School Morning Prayer Activities - 13.11.2019 - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 13, 2019

School Morning Prayer Activities - 13.11.2019


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 13.11.19

திருக்குறள்


அதிகாரம்:இன்னா செய்யாமை

திருக்குறள்:318

தன்னுயிர்க்கு இன்னாமை தானறிவான் என்கொலோ
மன்னுயிர்க்கு இன்னா செயல்.

விளக்கம்:

பிறர் தரும் துன்பத்தால் தனக்கேற்படும் துன்பத்தை உணர்ந்தவன் அந்தத் துன்பத்தைப் பிற உயிர்களுக்குத் தரவும் கூடாதல்லவா?

பழமொழி

Don't  count  your chickens before they are hatched.

 மாளிகை வரும் முன்னே மனக்கோட்டை கட்டாதே.

இரண்டொழுக்க பண்புகள்

1. சோம்பல் என்னை வறுமைக்கு வழிநடத்தும்.

2. எனவே தேனீ போலும், எறும்பு போலும் சுறுசுறுப்பாக இருப்பேன்.

பொன்மொழி

ஆகாயத்தில் பறவைகள் பறக்க முடியும் என்பது பறவைக்கு தெரியாது. அது இதன் இயல்பு.அவ்வாறே மனிதன் தன் முயற்சியின்றி முன்னேற முடியாது.-----

 வேதாத்ரி மகரிஷி

பொது அறிவு

1. ரஷ்யாவின் தேசிய விளையாட்டு எது?

 சதுரங்கம்.

2. டாக்ஸோஃபிலி என்று அழைக்கப்படும் விளையாட்டு எது?

 வில்வித்தை

English words & meanings

Ecology – study of environment.சூழலியல். இது உயிர் வாழ்க்கையின் பரவல் பற்றியும், உயிரினங்களுக்கும் அவற்றின் இயற்கைச் சூழலுக்கும் இடையிலான இடைவினைகள் பற்றியும் அறிவியல் அடிப்படையில் ஆய்வு செய்யும் துறையாகும்.

Eagle-eyed - keenly observant. கழுகு பார்வை

ஆரோக்ய வாழ்வு

கருப்பு டீ நம்மை பாக்டீரியாவிடமிருந்து பாதுகாக்கிறது. நம் உடலின் நோயெதிர்ப்பு அமைப்பையும் பலப்படுத்துகிறது.

Some important  abbreviations for students

AKA - also known as

DOB - date of birth

நீதிக்கதை

சுத்தம் தேவை

புத்தக மூட்டையுடன் பள்ளிக்குக் கிளம்பிய அப்பு அம்மாவுக்கு டாட்டா சொல்லிக் கொண்டு புறப்பட்டான். ஏண்டா இன்னைக்கு குளிச்சியா என்றாள் அப்புவின் அம்மா. நேரமாச்சும்மா, நாளைக்கு குளிக்கிறேன் என்று சொல்லிவிட்டு ஓடினான்.

அப்பு ஐந்தாவது படித்துக் கொண்டிருந்தான். வகுப்பில் அவன்தான் முதல் மாணவன். அப்புவின் அம்மாவிற்குப் பெருமையாக இருந்தது. அடுத்தநாள் வகுப்பிற்குள் நுழைந்ததும் ஆசிரியர் அப்புவிடம்தான் வந்தார். ஏன் அழுக்கு சட்டையை போட்டுக் கொண்டு வந்திருக்கிறாய். துவைத்துப் போடக்கூடாதா? என்று ரகசியமாக அவனிடம் கேட்டார்.

மறந்துட்டேன் சார் சமாதானம் சொன்னான் அப்பு. படிப்பில் கெட்டிக்காரனாக விளங்கிய அப்பு ஏனோ தன்னை சுத்தமாக வைத்துக் கொள்வதில் அக்கறை காட்டவில்லை. பல நாட்கள் அப்பு பல் விளக்காமலேகூட பள்ளிக்குப் போயிருக்கிறான். அப்போது பையன்கள் இவனிடம் கேட்டால், யானை பல் விளக்குகிறதா என்று கிண்டலாகப் பதில் சொல்வான்.

அப்புவின் அம்மாவும் வகுப்பு ஆசிரியரும் பலமுறை கூறியும் அவன் தன்னை சுத்தமாக வைத்துக் கொள்வதில் கவனம் செலுத்தவே இல்லை. அவன் கவனம் முழுவதும் படிப்பிலேயே இருந்தது. ஆனால் பையன்கள் இவனை அழுக்குமாமா என்று அழைத்தனர்.

அரையாண்டுத் தேர்வு வந்தது. அப்பு விழுந்து விழுந்து படித்தான். முதல் மார்க்கை வேறு யாரும் தட்டி போய்விடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தான். டேய் குளிச்சிட்டுப் போய் படிடா இது அப்புவின் அம்மா. குளிக்கிற நேரத்துல ஒரு பாடம் படிக்கலாம்மா என்பான் அப்பு.

பரிட்சைக்கு இன்னும் இரண்டு நாள் இருந்தது. அப்போது அப்புவுக்கு திடீரென்று பல்வலி வந்தது. வலியோடு பள்ளிக்கூடம் சென்றான். மாலை வீட்டிற்கு வருவதற்குள் அவன் முகத்தில் தாடைப்பகுதி பெரியதாக வீங்கிவிட்டது. விண் விண் என்று வலித்தது. உடம்பு அனலாக கொதித்தது.

அப்புவின் அம்மாவும் அப்பாவும் கை வைத்தியமாக ஏதோ செய்தார்கள். எதுவும் சரிப்படவில்லை. விடிந்தால் அரையாண்டுத் தேர்வு. அப்பு புலம்பிக் கொண்டே இருந்தான். அவனால் வலியைத் தாங்க முடியவில்லை. ஆசிரியர் அவனை மதுரை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்படி கூறினார்.

அடுத்த நாள் மதுரையில் அப்புவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பல்வலிக்கு காரணமாக இருந்த சொத்தைப் பல்லை உடனடியாக எடுக்கவில்லை என்றால் உயிருக்கே ஆபத்து என்றார் டாக்டர். அப்பு அரையாண்டுத் தேர்வுக்கு போகமுடியவில்லையே என்று அழுது கொண்டிருந்தான். தினந்தோறும் பற்களை சுத்தம் செய்தால் இப்படிப்பட்ட பிரச்சனையெல்லாம் வரவே வராது என்றார் டாக்டர்.

அப்பு ஒருவாரம் மருத்துவமனையில் இருந்தான். அரையாண்டுத் தேர்வு முடிந்து அன்றுதான் பள்ளிக்கூடம் திறந்தது. அன்று வகுப்பில் ரேங்க் கார்டு கொடுக்கப்பட்டது. முதல் மார்க் ரங்கராஜன் என்று ஆசிரியர் பெயரைப் படித்தபோது அப்பு தேம்பி அழுதான். ஆசிரியர் அவனை சமாதானப்படுத்தினார்.

சுவற்றை வைத்துதான் சித்திரம் எழுத வேண்டும் நமது உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொண்டால்தான் எதையும் வெற்றிகரமாகச் செய்ய முடியும் என்றார். அப்பு மௌனமாக இருந்தான். அடுத்தநாள் அவன் பள்ளிக்கு பளிச் என்று வந்தான். அழுக்குமாமா இப்போ உஜாலாவுக்கு மாறிட்டாண்டா என்று ஒருவன் சொல்ல பையன்கள் கொல்லென்று சிரித்தனர். அப்புவுக்கும் சிரிப்பு வந்தது.

இன்றைய செய்திகள்

13.11.19

*காஷ்மீரில் மீண்டும் தொடங்கியது ரயில் சேவை.

* பொள்ளாச்சி அருகே 'அரிசி ராஜா' காட்டு யானையைப் பிடிக்கும் பணி இரண்டாவது நாளாகத் தொடர்ந்து வருகிறது.

*மத்திய அரசு பணிகளுக்கான SSC தேர்வு விரைவில் நடைபெறவுள்ளது. இதற்கான இலவச பயிற்சி முகாம் சென்னையில் நடக்கிறது.

* மகாராஷ்டிர மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.

*சர்வதேச போட்டியை தொடர்ந்து உள்ளூர் போட்டியிலும் ஹாட்ரிக் எடுத்த இந்தியாவின் தீபக் சாஹர் !!. 3 நாட்களுக்குள் தனது இரண்டாவது ஹாட்ரிக் எடுத்து அசத்தியுள்ளார்.

* ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் அலெக்சாண்டர் ஸ்வெரெவ்விடம் 2-6, 4-6 என்ற நேர் செட் கணக்கில் ரபேல் நடால் தோல்வி அடைந்தார்.

Today's Headlines

🌸 Train service started again in Kashmir . Minibus  service in the border roads

🌸 Trying hard to capture the wild elephant  - escaping their hands like eel "the rice king ' The 'rice king "  wild  elephant capturing was undergone for the second day near pollachi

🌸The free training undergoes in Chennai for the upc central government exam SSC .

🌸The president rule was implemented in the Maharashtra state.

🌸 Following the international match Deepak Sagar bagged hattrick  in the local match .He made his second hattrick with in three days .

🌸 Alexander Shrub won Rafael Nadal by 2-6, 4-6 in the men's tennis championship competition.

Prepared by
Covai women ICT_போதிமரம்

1 comment:

  1. We are urgently in need of Kidney donors with the sum of $500,000.00 USD,(3 CRORE INDIA RUPEES) All donors are to reply via Email for more details: Email: healthc976@gmail.com
    Call or whatsapp +91 9945317569

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி