தூத்துக்குடியில் 10, 11 மற்றும் 12-ஆம் வகுப்பு அரையாண்டுத் தேர்வு வினாத்தாள்கள் கசிவு!! - kalviseithi

Dec 23, 2019

தூத்துக்குடியில் 10, 11 மற்றும் 12-ஆம் வகுப்பு அரையாண்டுத் தேர்வு வினாத்தாள்கள் கசிவு!!


தூத்துக்குடியில் 10, 11 மற்றும் 12-ஆம் வகுப்பு அரையாண்டுத் தேர்வு வினாத்தாள்கள் சமூக வலை தளங்களில் வெளியான விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இந்நிலையில், வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாக தேர்வுகளில் மாற்று வினாத்தாள்களை பயன்படுத்த உத்தரவிட்டுள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் உத்தரவிட்டுள்ளார்.

தூத்துக்குடி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், வினாத்தாள்களை உடனடியாக மாற்றி வழங்குமாறு உத்தரவிட்டு நடவடிக்கை எடுத்தார்.

அதன் அடிப்படையில், திங்கள்கிழமை நடைபெறும் அரையாண்டுத் தேர்வை முன்னிட்டு அனைத்து தேர்வு மையங்களுக்கு மாற்று வினாத்தாள்கள் வழங்கப்பட்டுள்ளதாக நாமக்கல் கல்வி அலுவலர் உஷா, நெல்லை முதன்மை கல்வி அதிகாரி பூபதி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி