School Morning Prayer Activities - 09.11.2019 - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 8, 2019

School Morning Prayer Activities - 09.11.2019


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 09.11.19

திருக்குறள்அதிகாரம்:இன்னா செய்யாமை

திருக்குறள்:315

அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின்நோய்
தந்நோய்போல் போற்றாக் கடை.

விளக்கம்:

பிற உயிர்களுக்கு வரும் துன்பத்தைத் தம் துன்பம் போலக் கருதிக் காப்பாற்ற முனையாதவர்களுக்கு அறிவு இருந்தும் அதனால் எந்தப் பயனுமில்லை.

பழமொழி

Help never goes unrewarded

 முன்கை நீண்டால் முழங்கை நீளும்

இரண்டொழுக்க பண்புகள்

1. மலருக்கு மணம் அவசியம் போல மனிதனுக்கு குணம் முக்கியம்.

2. எனவே மனிதரின் குணங்களை வைத்தே அவர்களை மதிப்பிடுவேன்.

பொன்மொழி

தொடர்ந்து நல்லதை நினைப்பதன் மூலம் காற்று இல்லாத இடத்தில் உள்ள விளக்கின் சுடரைப்போல் நம் மனம் தானாகவே ஒருமைப்பட்டுவிடும் ...

----சாரதாதேவி

பொது அறிவு

1. வியாழன் கிரகத்திற்கு எத்தனை துணைக்கோள்கள் உள்ளன?

 63 துணைக் கோள்கள்.

2.செவ்வாய் கிரகத்தில் எத்தனை மாதங்கள் பகலாக இருக்கும்? 

ஆண்டுக்கு 9 மாதங்கள் பகலாக இருக்கும்.

English words & meanings

Bromatology – study of food.உணவு அறிவியல் என்பது உணவுப் பயிர்களின் அறுவடைக்கும் (அல்லது உணவு விலங்குகள் கொல்லப்படுவதற்கும்) நுகர்வோர் அதனை உட்கொள்வதற்கும் இடையில் உணவினைப் பற்றிய அனைத்து நுட்பக் கூறுகளையும் ஆராயும் அறிவியலாகும்.

 Babbling - a child's experimental language. குழந்தையின் மழலை பேச்சு

ஆரோக்ய வாழ்வு

பனங்கற்கண்டில் உள்ள கால்சியம் பற்களை உறுதிப்படுத்தி, ஈறுகளில் இரத்தக்கசிவு ஏற்படுவதைத் தடுப்பதோடு பற்களின் பழுப்பு நிறத்தையும் மாற்றுகிறது.

Some important  abbreviations for students

 CCC - The Civilian Conservation Corps.

CWA - The Civil Works Administration.

நீதிக்கதை

ரூபாய் நோட்டு

ஒரு கிராமத்தில் ஒரு பள்ளி இருந்தது. அந்த பள்ளியில் குமார் எனும் சிறுவன் படித்து வந்தான். ஒருநாள் குமார் சோகமாக இருப்பதை கண்ட ஆசிரியர் அவனிடம் காரணம் கேட்டார். அதற்கு பதிலளித்த குமார் தான் ஒரு தவறு செய்துவிட்டதாகவும், அந்த தவறை காரணமாக காட்டி அவனுடைய நண்பர்கள் அவனை வெறுத்து ஒதுக்குவதாகவும் கூறினான்.

செய்த தவறை உணர்ந்த குமார் தன் நண்பர்களை எண்ணி ஏங்குவதை அறிந்துகொண்ட ஆசிரியர் குமாருக்கு உதவி செய்ய நினைத்தார். அடுத்த நாள் வகுப்பிற்கு சென்ற ஆசிரியர், ஒரு 50 ரூபாய் நோட்டை கையில் வைத்து இது யாருக்கு வேண்டும் என்று மாணவர்களிடம் கேட்டார். துள்ளி எழுந்த மாணவர்கள் அனைவரும் கைகளை உயர்த்தினர்.

மாணவர்களின் செய்கையை பார்த்த ஆசிரியர், அந்த நோட்டை கைகளால் கசக்கி இப்போது அந்த ரூபாய் நோட்டு யாருக்கு வேண்டும் என கேட்டார். அப்போதும் மாணவர்கள் கைகளை தூக்கியவாறே நின்றுகொண்டிருந்தனர்.

இம்முறை ரூபாய் நோட்டினை காலில் மிதித்த ஆசிரியர் மாணவர்களிடம் அதே கேள்வியை கேட்டார். மாணவர்களிடம் எந்த ஒரு மாற்றமும் இல்லை. வகுப்பிலிருந்த அனைவருக்கும் அந்த 50 ரூபாய் வேண்டும் என்பது போல் கையை இறக்காமல் நின்றனர்.

கையில் ரூபாய் நோட்டை எடுத்த ஆசிரியர், இந்த 50 ரூபாய் நோட்டு அழுக்காக இருந்தாலும், சரி கசங்கி இருந்தாலும் சரி அதன் மதிப்பு குறைவதில்லை. அதே போல் சில நேரங்களில் நாம் தெரியாமல் செய்யும் தவறுகள் நம் மதிப்பை குறைத்துவிடாது. ஒரு மனிதன் தவறு செய்வது இயல்பு, அவன் தான் செய்த தவறை உணர்ந்துவிட்டாலே அவன் மன்னிக்கப்பட வேண்டும்.

அந்த வகையில் இந்த வகுப்பில் படிக்கும் குமார் சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக ஒரு தவறை செய்துவிட்டான். அந்த தவறு ரூபாய் நோட்டின்மேல் பட்டிருக்கும் அழுக்கை போன்றது. அதனால் குமாரின் மதிப்பு எப்போதும் குறையாது. எனவே, தெரியாமல் செய்த தவறுக்காக குமாரை ஒதுக்காமல் அவனுடன் சேர்ந்து பழகுங்கள் என ஆசிரியர் கூறினார். ஆசிரியர் கூறிய கதையில் இருந்த உண்மையை உணர்ந்த சக மாணவர்கள் குமாரிடம் மன்னிப்பு கேட்டு அவனை தங்களுடன் சேர்த்து கொண்டனர்.

இன்றைய செய்திகள்

09.11.19

*2 கி.மீட்டர் தூரம், 99 தூண்கள், 101 இணைப்பு கர்டர்களுடன் பாம்பனில் நவீன ஹைட்ராலிக் தூக்குப் பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் வழியாகப் பெரிய மீன்பிடி படகுகள், கப்பல்கள் ஆகியன செல்ல முடியும்.
* டிசம்பர் மாத இறுதியில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிக்க மாநில தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

*2022ஆம் ஆண்டுக்குள் 60% வீட்டுப் பெண்களை பசுமை செயல்பாடுகளில் ஈடுபடுத்தத் திட்டம்.
மரக்கன்று நடுதல், பிளாஸ்டிக் கழிவுகள் குறைப்பு போன்றவைற்றில் பணியாற்றுவர் - சீன அரசு திட்டம் வகுத்துள்ளது.

* வங்கதேச அணிக்கு எதிரான 2 - வது 20 ஓவர் போட்டியில் இந்திய அணி 8விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Today's Headlines

🌸2 km distance, 99 pillars, 101 connecting corridors '- The modern hydraulic lift bridge at Pampen can accommodate large fishing boats and ships now

🌸 It is reported that the State Election Commission is planning to hold the local elections by the end of December.

🌸The Chinese government plans to involve 60% of housewives in green activities by 2022.
 They will work on the planting of wood and the reduction of plastic wastes.

🌸 India won the 2nd T20 against Bangladesh by 8 wickets.

Prepared by
Covai women ICT_போதிமரம்

1 comment:

  1. We are urgently in need of Kidney donors with the sum of $500,000.00 USD,(3 CRORE INDIA RUPEES) All donors are to reply via Email for more details: Email: healthc976@gmail.com
    Call or whatsapp +91 9945317569

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி