மருத்துவ தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு - kalviseithi

Dec 27, 2019

மருத்துவ தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு


மருத்துவ பல்கலைக்கழக தேர்வுக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்க மாணவர்களுக்கு அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகம் நேற்று வெளி யிட்ட செய்திக்குறிப்பு:2020-ம் ஆண்டு பிப்ரவரியில் மருத்துவ பல்கலைக்கழக தேர்வு நடக்கவுள்ளது. தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள், தங்களின் விண்ணப்பங்களை சமர்ப்பிப்பது குறித்த அட்டவணை பல்கலை. இணையதளத்தில் கடந்த 3-ம் தேதி வெளியிடப்பட்டது.

இந்நிலையில், கிறிஸ்துமஸ் மற்றும் உள்ளாட்சி தேர்தல் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதால், தேர்வுக்கு அபராத தொகை இல்லாமல் விண்ணப்பம் அளிக்க ஜனவரி 7-ம் தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. தேர்வு குறித்து மேலும்கூடுதல் விவரங்களை www.tnmgrmu.ac.in என்ற பல்கலைக்கழக இணைய தளத்தில் காணலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி