மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி - தோல்பாவைக் கூத்து!! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 2, 2019

மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி - தோல்பாவைக் கூத்து!!



*தோல்பாவைக்கூத்து*


கொண்டபெத்தான் நடுநிலைப்பள்ளியில் தமிழ் மன்றத்தின் சார்பாக தமிழர்களின் பாராம்பரிய கலையான தோல்பாவைக்கூத்து தலைமையாசிரியர் தென்னவன் தலைமையில் நடைபெற்றது.

ஆசிரியர் பீட்டர் வரவேற்றார். ஆசிரியை விஜயலட்சுமி முன்னிலை வகித்தார். தமிழக அரசின் *கலைமாமணி* விருது பெற்ற முத்து லட்சுமணராவ் குழுவினர் *தூய்மை இந்தியா, நெகிழி தவிர்ப்பு, மரம் வளர்ப்பு, இயற்கை பாதுகாப்பு, நீர் மேலாண்மை, மழைநீர் சேகரிப்பு* முதலியன பற்றி தோல்பாவைகள் மூலம் கூத்து நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

 முத்துலட்சுமணராவ் கூறுகையில், " தமிழர்களின் பாராம்பரிய கலையான தோல்பாவைக்கூத்து அழிந்து வருகிறது. இளைய தலைமுறையனரிடம் கலை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்" என்றார்.

தலைமையாசிரியர் தென்னவன் பேசுகையில், "சுதந்திரத்திற்கு முன்பு சுதந்திரத்திற்கான போராட்டத்தில் தோல்பாவை கூத்து முக்கிய பங்கு வகித்தது. தற்போது அக்கலையை மீட்டெடுக்கவும் மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவது மட்டுமின்றி இன்றைய சூழலுக்கு தேவையான நீர் மேலாண்மை, தூய்மை இந்தியா, இயற்கை பாதுகாப்பு,  சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மரம் வளர்ப்பு முதலியன பற்றி தோல் பொம்மைகள் மூலம் கதைகளாக கூறுவது குழந்தைகள் மனதில் ஆழப்பதிந்து நடத்தை மாற்றம் ஏற்படுகிறது என்றார்.

விழாவிற்கான ஏற்பாடுகளை ஆசிரியர்கள் கலகல வகுப்பறை சிவா, உமா, நாகசுதா, ராமலட்சுமி ஆகியோர் செய்திருந்தனர். விழாவில் மலேசியா நாட்டை சார்ந்த தலைமையாசிரியர்கள் ஆந்திரா காந்தி, கிருஷ்ணன், நாகராஜ் மற்றும் பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். ஆசிரியை சுகிமாலா நன்றி கூறினார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி