கல்வித்துறை இயக்குநர்கள் 18.12.2019 அன்றைய ஆய்வில் பள்ளி அளவில் தயார்நிலையில் வைத்திருக்க வேண்டியவை குறித்த முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்! - kalviseithi

Dec 17, 2019

கல்வித்துறை இயக்குநர்கள் 18.12.2019 அன்றைய ஆய்வில் பள்ளி அளவில் தயார்நிலையில் வைத்திருக்க வேண்டியவை குறித்த முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்!


தொடக்கக்கல்வி இயக்குநர் மற்றும் இணை இயக்குநர் ஆகியோர் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளை 18 . 12 . 2019 அன்று ஆய்வு செய்யவுள்ளதால் , அது சமயம் பள்ளி செயல்பாடுகள் சார்ந்த விவரங்கள் , மாணவர் இடைநிற்றல் விவரங்கள் , பள்ளி வளாக துய்மை , பாதுகாப்பு பராமரிப்பு விவரங்கள் , பிளாஸ்டிக் இல்லா பள்ளி வளாகம் ஆகியவை சார்பாக பள்ளிகளில் எடுக்கப்பட்ட நடவடிக்கை விவரங்களை தலைமையாசிரியர் ஆய்விற்கு தயார்நிலையில் வைத்திருக்க வேண்டும் என வட்டாரக்கல்வி அலுவலர்கள் சார்ந்த பள்ளிகளுக்கு அறிவுறுத்த மாவட்டக்கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் .

18 . 12 . 2019 புதன்கிழமை பிற்பகல் 2 . 00 மணியளவில் காட்பாடி , காந்திநகர் , எஸ் . எஸ் . ஏ . கூட்ட அரங்கில் நடைபெறவுள்ள இயக்குநர் மற்றும் இணை இயக்குநர் தலைமையிலான மீளாய்வுக்கூட்டத்தில் அனைத்து வட்டாரக்கல்வி அலுவலர்கள் , வட்டாரவள மைய பொறுப்பாளர்கள் ( BRC ) மற்றும் அனைத்து மாவட்டக்கல்வி அலுவலர்களும் தவறாமல் கலந்து கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் .

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி