ஜியோ, பார்தி ஏர்டெல், வோடபோன் நிறுவனங்கள், மொபைல் போன் சேவைக் கட்டணத்தை உயர்த்தியுள்ளன!! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 2, 2019

ஜியோ, பார்தி ஏர்டெல், வோடபோன் நிறுவனங்கள், மொபைல் போன் சேவைக் கட்டணத்தை உயர்த்தியுள்ளன!!


ஜியோ, பார்தி ஏர்டெல், வோடபோன் நிறுவனங்கள், மொபைல் போன் சேவைக் கட்டணத்தை உயர்த்தியுள்ளன. நாளை(டிச.,3) முதல், புதிய திட்டங்களுக்கான கட்டணம் அமலுக்கு வரும் என, வோடபோன், பார்தி ஏர்டெல் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

ஜியோ நிறுவனத்தின் கட்டண உயர்வு, 6 ல் அமலுக்கு வருகிறது. பார்தி ஏர்டெல் நிறுவனம், புதிய திட்டங்களில், 'அன்லிமிடெட்' பிரிவில், 28 நாள், 84 நாள் மற்றும் 365 நாட்களுக்கான கட்டணத்தை, 41 சதவீதம் உயர்த்தியுள்ளது. 

அதன்படி, 84 நாட்களுக்கு, தினம், 1.5 ஜி.பி., டேட்டாவுடன், நேர வரம்பின்றி பேசும் திட்டத்திற்கான கட்டணம், 31 சதவீதம் உயர்ந்து, 458லிருந்து, 598 ரூபாயாக அதிகரித்துள்ளது. அதுபோல, தினம், 1.5 ஜி.பி., டேட்டா திட்டத்திற்கான கட்டணம், 25 சதவீதம் உயர்த்தப்பட்டு, 199லிருந்து, 248 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

வோடபோன், ஏர்டெல் நிறுவனங்கள், தொலைதொடர்பு இணைப்பை தக்க வைத்துக் கொள்வதற்கான குறைந்தபட்ச கட்டணத்தை, 49 ரூபாயாக உயர்த்தியுள்ளன. அத்துடன், ஜியோவை பின்பற்றி, இதர தொலைதொடர்பு நிறுவன வாடிக்கையாளருடன் பேச, புதிதாக நேர வரம்பு நிர்ணயித்துள்ளன. நிர்ணயிக்கப்பட்ட வரம்புக்கு மேலாக பேசினால், நிமிடத்திற்கு, 6 காசுகள் வசூலிக்கப்படும்.

ஜியோ நிறுவனமும், தொலைதொடர்பு சேவை கட்டணத்தை, 40 சதவீதம் வரை உயர்த்தி உள்ளது. அதேசமயம், 'பிற நிறுவனங்களை விட, கூடுதல் பயன்கள் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும்' என, ஜியோ தெரிவித்துள்ளது. 

இந்நிறுவனத்தின் கட்டண உயர்வு, 6ல் அமலுக்கு வருகிறது.தனியார் நிறுவனங்களை பின்பற்றி, பொதுத் துறையைச் சேர்ந்த, பி.எஸ்.என்.எல்., நிறுவனமும் தொலைதொடர்பு சேவைக் கட்டணத்தை உயர்த்தும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி