ஜன 3ம் தேதி விடுமுறை அளிப்பது குறித்து , சூழ்நிலைக்கு ஏற்ப முடிவெடுத்துக்கொள்ளலாம் - கல்வித்துறை! - kalviseithi

Dec 29, 2019

ஜன 3ம் தேதி விடுமுறை அளிப்பது குறித்து , சூழ்நிலைக்கு ஏற்ப முடிவெடுத்துக்கொள்ளலாம் - கல்வித்துறை!வாக்கு எண்ணும் மையம் அமைக்கப் பட்டுள்ள அரசு பள்ளிகளுக்கு 3ம் தேதி விடுமுறை அளிப்பது குறித்து , சூழ்நி லைக்கு ஏற்ப முடிவெடுத்துக்கொள்ள அறிவுறுத்தப் பட்டுள்ளது .

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புக ளில் உள்ள பதவிகளுக் கான முதற்கட்ட தேர்தல் நேற்று முன்தினம் நடை பெற்றது . சேலம் மாவட் டத்தை பொறுத்தவரை 12 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 2 , 142 பதவிகளுக்கு முதற்கட்ட தேர்தல் நடந்து முடிந்துள்ளது . இரண்டாம் கட்டமாக நாளை ( 30ம் தேதி ) 8 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 1 , 754பதவிகளுக்குதேர் தல் நடக்கிறது . தேர்தலில் பதிவாகும் வாக்குகள் வரும் 2ம் தேதி எண்ணப்படுகின் றன .

இதற்கென மாவட்டம் முழுவதும் 20 வாக்கு எண் ணும் மையங்கள் அமைக் கப்பட்டுள்ளன . இவற்றில் , வீரபாண்டி ஒன்றியத்திற்கு பெருமாகவுண்டம்பட்டி அரசு ஆண்கள் பள்ளியி லும் , பனமரத்துப்பட்டிக்கு மல்லூர் அரசு ஆண்கள் மாதிரிப்பள்ளியிலும் , ஏற் காட்டிற்கு அங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளியிலும் , பெத்தநாயக்கன்பாளையம் ஒன்றியத்திற்கு அரசு ஆண் கள் பள்ளியிலும் வாக்கு எண்ணும் மையம் அமைக் கப்பட்டுள்ளது . இதேபோல் , ஆத்தூர் ஒன்றியத்திற்கு அரசு பெண் கள் மேல்நிலைப்பள்ளியி லும் , கெங்கவல்லிக்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள் ளியிலும் , சங்ககிரி ஒன்றி யத்திற்கு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும் , இடைப்பாடிக்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும் , கொங்கணாபுரத்திற்கு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும் , மகுடஞ்சாவடி ஒன்றியத் திற்கு அங்குள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும் வாக்கு எண்ணும் மையம் அமைக்கப்பட்டுள் ளது . இதனிடையே அரையாண்டு தேர்வு விடுமுறை முடிந்து வரும் 3ம் தேதி பள் ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது .

ஆனால் , மேற்கண்ட பள் ளிகளில் 2ம் தேதி தொடங் கும் வாக்கு எண்ணிக்கை , 3ம் தேதியும் தொடரவாய்ப் புள்ளது . இதனால் , திட்ட மிட்டபடி பள்ளிகள் திறக் கப்படுமா என்ற குழப்பம் ஏற்பட்டது . இந்நிலையில் , 2வது நாளாகவாக்கு எண்ணிக்கை தொடரும் பட்சத்தில் , சம் பந்தப்பட்ட பள்ளிகளுக்கு மட்டும் 3ம் தேதி விடுமுறை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது . மேலும் , சூழ்நிலையை பொருத்து முடிவெடுத்து , விடுமுறை விட பள்ளிதலைமை ஆசிரியர்களுக்கு , கல்வித்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர் .

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி