்ளர்.

*4)மேலே நான்காவதாகப் படிக்கப்பட்ட கடிதத்தில், தொடக்கக் கல்வி இயக்குநர், நிர்வாக மேம்பாடு கருதி குறுவள மையப் பகுதியாக செயல்படும் ஒவ்வொரு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளுக்கும் அந்த பகுதியில் குறிப்பிட்ட தொலைவிற்குள் ஊட்டுப் பள்ளிகளாக (Feeder Schools) அமைந்துள்ள அரசு / மாநகராட்சி / நகராட்சி / ஊராட்சி ஒன்றிய தொடக்க / நடுநிலைப் பள்ளிகளின் கல்விச் செயல்பாடுகளை ஆய்வு செய்தல் மற்றும் கண்காணிக்கும் அதிகாரத்தை குறுவள மையப் பகுதியினை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் சார்ந்த உயர்நிலை / மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு வழங்கிடலாம் என்று தெரிவித்துள்ளார்.

*5)மேற்கூறிய சூழ்நிலையில், பள்ளிக் கல்வி இயக்குநர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநர் ஆகியோரின் கருத்துருவினை அரசு கவனமுடன் ஆய்வு செய்து, குறுவள மையப் பகுதிக்குள் அமைந்துள்ள ஒவ்வொரு தொடக்கப் பள்ளியிலும் பயில்கின்ற மாணவர்கள் அதற்கடுத்தடுத்த நிலையில் அருகில் உள்ள நடுநிலைப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி, மேல்நிலை பள்ளி என்ற வரிசையில் கல்வியினைத் தொடரும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது என்பதால், இம் மாணவர்களுக்கு, தொடக்கப் பள்ளி ஆசிரியர் வாயிலாக கற்பிக்கப்படுவதோடு, உயர்நிலைப் பள்ளி / மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களின் கண்காணிப்பு மற்றும் வழிக்காட்டுதல்கள் இருப்பின் தொடக்கப் பள்ளி முதற்கொண்டே, நல்ல தரமான கல்வியினை வழங்குவதன் மூலம் மாணவர்களின் கல்வியில் சிறந்த முன்னேற்றத்தை ஏற்படுத்த வழி ஏற்படும் என்பதாலும், அதனைத் தொடர்ந்து, உ ர்நிலை / மேல்நிலைப் பள்ளி நிலையில் மாநில அளவில் நடைபெறுகின்ற இறுதித் தேர்வுகளில் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் மற்றும் கற்றல் அடைவுகளை மிகச் சிறப்பாக ஏற்படுத்தவும் வழிவகை ஏற்படும் என்பதையும் கருத்தில் கொண்டு, ஒன்றியங்களில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட குறுவள மையமாக செயல்படும் உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளின் ஊட்டுப் பகுதியில் (Feeder Area) உள்ள அரசு தொடக்க / நடுநிலை | உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளை கண்காணிக்க தேர்ந்தெடுக்கப்பட்ட குறுவள மைய உயர்நிலை / மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து தக்க வழிகாட்டுதல் நெறிமுறைகள் (Guidelines) வழங்கலாம் என அரசு முடிவு செய்து அவ்வாறே கீழ்க்கண்டவாறு ஆணையிடுகிறது.
➖➖➖➖➖➖➖➖➖➖➖
*(அ)ஒன்றியங்களில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட குறுவள மையமாக* *செயல்படும் உயர்நிலை/மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் அக்குறுவள மையத்தின் எல்லைக்குள் செயல்படும்;

*1⃣.அரசு தொடக்க / நடுநிலை / உயர்நிலை பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்கள் மற்றும் அரசு தொடக்க / நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் வருகை, கற்பிக்கும் திறன் போன்றவற்றை கண்காணித்திட வேண்டும்.

*2⃣.அரசு தொடக்க /நடுநிலை / உயர்நிலை பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்கள் மற்றும் அரசு தொடக்க / நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் யாரேனும் விடுப்பு எடுத்தாலோ அல்லது அவசர பணிநிமித்தமாக வட்டாரக் கல்வி அலுவலகம் / வட்டார வள மையம் சென்றாலோ அல்லது பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்ள சென்றாலோ பதிலி ஆசிரியர்களை மாற்று ஏற்பாடு செய்திட வேண்டும்.

*3⃣.அரசு தொடக்க / நடுநிலை / உயர்நிலை பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்கள் மற்றும் அரசு தொடக்க / நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் தற்செயல் விடுப்பு மற்றும் வரையறுக்கப்பட்ட விடுப்பு குறித்த தகவல் குறுவள மையமாக செயல்படும் பள்ளியின் தலைமையாசிரியருக்கு அனுப்ப வேண்டும். இதர விடுப்பு குறித்த விண்ணப்பம் இத்தலைமை ஆசிரியர் வழியாக உரிய அலுவலருக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும்.

*4⃣.பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு அரசு வழங்கும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் உரிய வகையில் சென்றடைகின்றதா என்பதை கண்காணித்திட வேண்டும்.

*5⃣.பள்ளிகளில் ஏதேனும் குறைகள் கண்டறியப்பட்டால்,
அவற்றை வட்டாரக் கல்வி அலுவலர்கள் / மாவட்டக் கல்வி அலுவலர்கள் / முதன்மைக் கல்வி அலுவலர்கள் ஆகியோருக்கு புகாராக தெரியப்படுத்த வேண்டும். அவ்வாறு அளிக்கப்பட்ட புகாரின் மீதான இறுதி நடவடிக்கை | தீர்வு கிடைக்கும் வரை தொடர்ந்து அப்புகார் குறித்து கண்காணித்திட வேண்டும்.

*6⃣.பள்ளிகளில் உட்கட்டமைப்பு வசதிகள் ஏதேனும் செய்யப்பட வேண்டியதிருப்பின் உரிய அலுவலர்களுக்கு பரிந்துரை செய்து அப்பணி முடியும் வரை தொடர் நடவடிக்கைகளைக் கண்காணித்திட வேண்டும்.

*7⃣.பள்ளிகளில் பயிலும் மாணவர்களது அறிவாற்றலை மேம்படுத்திட உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள அறிவியல் ஆய்வக உபகரணங்களைப் பயன்படுத்திட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

*8⃣.பள்ளிகளில் பயிலும் மாணவர்களது கற்கும் திறனை ஊக்குவிக்கும் பொருட்டு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் ஏற்படுத்தப்படும் smart class வகுப்புகளை பயன்படுத்திட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

*9⃣.பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் ஆர்வத்தினையும் உடல் நலனையும் மேம்படுத்திட உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள உடற்கல்வி ஆசிரியர்கள் மூலம் விளையாட்டு வகுப்புகள் எடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

*10.பள்ளிகளில் பயிலும் மாணவர்களது பாதுகாப்பினையும் (safety of students) கண்காணித்து உறுதிப்படுத்திட வேண்டும்.

*11.பள்ளிகளில் பயிலும் மாணவர்களது கற்றல் மற்றும் கற்பித்தல் திறனை மேம்படுத்தி கல்வித்தரத்தினை உயர்த்த உரிய அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.

*1⃣2⃣.உயர்நிலை /மேல்நிலைப் பள்ளிகளில் Hi- Tech உயர் தொழில் நுட்ப ஆய்வகங்கள் துவங்கி கணினி வசதிகள் ஏற்படுத்தப் பட்டுள்ளதால், தேர்ந்தெடுக்கப்பட்ட குறுவள மையமாக செயல்படும் உயர்நிலை / மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் அக்குறுவள மையத்தின் எல்லைக்குள் செயல்படும் அனைத்து வகையான அரசு தொடக்க / நடுநிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் இவற்றை பயன்படுத்தி கணினி சார்ந்த திறன்களை பெற வாய்ப்பு ஏற்படுத்த வேண்டும்.

*(ஆ) மேலும், அரசு தொடக்க / நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களின் பணி மற்றும் ஊதியம் சார்ந்த நடைமுறைகளில் தற்போதுள்ள முறையே தொடரும் எனவும், அரசு ஆணையிடுகிறது.

(ஆளுநரின் ஆணைப்படி)

பிரதீப் யாதவ்,
அரசு முதன்மைச் செயலாளர்.




2 comments:

  1. It good idea and veay nice planning to develop primary education

    ReplyDelete
  2. We are urgently in need of Kidney donors with the sum of $500,000.00 USD,(3 CRORE INDIA RUPEES) All donors are to reply via Email for more details: Email: healthc976@gmail.com
    Call or whatsapp +91 9945317569

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி