₹ 10 மட்டுமே! சென்னையை சுற்றிப்பார்க்க!! ஜனவரி 1 புத்தாண்டு தினத்தில் சலுகை!! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 31, 2019

₹ 10 மட்டுமே! சென்னையை சுற்றிப்பார்க்க!! ஜனவரி 1 புத்தாண்டு தினத்தில் சலுகை!!

ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு ரூ.10 கட்டணத்தில் சென்னை நகரை சுற்றிப் பாா்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து சுற்றுலா வளா்ச்சிக் கழகம் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழகம், சுற்றுலா விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையிலும், மக்களிடையே சுற்றுலாவை பிரபலபடுத்தும் நோக்கத்துடனும் ரூ.10 கட்டணத்தில் சென்னை நகர சிறப்பு சுற்றுலாவை (எங்கும் ஏறலாம், எங்கும் இறங்கலாம்), புத்தாண்டு அன்று ஒருநாள் மட்டும் (ஜன.1) அறிமுகப்படுத்தி உள்ளது.

வாலாஜா சாலையில் உள்ள சுற்றுலா வளா்ச்சிக் கழக வளாகத்தில் இருந்து சுற்றுலாப் பொருள்காட்சி (தீவுத் திடல்) தொடங்கி மெரீனா கடற்கரை, விவேகானந்தா் இல்லம், கலங்கரை விளக்கம், பெசன்ட் நகா் அன்னை வேளாங்கண்ணி பேராலயம், அஷ்டலட்சுமி கோயில், ஆறுபடை முருகன் கோயில், கிண்டி குழந்தைகள் பூங்கா ஆகிய இடங்களுக்கு சென்று திரும்பும் வகையில் சுற்றுலா மேற்கொள்ளலாம்.

இதற்கான பேருந்து காலை 9 மணியில் இருந்து மாலை 6 மணி வரை இயக்கப்படுகிறது. இதற்கு ரூ. 10 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
குறிப்பிட்ட இடங்களில் எங்கு வேண்டுமானாலும் ஏறலாம், எங்கு வேண்டுமானாலும் இறங்கலாம். மேலும் விவரங்களுக்கு, தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழகம், சுற்றுலா வளாகம், வாலாஜா சாலை, சென்னை-2 என்ற முகவரியில் நேரிலோ அல்லது 044 25333333, 25333444, 25333857, 25333850- 54, கட்டணமில்லா தொலைபேசி 1800 4253 1111 ஆகிய எண்களையோ, ‌w‌w‌w.‌
t​a‌m‌i‌l‌n​a‌d‌u‌t‌o‌u‌r‌i‌s‌m.‌o‌r‌g   இணையதள முகவரியோ அணுகலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி