2600 உபரி பட்டதாரி ஆசிரியர்களை தொடக்கப்பள்ளிகளில் பணியிறக்கம் செய்ய நடவடிக்கை - மாவட்டவாரியாக பட்டியல் தயாரிக்கும் பணி தீவிரம் ! - kalviseithi

Dec 16, 2019

2600 உபரி பட்டதாரி ஆசிரியர்களை தொடக்கப்பள்ளிகளில் பணியிறக்கம் செய்ய நடவடிக்கை - மாவட்டவாரியாக பட்டியல் தயாரிக்கும் பணி தீவிரம் !


அரசு தொடக்கப் பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கு உபரி பட்டதாரி ஆசிரியர்களை பணியிறக்கம் செய்ய கல்வித் துறை முடிவு செய்துள்ளது . தமிழக பள்ளிக்கல்வித் துறையின் கீழ் 37 , 211 அரசுப் பள்ளிகள் இயங்குகின்றன . இதில் 46 லட்சம் மாணவர்கள் படிக்கின்றனர் . இவர் களுக்கு பாடம் நடத்த 2 . 3 லட்சம் ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர் . இதற்கிடையே அனைத்துவகை ஆசிரியர்களுக் கான பணிநிரவல் , பதவி உயர்வு மற்றும் இடமாறுதல் கலந்தாய்வு கடந்த ஜுலை மற்றும் நவம்பர் மாதங்களில் நடத்தப்பட்டது . தற்போது கலந்தாய்வு முடிவில் தொடக்கக் கல்வித் துறையில் 2 , 600 வரையான இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன . இவற்றை உபரி பட்டதாரி ஆசிரியர்களை கொண்டு சமன் செய்ய கல்வித் துறை முடிவு செய்துள்ளது .

இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் கூறியதாவது : அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைவு உட்பட பல்வேறு காரணங்களால் உபரி ஆசிரியர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வரு கிறது . அதன்படி 2018 - ம் ஆண்டு ஆகஸ்ட் மாத மாணவர் சேர்க்கை யின்படி பள்ளிக்கல்வித் துறையில் 13 , 623 பட்டதாரி ஆசிரியர்கள் உபரியாக இருந்தனர் . இவற்றில் ஜுலையில் நடைபெற்ற பணி நிரவல் கலந்தாய்வு மூலம் 1 , 514 ஆசிரியர்களுக்கு இடமாறுதல் வழங்கப்பட்டது . இன்னும் 12 , 109 பட்டதாரி ஆசிரியர்கள் உபரியாக இருக் கின்றனர் . 1996 முதல் 2014 - ம் ஆண்டு வரையான காலத்தில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களில் உபரியானவர்களின் விவரப் பட்டியலை தமிழ் , ஆங்கிலம் , கணிதம் , அறிவியல் , சமூக அறிவியல் என பாடவாரியாக தயாரித்துள்ளோம் . உபரி பட்டதாரி ஆசிரியர்களுக்கு மாற்றுப்பணிகள் வழங்க ஏற்கனவே தமிழக அரசு முடிவு செய்திருந்தது . அதன் படி தொடக்கப் பள்ளிகளில் உள்ள 2 , 600 வரையான காலி பணியிடங்களுக்கு உபரி ஆசிரி யர்களை பணியிறக்கம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது . இதற்காக மாவட்ட வாரியாக தற்போது பட்டியல் தயாரிக் கும் பணிகள் தீவிரமாக நடை பெற்று வருகின்றன . குறைவான பணிக்காலத்தை கொண்ட ஆசிரியர்களுக்கு முன்னுரிமை அளித்து தேர்வு செய்யப்படுகின்ற னர் . அதிக தூரத்துக்கு பணி மாறுதல் வழங்குவதைத் தவிர்க்க முடிவு செய்துள்ளோம் . முடிந்த வரை தற்போது பணிபுரியும் மாவட்டத்துக்குள்ளோ அல்லது அருகில் உள்ள மாவட்டங்க ளுக்கோ ஆசிரியர்கள் மாறுதல் செய்யப்படுவார்கள் . முதன்மை கல்வி அதிகாரிகள் மூலம் மாவட்ட அளவில் படிப்படியாக இந்த பணிகள் மேற்கொள்ளப்படும் . பணியிறக்கப்படும் ஆசிரியர் கள் 4 , 5 - ம் வகுப்புகளுக்கு மட்டும் பாடம் நடத்த அனுமதிக்கப்படுவர் . அவர்களின் ஊதியம் உட்பட பணிநிலையில் எந்த மாற்றமும் இருக்காது . மீதமுள்ளவர்களை குறைவான ஆசிரியர் உள்ள பள்ளி களுக்கு சிறப்பு பணியில் அனுப்பு தல் , துறை அலுவல் வேலை களுக்கு பயன்படுத்துதல் போன்ற மாற்றுப்பணிகள் வழங்க பரிசீ லனை செய்யப்பட்டு வருகிறது .

இவ்வாறு அவர்கள் கூறினர் .

12 comments:

 1. 2017 tet candidate posting irukka illiya please sollunga sir

  ReplyDelete
 2. தனியார்பள்ளிகளை வைத்து நடத்திக்கொண்டிருப்பபவர்களின் கைககளில் 50ஆண்டுகளாக மக்கள் அதிகாரத்தைக் கொடுத்தார்கள். தனியார்பள்ளிகள் தெருவிற்குத் தெரு பெருக்கெடுத்துவிட்டது. தற்பொழுது தனியார் முதலாளிகள் என்ன கட்டணம் நிர்னயக்கிறார்களோ அதை மக்கள் செலுத்தித்தானாகவேண்டும்.தனியார்பள்ளிகளின் பின்னே அரசுப்பள்ளிகள் செல்லும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. Lkg ukg நம்தட்பவெட்ப நிலைக்குப்பொருத்தமே இல்லாத காலணி என்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம்.நீதிபோதனை பாடவேளை தவிர்க்கப்பட்டு மாணவனின் மதிப்பீடு மதிப்பெண் என்றாகிவிட்டது. ஒழுக்கம் சீரழிந்துவிட்டது. ஒழுக்கத்தைப் போதிக்கும் ஆசிரியர்களே ஒருசிலர் தகுதியற்றவர்களாக உள்ளார்கள். அடுக்கிக்கொண்டே செல்லலாம்.தவறுகளை.
  வாக்குச்சீட்டில் இருந்து நேர்மை தொடங்கினால் தவிர வேறுவழியில்லை. நம் சமுதாயம் சீரழிந்துகொண்டு இருக்கிறது என்பதுமட்டும் நிதர்சனம்.

  ReplyDelete
 3. apdinaa yenna mayiruku TET exam 2017,2019 intha year conduct pannenga da.

  ReplyDelete
  Replies
  1. Antha 500 vachu thaan salary kodukkuranga boss

   Delete
 4. election ku vote kettu vaanga da. serupu pinjurum.

  ReplyDelete
 5. indha govt ku vote podadhinge bro.....

  ReplyDelete
 6. Aiyaiyo...BE pattatharikaluku
  Posting podaranniga
  Yangalapola avangalukum pabbava🤭🤭🤭

  ReplyDelete
 7. இந்த அரசு இரண்டாவது முறையாக வெற்றி பெற,அரசு ஊழியர், ஆசிரியர் களும் ஒரு முக்கிய காரணம்,ஆம்! நிஜமாகவே கடந்த சட்ட மன்ற தேர்தலில் புரட்சி தலைவி யின் வாக்குறுதியை நம்பி ஆசிரியர்களும் அவர்களது சொந்த பந்தங்கள் அதிமுக க்கு வாக்களித்தது உண்மை...

  ReplyDelete
 8. Yella teachers vaitherichalayum kutikariga andha amma irudha kuda ivlo panirukadhu teachers ah ipadi pandraga andha amma nambi second time vote potu part time teachers vaithula adichiga ipo naga nagayum job Theda mudiyadha sulnilai velai vittu pogavum mudiyama irukom.ipo regular techersku nega kudukara torture pandriga indha time india vey support panalum Tamilnadu ungaluku illa .puriyaravagaluku puriyum.

  ReplyDelete
 9. padichavana education minsteraah podungadaa kenakoo...ingalaa

  ReplyDelete
 10. தமிழக வரலாற்றில் இனி BT appointment, Promotion எப்பவுமே கிடையாது கோவிந்தா கோ......விந்தா?????!!!!

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி