அங்கன்வாடி குழந்தைகளுக்கு வண்ண சீருடைகள் - kalviseithi

Dec 10, 2019

அங்கன்வாடி குழந்தைகளுக்கு வண்ண சீருடைகள்


அங்கன்வாடி மையங்களுக்கு வருகை தரும் குழந்தைகளை, அவர்களின் பெற்றோர் தினமும் அனுப்புவதை ஊக்கப்படுத்த, ஒவ்வொரு குழந்தைக்கும், இரண்டு வண்ண சீருடைகள் வழங்கப் படுகின்றன.

ஆண் குழந்தைகளுக்கு, டிரவுசர், சட்டை; பெண் குழந்தைகளுக்கு, 'பிராக்' வழங்கப்படுகிறது.இந்த திட்டம், 17 மாவட்டங்களில், தற்போது செயல்படுத்தப்படுகிறது.

இம்மாவட்டங்களில், 243 ஒன்றியங்களில் உள்ள அங்கன்வாடி மையங்களுக்கு வரும், 6.25 லட்சம் ஆண் குழந்தைகள், 5.98 லட்சம் பெண் குழந்தைகள் என, மொத்தம், 12.23 லட்சம் குழந்தைகளுக்கு, இந்த ஆண்டு வண்ண சீருடை வழங்கப்பட உள்ளது.இதற்காக, 16.04 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, இலவச வண்ண சீருடை வழங்க டெண்டர் கோரப்பட்டுள்ளது. டெண்டருக்கு விண்ணப்பிக்க, வரும், 30ம் தேதி கடைசி நாள்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி