தகுதித் தேர்ச்சி பெறாதோர் பணி நீக்கமா? ஆசிரியர்களின் அச்சத்தை நீக்க வேண்டும்! - kalviseithi

Dec 21, 2019

தகுதித் தேர்ச்சி பெறாதோர் பணி நீக்கமா? ஆசிரியர்களின் அச்சத்தை நீக்க வேண்டும்!


ராமதாஸ் அவர்களின்
                          ---      --அறிக்கை--

தமிழ்நாட்டில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களில் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறாத 1757 பேரின் விவரங்களை சேகரித்து தாக்கல் செய்ய வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை ஆணையிட்டிருக்கிறது. இந்தக் கணக்கெடுப்பு ஆசிரியர்களிடையே ஒருவித பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் பிறப்பித்த ஆணையின் அடிப்படையில் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறாத 1757 ஆசிரியர்களும் எந்த மாவட்டத்தில், எந்த பள்ளியில் பணியாற்றுகின்றனர். அவர்கள் பணியாற்றும் பள்ளிகள் சிறுபான்மையினருக்கான பள்ளியா? சிறுபான்மையினர் அல்லாத பள்ளியா?  அந்த ஆசிரியர்கள் எந்தப் பாடத்தை நடத்துகின்றனர்? அவர்கள் பணியில் சேர்ந்த நாள் என்ன? என்பது உள்ளிட்ட விவரங்கள் கடந்த சில நாட்களாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்கள்  மூலம் சேகரிக்கப்பட்டு பள்ளிக்கல்வி இயக்குநரிடம் நேற்று தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.

அனைவருக்கும் கல்வி இயக்க விதிகளின்படி அறிமுகம் செய்யப்பட்ட ஆசிரியர் தகுதித் தேர்வில்  வெற்றி பெறாத ஆசிரியர்கள் பணிநீக்கம் செய்யப்படலாம் என்ற நிலை கடந்த சில ஆண்டுகளாக நிலவி வருவதால், தங்களை உடனடியாக பணி நீக்கம் செய்து விடுவார்களோ என்ற அச்சம் அந்த ஆசிரியர்களிடம் ஏற்பட்டிருக்கிறது. அந்த அச்சம் தேவையற்றது என்றாலும் கூட, அவர்களின் பார்வையில் பார்க்கும் போது தாங்கள் பணி நீக்கம் செய்யப்படுவோமோ என்ற ஆசிரியர்களின் அச்சத்தில் நியாயம் உள்ளது.

ஏனெனில், இந்தியாவில் கல்வி பெறும் உரிமைச் சட்டம் கடந்த 2009 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. அந்தச் சட்டத்தின்படி விதிகள் வகுக்கப்பட்டு 2010 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 23 ஆம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்பட்டது. அதன்பின்னர் ஓராண்டு கழித்து 2011 ஆம் ஆண்டு நவம்பர் 15 ஆம் தேதி தான் தமிழகத்தில் இந்த சட்டம் நடைமுறைக்கு வந்தது. இந்த சட்டத்தின்படி ஆசிரியர்களாக நியமிக்கப்படுவோர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது கட்டாயம் ஆகும். கல்வி உரிமைச் சட்டம் தேசிய அளவில் நடைமுறைப்படுத்தப்பட்டதற்கும், தமிழக அளவில் அறிமுகப்படுத்தப்பட்டதற்கும் இடைப்பட்ட காலத்தில் தமிழகத்தில் ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டவர்கள் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் என்பதால், அவர்கள் தமிழகத்தில் கல்வி உரிமைச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட நாளில் இருந்து 5 ஆண்டுகளுக்குள், அதாவது 2016ஆம் ஆண்டு நவம்பர் 15 ஆம் தேதிக்குள் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்; இல்லாவிட்டால் அவர்கள் பணி நீக்கம் செய்யப்படுவர் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அது தான் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களின் அச்சத்திற்கு காரணம் ஆகும்.

அதேநேரத்தில், தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களை பணி நீக்கம் செய்யும் தமிழக அரசின் முடிவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருக்கிறது. அவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள், தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களை பணிநீக்கம் செய்ய இடைக்காலத் தடை விதித்திருப்பதுடன், அவர்களுக்கு தொடர்ந்து ஊதியம் வழங்க வேண்டும் என்றும் ஆணையிட்டுள்ளனர். அந்த வழக்கில் தீர்ப்பு வரும் வரை ஆசிரியர்களை பணி நீக்கம் செய்ய முடியாது. அதனால், தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களை பணி நீக்க முடியாது. அதனால் அவர்களின் அச்சம் தேவையற்றது.

மற்றொருபுறம், இப்போது எந்தத் தேவையும் இல்லாமல் இத்தகைய கணக்கெடுப்பை தமிழக அரசு  எடுப்பது ஏன்? என்ற வினாவும் எழுகிறது. பள்ளிக்கல்வித் துறையின் கணக்கெடுப்பால் தான் ஆசிரியர்களிடம்  ஒரு விதமான பதற்றமும், அச்சமும் நிலவுகிறது. எனவே, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களை பணி நீக்கும் நோக்கம் இக்கணக்கெடுப்பின் பின்னணியில் இல்லை என்ற உண்மையை விளக்கி ஆசிரியர்களிடம் நிலவும் அச்சத்தை அரசு போக்க வேண்டும்.

அதுமட்டுமின்றி, கடந்த 8 ஆண்டுகளில் 16 முறை ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால், 5 முறை மட்டுமே தகுதித் தேர்வு நடத்தப்பட்டதும் 1757 ஆசிரியர்கள் தகுதித் தேர்வில் வெற்றி பெற முடியாததற்கு காரணம் ஆகும். இதைக் கருத்தில் கொண்டு வேறு வகையில் அவர்களின் கற்பித்தல் திறனை மதிப்பீடு செய்து 1757 ஆசிரியர்களும் பணியில் நீடிப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும்.

4 comments:

 1. Political Fraud. No cuts to question against government for TET passed candidates. Now you support these kind of unqualified teachers.

  ReplyDelete
 2. Dei posting Eppa thanda poduveenga 7 years waste achu

  ReplyDelete
 3. அரசு படித்துவிட்டு திரியும் யாருக்கும் வேலை வழங்கப்போவதில்லை. டெட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்பது கட்டாயம். ஆனால் இவர்களுக்கு வேலை வாய்ப்பும் வழங்கிவிடக் கூடாது. இவர்கள் படித்துக் கொண்டே இருக்க வேண்டும். தேர்ச்சி பெற்றுக் கொண்டே இருக்க வேண்டும். அப்படியே வேலை கொடுத்தாலும் 7000 மற்றும் 8000 ரூபாய் சம்பளத்தில் கொடுக்க வேண்டும். இன்னும் மத்திய அரசு வழிகாட்டுதலின்படி அனைத்து பணியிடங்களும் குறைக்கப்பட்டு வேலைவாய்ப்பே வழங்கமுடியாத சூழல் ஏற்பட்டு வருகிறது. படித்தவர்கள் எங்கே செல்வது? தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு என்னதான் வழி? தனியார் பள்ளிகளிலும் உரிய வாய்ப்பும் கிடையாது? அப்புறம் எதற்கு தகுதித் தேர்வு எழுதிக் கொண்டே இருக்க வேண்டும்? 2013 -ல் தேர்ச்சிபெற்று தற்போது அது ஏழாண்டுகளில் காலாவதி ஆகப் போகிறது. இதற்காக எவ்வளவு கஷ்டப்பட்டு படித்து என்ன பிரயோஜனம்? இப்படி உள்ள சூழ்நிலையில் இப்போது பணிபுரிந்து கொண்டிருப்போரின் வயிற்றில் அடிப்பதும் பாவமே! படித்தவர்கள் சிந்திக்க வேண்டும். ஏற்கனவே பி.எட் கல்லூரிகள் பொறியியல் கல்லூரிகள் அதிகமாகத் திறக்கப்பட்டு கல்லூரிகளை நடத்தியவர்கள் நன்றாக இருக்கிறார்கள். லட்சக்கணக்கானோர் வேலைவாய்ப்பின்றி தவித்து வருகிறார்கள். இந்த நிலையில் வேலைவாய்ப்பு என்பதையே இல்லாமல் செய்து கொண்டிருக்கும் நிலையை மாற்றவும் அரசு முன்வரவேண்டும். நிறைய ஏழைக்குடும்பங்கள் இப்படி அரசு வேலைவாய்ப்பு மூலம் தான் நடுத்தர நிலைக்கு உயர்கிறார்கள். இப்படி வேலைவாய்ப்பு என்பது மறுக்கப்பட்டால் இன்னும் கீழ்நிலைக்குத் தான் செல்ல வேண்டும். தயவு செய்து தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றோருக்கு வாழ்வளியுங்கள். அனைத்து பணியிடங்களையும் நிரப்புங்கள். அதை குறைத்து விடாதீர்கள் என்பதை கோரிக்கையாக வைக்கின்றோம். செவிசாய்க்குமா அரசு???????????????????

  ReplyDelete
 4. Very Good because we want posting other wise gov will give amount for us 7 years waiting ++ each year will give 10,00000

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி