15 வயதிற்கு மேற்பட்ட கல்லாதோருக்கு எழுத்தறிவித்தல் திட்டத்திற்கு வங்கி கணக்கு தொடங்குதல் தொடர்பாக முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 16, 2019

15 வயதிற்கு மேற்பட்ட கல்லாதோருக்கு எழுத்தறிவித்தல் திட்டத்திற்கு வங்கி கணக்கு தொடங்குதல் தொடர்பாக முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்!


பள்ளிக் கல்வித்துறை விருதுநகர் மாவட்டத்தில் 15 வயதிற்கு மேற்பட்ட கல்லாதோருக்கு எழுத்தறிவித்தல் திட்டப் பணியை செயல்படுத்திடும் பொருட்டு பார்வையில் காணும் அரசாணை எண் . 191ன் படி Special Adult Education Programme - Aspirational District -------- School Name என்ற பெயரில் மையம் தொடங்கப்பட்டுள்ள அனைத்து பள்ளிகளிலும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் தனியாக புதிய சேமிப்பு வங்கிக் கணக்கு எண் துவங்கப்படவும் , அக்கணக்கை பள்ளித் தலைமையாசிரியர் மற்றும் அப்பள்ளிக்குரிய ஆசிரியர் பயிற்றுநர் இணைந்த கணக்காக ( Joint Account ) பராமரிக்கவும் அறிவுறுத்தப்படுகிறது .

ஒரு ஆசிரியர் பயிற்றுநருக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட மையத்திற்கு பொறுப்பாளராக செயல்பட்டால் அப்பள்ளிகளில் பள்ளித் தலைமையாசிரியர் மற்றும் உதவி ஆசிரியர் இணைந்த கணக்காக ( Joint Account ) பராமரிக்கவும் அறிவுறுத்தப்படுகிறது . மேற்காணும் தகவல்களை தேர்ந்தெடுக்கப்பட்ட மையத்தின் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவித்து 19 . 12 . 2019க்குள் புதிய சேமிப்பு வங்கிக் கணக்கு துவங்கப்பட்டதற்கான அறிக்கை மற்றும் வங்கிக் கணக்கு புத்தகத்தின் முதல் பக்கத்தின் நகலைப் பெற்று வட்டார வளமையத்தில் பராமரிக்கவும் கேட்டுக்கொள்ளப்படுகிறது .

        - முதன்மைக் கல்வி அலுவலர்
                          விருதுநகர்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி