ஆசிரியர் தேர்வில் MBC, SC பிரிவினருக்கு இட ஒதுக்கீட்டை அமல்படுத்தாமல் அநீதி - அன்புமணி ராமதாஸ் அறிக்கை!! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 24, 2019

ஆசிரியர் தேர்வில் MBC, SC பிரிவினருக்கு இட ஒதுக்கீட்டை அமல்படுத்தாமல் அநீதி - அன்புமணி ராமதாஸ் அறிக்கை!!


தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையம் நடத்திய முதுநிலை ஆசிரியர் பணிக்கான போட்டித் தேர்வுகளில் தற்காலிகமாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டிருக்கிறது. வேதியியல் பாடத்திற்கான ஆசிரியர் தேர்வில் இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துவதில் நிகழ்ந்த குளறுபடிகள் காரணமாக, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பட்டியலின வகுப்புகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது.

அரசு பள்ளிகளில் காலியாக உள்ள 17 பாடங்களுக்கான 2144 முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை  போட்டித் தேர்வு மூலம் நிரப்புவதற்கான அறிவிக்கை கடந்த ஜூன் 12-ஆம் தேதி வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து செப்டம்பர் 27, 28, 29 ஆகிய தேதிகளில் நடத்தப்பட்ட ஆன்லைன் எழுத்துத் தேர்வுகளில் ஒரு லட்சத்து 47,594 பேர் கலந்து கொண்டனர். அத்தேர்வுகளின் முடிவுகள் அக்டோபர் 21-ஆம் தேதி வெளியிடப்பட்ட நிலையில், அவர்களில் ஒவ்வொரு பணியிடத்திற்கு இருவர் வீதம் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டனர்.

நவம்பர் 8 மற்றும் 9 ஆம் தேதிகளில் சான்று சரிபார்ப்பு நடைபெற்று முடிந்த நிலையில், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், உயிரியல், விலங்கியல், புவியியல்  உள்ளிட்ட 12 பாடங்களுக்கு தற்காலிகமாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிரியர்களின் கடந்த 20-ஆம் தேதி வெளியிடப்பட்டது. மொத்தம் 7 பாடங்களுக்கு பின்னடைவு பணியிடங்கள் நிரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அவற்றில் முடிவுகள் அறிவிக்கப்பட்ட வேதியியல், அரசியல் அறிவியல், புவியியல் ஆகிய பாடங்களுக்கான ஆசிரியர்கள் தேர்வில் இடஒதுக்கீட்டு விதிகள் மீறப்பட்டுள்ளன.

எடுத்துக்காட்டாக, வேதியியல் பாடத்திற்கு 121 பின்னடைவு பணியிடங்கள், 215 நடப்பு காலியிடங்கள் உட்பட மொத்தம் 356 பேர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். இவற்றில் 121 பின்னடைவு பணியிடங்கள் தவிர மீதமுள்ள 235 பேர் 69% இட ஒதுக்கீட்டு விதிகளின்படி தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.


121 பின்னடைவு பணியிடங்களைப் பொருத்தவரை மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 74, பட்டியல் இனத்தவர் 35, அருந்ததியர் 10, பொதுப்பிரிவு ஊனமுற்றோர் 2 என்ற விகிதத்தில் நிரப்பப்பட வேண்டும். அதுதான் சமூக நீதிக்கு ஏற்றதாக அமையும். ஆனால், காலியிடங்கள் அவ்வாறு நிரப்பப்படவில்லை.

மாறாக, 356 பணியிடங்களும் ஒன்றாக இணைக்கப்பட்டு தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.நடப்புப் பணியிடங்களுக்கு முதலிலும், பின்னடைவு பணியிடங்களுக்கு இரண்டாவதாகவும் தரவரிசை  தயாரிக்கப்பட்டிருந்தால், 215 நடப்பு காலியிடங்களில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 20% இட ஒதுக்கீட்டின்படி 43 இடங்கள், பின்னடைவு பணியிடங்கள் 74 என 117 இடங்கள் இயல்பாக கிடைத்திருக்கும்.

இதுதவிர நடப்பு காலியிடங்களுக்கான தரவரிசைப் பட்டியலில் பொதுப்பிரிவினருக்கான 31% இடங்களான 67 இடங்களில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 34 பேர் இடம் பெற்றிருப்பதால், அவர்களையும் சேர்த்து மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள் 151 பேருக்கு வேலை கிடைத்திருக்க வேண்டும்.ஆனால், அவ்வாறு செய்யப்படாதது மட்டுமின்றி, திட்டமிட்டு இழைக்கப்பட்ட இரு துரோகங்கள் தான் சமூகநீதிக்கு பெரும் தீங்கை இழைத்திருக்கிறது


. முதலாவதாக நடப்பு காலியிடங்கள், பின்னடைவு பணியிடங்கள் ஆகிய இரண்டுக்கும் சேர்த்து ஒரே தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்பட்டது, அப்பட்டியலிலும் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களை பொதுப்பட்டியலில் சேர்க்காமல், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்தது ஆகியவை தான் அந்த இரு துரோகங்கள் ஆகும். 150 மதிப்பெண்களுக்கு 109 மதிப்பெண்கள் எடுத்து தரவரிசைப் பட்டியலில் முதல் இடத்தை பிடித்த மாணவர் ஏ. வசந்தகுமாரும், 108 மதிப்பெண்களுடன் இரண்டாவது இடத்தை பிடித்த ஏ.சங்கரும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் ஆவர். இவர்கள் பொதுப்பட்டியலில் சேர்க்கப்பட்டிருக்க வேண்டும்;

 ஆனால், மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர். அதேநேரத்தில், 91 மதிப்பெண் எடுத்து  103 இடத்தைப் பிடித்துள்ள பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஒரு மாணவி பொதுப்பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார். சமூகநீதியையும், இட ஒதுக்கீட்டுக் கொள்கையையும் இதை விட மோசமாக யாராலும் சிதைக்க முடியாது.தரவரிசைப் பட்டியலில் 93 மதிப்பெண்களுடன் 64-ஆவது இடத்தைப் பிடித்த அன்புவதன் வரையிலான  மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் 34 பேர் பொதுப்பிரிவில் சேர்க்கப்பட்டிருக்க வேண்டும்.

அவ்வாறு சேர்க்கப்பட்டிருந்தால் அப்பிரிவைச் சேர்ந்த மேலும் 34 மாணவர்களுக்கு வேலை கிடைத்திருக்கும். அதேபோல், தரவரிசைப் பட்டியலில் 93 மதிப்பெண்களுடன் 67-ஆவது இடத்தைப் பிடித்த எல்.சுமிதா  வரையிலான பட்டியலின மாணவ, மாணவியர் 5 பேர் பொதுப்பிரிவில் சேர்க்கப்பட்டிருந்தால் அப்பிரிவைச் சேர்ந்த மேலும் 5 பேருக்கு ஆசிரியர் வேலை கிடைத்திருக்கும். தரவரிசைப் பட்டியலில் முன்னணியில் உள்ளவர்களை பொதுப்பட்டியலில் தான் சேர்க்க வேண்டும்;


பொதுப்பிரிவு இடங்கள் நிரப்பப்பட்ட பிறகே அவர்கள் இடஒதுக்கீட்டுப் பிரிவில் சேர்க்கப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றமும், உயர்நீதிமன்றங்களும் பல முறை தீர்ப்பளித்துள்ளன. அவ்வாறு இருக்கும் போது பொதுப்பிரிவில் சேர்க்கப்பட வேண்டிய 34  மிகவும் பிற்படுத்தப்பட்டோரையும், 5 பட்டியலினத்தவரையும் இட ஒதுக்கீட்டுப் பிரிவில் சேர்த்தது அநீதியாகும்.சமூகநீதிக்கு எதிரான அதிகாரிகள் தான் இந்தத் துரோகத்தை செய்திருக்க வேண்டும். இதுகுறித்து விசாரணை நடத்தி, இதற்கு காரணமான அதிகாரிகள் தண்டிக்கப்பட வேண்டும். அத்துடன் நடப்பு காலியிடங்களுக்கும், பின்னடைவு பணியிடங்களுக்கும் தனித்தனியாக தரவரிசைப் பட்டியல் தயாரித்தும்,  அதில் முதல் 67 இடங்களுக்குள் வந்துள்ள 34 மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரையும், பட்டியலினத்தைச் சேர்ந்த ஐவரையும் பொதுப்பட்டியலில் சேர்ப்பதன் மூலம் அப்பிரிவுகளைச் சேர்ந்த அதே எண்ணிக்கையிலான மாணவர்களுக்கு அரசு ஆசிரியர் வேலை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.

அதுமட்டுமின்றி, இன்னும் தேர்வுப் பட்டியல் வெளியிடப்படாத தமிழ், பொருளாதாரம், வரலாறு, உயிரி வேதியியல் பாடங்களுக்கான ஆசிரியர் தேர்விலும் இதே போன்ற தவறுகள் நடந்திருக்க வாய்ப்புகள் இருப்பதால், அப்பட்டியல்களையும் சரிபார்த்து வெளியிட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன். இவ்வவாறு அவர் கூறியுள்ளார்.

71 comments:

  1. Replies
    1. bc eappate ponalum eanna senjalum kakka yaruppa irukka. oru arikkai vida kuda all illa.

      Delete
    2. Mbc க்காக அன்புமணி கேட்பது நியாயம் தான். 411சீட்டை பொதுப்பிரிவில் சேர்த்து சட்டம் இயற்றிய Bc மந்திரிகள் மௌணம் ஏன்? இதுநாள் வரை என்னசெய்துகொண்டிருந்தார்கள். Bc ஒன்றிணைந்து Backlog சீட்டை பொதுப்பிரிவில் சேர்த்த 2016(27f)
      சட்டப்பிரிவை நீக்கச்சொல்லி போராடவேண்டுவது தான் நியாயம். அதைவிடுத்து அன்புமணிமேல் கோபப்பட்டால்நாம் தான்முட்டாள்கள்.சட்டத்தில் உள்ள இடஒதுக்கீட்டைத் தானேஅவர்கேட்டுள்ளார்.

      Delete
    3. St.Xavier's TRB Academy
      Chettikulam, Nagercoil.
      Cell:8012381919
      2020-ல் வரும் Pgtrb தேர்வுக்கு பயிற்சிகள் தினமும்,சனி& ஞாயிறு கிழமைகளில் கணிதவியல்
      மற்றும் வணிகவியல் பாடங்களுக்கு மட்டும் நடைபெற்று வருகிறது.
      திருநெல்வேலி,தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாணவர்கள் தினமும் பயிற்சி பெற்று வருகிறார்கள்.
      நீங்களூம் வாருங்கள்...அரசு முது கலை ஆசிரியர் வேலை பெறலாம்..

      Delete
    4. அட முட்டாள் விளம்பரம் ஒரு கேடா ஆரம்பிச்சிட்டானுக பாருங்க பிச்சை எடுக்க

      Delete
    5. அட முட்டாள் விளம்பரம் ஒரு கேடா ஆரம்பிச்சிட்டானுக பாருங்க பிச்சை எடுக்க

      Delete
    6. Bro jenga govt that keakannum

      Delete
  2. Bc ellam serthu court case poduvum

    ReplyDelete
    Replies
    1. so re list than.. yena avanum mbc 34 sc 5 pearum court la case poduvanunga.. so court case a kaaram kaati trb 2020 varaikum iluthadikalam..

      Delete
    2. Plan pannithan trb board exam vaikuthu bro. TNPSC yum thanExam natathithu oru problem varuvathu ellai. Politechnig exam pg computer exam court pogama natathamutiyala.ethula next year plan veru.

      Delete
  3. Ellarum mulligan than chemistry selection listula idaothikidu follow pannala so nan case poda poran

    ReplyDelete
    Replies
    1. Mr.unknown mothalla un pera podu Appuram casa podu

      Delete
    2. This time notification la both bv (GT+BC+MBC+SC+SCA refer 2017 pg trb selection list almost aalea ilama not available nu irukum-itha first elarum kekanum)and cv serthu almost 600 vaccancies vanthirukanum.. 2017 la just 97 vaccancies only filled..athula ipa mbc bc sca ku matum bv notification la ulathu..GT,BC bv vaccancies enga..yen notification la podala so itha trb ta keta kandipa entha kularupadi ilama almost 600 vaccancies la elarukum 69% reservation padi job kandipa kidaikum.. supreme court 2017 trb ku 6 marks kuduka soliruku..but case potavangalukuthan marks nu soli trb case potavangaluku matum posting kuduthiruku..2019 trb la elarukum marks valankiruku..so athula yen valangala..?ithuku trb vilakam ena..?ithuku answer na kandipa elarukum low marks eduthavankalukukuda chemistry la job kidaikum..

      Delete
  4. Adei loosu punnagaigala... Mbc sc ku general quota la mark irundhum avangala reservation la setha anga pathika padurathu ellame than, ithe than nalaiku bc kum nadakum.. nanum bc than

    ReplyDelete
  5. Idaothikidu sari illai new list vidanum

    ReplyDelete

  6. Ella subject layum women's reservation mistake pathi arikayil illaye

    ReplyDelete
    Replies
    1. S true ithalam kaetka aalayae ilaya.... ....

      Delete
    2. S.S ஆரம்பத்தியேருந்து கலவரத் தை தூண்டிவிடாதே

      Delete
    3. S.S ஆரம்பத்தியேருந்து கலவரத் தை தூண்டிவிடாதே

      Delete
    4. S.S ஆரம்பத்தியேருந்து கலவரத் தை தூண்டிவிடாதே

      Delete
    5. S.S ஆரம்பத்தியேருந்து கலவரத் தை தூண்டிவிடாதே

      Delete
    6. S.S ஆரம்பத்தியேருந்து கலவரத் தை தூண்டிவிடாதே

      Delete
    7. நண்பரே சட்டத்தில் உள்ள பெண்களுக்கான இடஒதுக்கீட்டைப் பற்றித்தான் கூறினேன்.

      Delete
    8. Pg trb layea ipadina college trb la ena kodumaiyo.. totally waste and worst govt and trb.. tnpsc is the best..

      Delete
  7. Other communutila reservation correcta follow pannatha poluthu nenka yen ayya kekkla?

    ReplyDelete
  8. Ellam mudithathu enni onum pudugamudiyathu prasanai akividum entrutheriyu

    ReplyDelete
  9. Adu aluga onai kavalaipattdathu sc ku kural kudukiran anpumani dai nee yarudu ooruku theriyum

    ReplyDelete
  10. இந்த முட்டாள் கிட்ட go யாராவது காட்டுங்க.. 2012 ல பின்னடைவு bc க்கு இதே மாதிரி தான் நிரப்பினார்கள்.. அப்போ எங்க போனானாம் இந்த யோக்கியன்.. ஏதாவது பேசி விளம்பரம் தேட வேண்டியது..

    ReplyDelete
  11. நண்பா ஆடு நனைகிறது ஓநாய் ......

    ReplyDelete
  12. இடஒதுக்கீடேவேணாம் மார்க்படி பே ாடு

    ReplyDelete
  13. TRB EXamla 90 mark எடுத்த வேலையில்ல ஆனா 75 mark எடுத்தா வேலை அசிங்கமாயில்லை (we are equal)படிச்சது சும்மாவா

    ReplyDelete
  14. TRB EXamla 90 mark எடுத்த வேலையில்ல ஆனா 75 mark எடுத்தா வேலை அசிங்கமாயில்லை (we are equal)படிச்சது சும்மாவா

    ReplyDelete
    Replies
    1. அப்பிடி கேளுங்க சஹோ.. அதான் படிக்கறப்போ சலுகையை அனுபவிக்கராணுங்க.. இப்போ வேலையிலும் இட ஒதுக்கீடு வேணுமாம்..

      Delete
    2. Mr.Rajavel...vandiya naalu comment reply panniya mooditu poitta irukkanum ok...engalukku reservation unga appan onnum kudukka la adu enga rights again edhavadhu idu maadhiri pesna vachi erichiduvan unna ...ok...va bro...

      Delete
    3. Nenga Pg teachera ..unga urimainu sollunga thappu illa.. Ipadi veri pidicha mathiri pesathinga...

      Delete
  15. இடஒதுக்கீடேவேணாம் மார்க்படி பே ாடு

    ReplyDelete
  16. இடஒதுக்கீடேவேணாம் மார்க்படி பே ாடு

    ReplyDelete
  17. இடஒதுக்கீடேவேணாம் மார்க்படி பே ாடு

    ReplyDelete
  18. இடஒதுக்கீடேவேணாம் மார்க்படி பே ாடு

    ReplyDelete
  19. Gt, gtw, bc, bcw, sc, scw, இந்த வரிசையை பத்தி மொதல்ல தெரிஞ்சிக்குங்க,
    1. மதிப்பெண் அடிப்படையில் (இறங்கு வரிசையில்) பட்டியலிட வேண்டும்
    2. Gt பிரிவில் (GT சிறப்பு பிரிவுகள் நீங்கலாக) தேவையான தேர்வர்களை தேர்ந்தெடுக்க வேண்டும் (அது ஆணாகவும் இருக்கலாம் பெண்ணாகவும் இருக்கலாம்.
    3. பிறகு மீதமுள்ள பொது பிரிவில் பெண்களை மட்டும் மதிப்பெண் அடிப்படையில் பட்டியலிட்டு தேவையான மகளீரை தேர்ந்தெடுக்க வேண்டும்
    3. இதையே முறையே bc, MBC, sc என பின்பற்ற வேண்டும் இதன் பெயர் தான் இட ஒதுக்கீடு.
    4. இந்த முறையில் ஒவ்வொரு படத்திற்கும் போட்டு பாருங்கள், ஒவ்வொரு பிரிவிலும் பாடத்திற்கு மூன்று நான்கு பெண்களாவது வாய்ப்பை இழந்திருப்பது தெரியும்.

    ReplyDelete
    Replies
    1. 20 .25 பெண்கள் வரை வாய்ப்பு இழந்திருப்பார்கள்

      Delete
    2. ஓகே வருத்தம் புரிகிறது

      Delete
    3. SS friend.. court case than ithuku orea vazhi.. so immediate a case podunga ss.. ungaloda naanum en friends m varrom.. 2012 la ipadithan kularupadi irunthichu apuram relist vitanga..so kandipa case court la jeyikum..all the best..



      Delete
  20. நண்பர்களே கெமிஸ்ட்ரி செலக்ஷன் லீஸ்ட்டை டவுன்லோடு பண்ணி பாருங்க அப்பறம் மனசாசியோடு பேசுங்கோ

    ReplyDelete
    Replies
    1. U r correct.. kandipa case poduvanga within 1 or 2 days in madurai HC.. so kandipa re selectin list will come very soon..

      Delete
    2. Backlog fill pannittu than CV fill pannanumnu go irukku .. adha purinchkittu apram list a paarunga..

      Case will be dimissed

      Delete
    3. Mr.STAR un vaayila varum selection .. apdiye annanthu vaaya polanthkittu ninnu

      Delete
    4. dai vadikatuna mutal unknown.. nee first ethana exams eluthiruka..? ethana CVs ku poyiruka..? ethana select lists a nee paathuruka nee..? yenda unaku adipadi govt posting selection process kuda theriyatha..?entha govt posting lada intha selection method iruku soluda nee..? un vaayila naanga manna allipoturuvomda be careful.. first un name a poduda naayea..un name unakea theriyama unknown nu poturuka neelam trb exam pathi peasa ena arukathai thakuthi iruku unaku.. dai unna adichea poturuvom.. yaru evarunu enanu nala therinchitu peasu..ila unaku naanga aapu vachuruvom.. oru govt selection process basickuda theriyathada unaku mutal porampoku.. court csae kandipa jeyikum..athuku munadiyea trb relist viduvanga..2012 la ithea mathirithanda nadanthu relist vitangada manguni mutal..

      Delete
  21. G.o. காமிங்கையா

    ReplyDelete
    Replies
    1. Unkpit summa vimarsanam pannatha unaku ethan velaya

      Delete
  22. என்ன சத்தத்தையே காணோம்?

    ReplyDelete
  23. தகுதியற்ற விமர்சனம்

    ReplyDelete
  24. இங்கு அன்புமணி அவர்கள் ஒருத்தை சொல்கிறார் . அதற்கு நாகரீகமாக பதிலளிக்கவோ விமர்சிக்கவோ தெரியாதவர்கள் எப்படி ஆசிரியராக முடியும்... பின்னூட்டங்களை பாருங்கள்.. எவ்வளவு அருவருப்பான கீழ்த்தரமான வார்த்தைகளை சாதாரணமாக பயன்படுத்துகிறார்கள் ..இவர்களெல்லாம் ஆசிரியர்களாகி எதை கற்றுத் தருவார்கள்.. இவர்களின் வார்த்தைகளைப் போல தானே செயல்களும் ஆசிரியர்களாகி விட்டால் பாலியல் வழக்கு, போக்சோ சட்டம் என்று அலைவார்களே தவிர பாடம் கற்றுத் தர போவதில்லை... திருந்துங்கள்..

    (உடனே என்னையும் திட்டி பின்னூட்டம் இடுங்கள். ஏனென்றால் நீங்கள் அதற்கு மட்டுமே தகுதியானவர்கள்)

    ReplyDelete
    Replies
    1. Jay avungalam mani adicha soru maasamna vatini calculation poduruvanga..apadithan peasuvanga..anpumani avarkal process therinchu elarudaiya nalanaium serthuthan peasirukirar.. atha vivaram therincha yarum purinchu eathukuvanga..athakuda puriyathavarkaluku assiriyaraagum thakuthi ila..

      Delete
    2. Avanuga appadithan sir pesuvargal yan endral avargal guna eyalbu appadi

      Delete
  25. ARUL BA second list varuma sir

    ReplyDelete
  26. Chemistry merit list is totally wrong so immediately file the case madurai high court don't argue ur self court will give correct decision

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி