ஊதிய முரண்பாடுகளை களைய புதிய குழுவா? சித்திக் ஒருநபர் குழு அறிக்கை என்னவாயிற்று? ஆசிரியர்கள் அதிருப்தி!! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 16, 2019

ஊதிய முரண்பாடுகளை களைய புதிய குழுவா? சித்திக் ஒருநபர் குழு அறிக்கை என்னவாயிற்று? ஆசிரியர்கள் அதிருப்தி!!


அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, ஏழாவதுஊதியக்குழு பரிந்துரைப்படி, ஊதிய உயர்வு வழங்கப்பட்டது. இதில், முரண்பாடுகள் இருப்பதாக, குற்றச்சாட்டு எழுந்தது. ஊதிய முரண்பாடுகளை களையவலியுறுத்தி, அரசு ஊழியர் சங்கங்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்கள், போராட்டங்களை நடத்தின.

இதையடுத்து, ஊதிய உயர்வில் உள்ள, குறைபாடுகளை களைவதற்காக, நிதித்துறை செலவினங்கள் முதன்மை செயலர் சித்திக் தலைமையில், ஒரு நபர் குழுவை, தமிழக அரசு நியமித்தது.இக்குழு, அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் அவர்களது சங்கப் பிரதிநிதிகளை அழைத்து பேசியது; அவர்கள் அளித்த, கோரிக்கை மனுக்களை பரிசீலித்தது.

ஜனவரி 5 ஆம் தேதி

குழுத் தலைவரான சித்திக், ஒரு நபர் குழு அறிக்கையை, முதல்வர் பழனிசாமியிடம் வழங்கினார். ஆனால் இன்றுவரை அந்த அறக்கை என்ன ஆனது என்பது தெரியவில்லை. தற்போது புதிதாக ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் ஒரு குழு அமைத்து என்ன பயன் என்று ஆசிரியர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

1 comment:

  1. Part time teachers ku salary pathi adhila arikai iruku avagala permanent panavum sila instructions solirudhaga adha avoid pana inum nera teachers salugaigala panama iruka again ipadi pandraga.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி