பிளஸ் 2 முடித்தவர்கள் இலவச மடிக்கணினி பெற அவகாசம் ஜன.11 வரை நீட்டிப்பு சான்றுகளை சமர்ப்பிக்க அறிவுறுத்தல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 30, 2019

பிளஸ் 2 முடித்தவர்கள் இலவச மடிக்கணினி பெற அவகாசம் ஜன.11 வரை நீட்டிப்பு சான்றுகளை சமர்ப்பிக்க அறிவுறுத்தல்


பிளஸ் 2 முடித்தவர்கள் இலவச மடிக்கணினி பெறுவதற்கான கால அவகாசம் ஜனவரி 11-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பப்பட்ட சுற்றறிக்கை விவரம்:

2017-18 மற்றும் 2018-19-ம் ஆண்டுகளில் பிளஸ் 2 முடித்து தற்போது உயர்கல்வி பயிலும் மாணவர்கள் அதற்குரிய சான்றி தழ்களை பள்ளிகளில் சமர்ப்பித்து இலவசமடிக்கணினிகளை பெற் றுக் கொள்ள ஏற்கெனவே அறி வுறுத்தப்பட்டிருந்தது.இதற்கான அவகாசம் கடந்த டிச.16-ம் தேதியுடன் முடிந்து விட்டது. எனினும், கல்லூரிகளில் சான்றுகள் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டதால் தகுதியான மாண வர்கள் பலர் விண்ணப்பிக்க முடியவில்லை என தகவல்கள் வந்தன.இதையடுத்து மாணவர்கள் நலன்கருதி இலவச மடிக் கணினி பெறுவதற்கான கால அவகாசம் ஜனவரி 11-ம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது. இந்த காலத்துக்குள் உரிய சான்றிதழ் களை மாணவர்கள் சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர்க ளிடம் ஒப்படைத்து மடிக்கணினி களை பெற்றுக் கொள்ள வேண் டும்.மேலும், கூடுதலாக மடிக் கணினிகள் தேவைப்பட்டாலோ அல்லது மீதம் இருந்தாலோ அதன் விவரங்களை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு தலைமை ஆசிரியர்கள் தெரிவிக்க வேண்டும்.இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கல்லூரிகளில் சான்றுகள் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டதால் தகுதியான மாணவர்கள் பலர் விண்ணப்பிக்க முடியவில்லை என தகவல்கள் வந்தன.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி