விடுமுறை அவசர செய்தி : புதிய Biometric வருகையினை 30.12.2019க்குள் நடைமுறைபடுத்த வேண்டும் - பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள்! ( New RD Service Driver Installation Guide Added ) - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 26, 2019

விடுமுறை அவசர செய்தி : புதிய Biometric வருகையினை 30.12.2019க்குள் நடைமுறைபடுத்த வேண்டும் - பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள்! ( New RD Service Driver Installation Guide Added )


RD serivce Driver uninstall செய்துவிட்டு புதிய RD Service Driver install செய்து 30.12.2019க்குள் புதிய Biometric வருகை நடைமுறைபடுத்த வேண்டும். Biometric சார்ந்த பள்ளிக் கல்வி இணை  இயக்குநரின் செயல்முறைகள்..!

Biometrics - RD Service Driver Installation Guide - Download here...

அரசு / அரசு உதவிபெறும் நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் சார்நிலை அலுவலகங்களில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களுக்கு ஆதார் எண் இணைந்த தொட்டுணர் கருவி மூலமா வருகைப் பதிவேடு முறைமை ( AEBAS - Aadhaar Enabled Biometric Attendance System ) நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது . பார்வை 2ல் காண் சென்னை 90 , தேசிய தகவலியல் மைய கடிதத்தில் UIDAI Certificate used to encrypt PID block in Authentication request is going to expire by 30 " December 2019 என தெரிவிக்கப்பட்டுள்ளது .

எனவே சென்னை 6 , சிந்தாதிரிப்பேட்டை , ஐ போக்கஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் ( Startek FM 220 Model ) மற்றும் அகமதாபாத் , மந்த்ரா சாப்ட் டெக் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனங்களிடமிருந்து ( Iris Scanner and MFS 100 Fingerprint Device ) கொள்முதல் செய்யப்பட்ட ஆதார் எண் இணைந்த தொட்டுணர் கருவிகள் மற்றும் ஐரிஸ் ஸ்கேனர் கருவிகள் மூலம் அனைத்து அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளிலும் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களின் வருகை பதிவு மேற்கொள்ளப்பட்டு வருகிறது . 30 . 12 . 2019 அன்றுடன் மேற்கண்ட கருவிகளுக்கான UIDAI நிறுவனத்தாரால் வழங்கப்பட்டுள்ள RD Service காலாவதியாவதால் 31 . 12 . 2019 முதல் தொட்டுணர் கருவிகள் மூலம் வருகைப் பதிவு செய்ய இயலாத நிலை ஏற்படும் என்பதால் , இன்று ( 25 . 12 . 2019 ) மின்னஞ்சல்கள் மூலம் அனுப்பப்பட்டுள்ள விவரங்களை பின்பற்றி அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள் தத்தமது ஆளுகைக்குட்பட்ட கல்வி அலுவலகங்கள் / அரசு / அரசு உதவிபெறும் நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் தொட்டுணர் கருவியுடன் இணைக்கப்பட்டுள்ள கணினி அல்லது மடி கணினியில் ஏற்கனவே உள்ள RD Service Driverஐ மட்டும் நீக்கம் செய்துவிட்டு ( Uninstall ) New RD Service Driverஐ ( install ) உட்புகுத்தி தொடர்ந்து தொட்டுணர் கருவிகள் மூலமான வருகை பதிவினை மேற்கொள்ள உரிய நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் .

தேசிய தகவலியல் மையத்திடமிருந்து பெறப்பட்டுள்ள மின்னஞ்சலை அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு இவ்வியக்ககத்தின் மூலம் அனுப்பப்பட்டுள்ளது அதனை பின்பற்றியும் , மேலும் New RD Service Driverஐ உள்ளீடு செய்வதில் ஏதேனும் தெளிவுரை வேண்டப்பட்டால் மந்த்ரா நிறுவனம் மற்றும் ஐ போக்கஸ் நிறுவனங்களை தொடர்பு கொண்டு இப்பணியினை உடன் முடிக்குமாறும் மற்றும் பணிநிலைக்கு கொண்டுவரப்பட்ட அறிக்கையினை இவ்வியக்கக இணை இயக்குநர் ( தொழிற்கல்வி ) அவர்களுக்கு தபால் மூலமாகவும் மின்னஞ்சல் மூலமாகவும் அனுப்பி வைக்குமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறத்தப்படுகிறது .

தற்போது பள்ளிகள் விடுமுறையில் இருப்பினும் அவசரம் கருதி அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் போர்கால அடிப்படையில் தனி கவனம் செலுத்தி தத்தமது மாவட்டத்தில் பயிற்சி பெற்றுள்ள அனைத்து KRPகளை கொண்டும் இப்பணியினை விரைந்து முடிக்குமாறும் அறிவுறுத்தப்படுகிறது .


No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி