அரசு பள்ளி மாணவர்களுக்கு அமெரிக்க நிறுவனம் ‘நீட்’ தேர்வு பயிற்சி அளிக்கிறது அமைச்சர் செங்கோட்டையன் தகவல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 8, 2019

அரசு பள்ளி மாணவர்களுக்கு அமெரிக்க நிறுவனம் ‘நீட்’ தேர்வு பயிற்சி அளிக்கிறது அமைச்சர் செங்கோட்டையன் தகவல்


அரசு பள்ளி மாணவர்களுக்கு அமெரிக்க நிறுவனம் ‘நீட்’ தேர்வுக்கு பயிற்சி அளிக்கும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

மருத்துவ படிப்பில் சேருவதற்கான ‘நீட்’ தேர்வில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் தேர்ச்சி பெற வேண்டும் என்ற நோக்கில் தமிழகம் முழுவதும் 412 ‘நீட்’ பயிற்சி மையங்கள் கடந்த 2017-ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டன. இங்கு தமிழிலும், ஆங்கிலத்திலும் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன.இந்த மையங்களில் கடந்த கல்வியாண்டு 19,355 பேர் பங்கு பெற்றனர். முதல் 2 ஆண்டுகள் இதற்கான பயிற்சி வகுப்புகளை ‘ஸ்பீடு’ என்ற நிறுவனம் நடத்தி வந்தது. நடப்பு கல்வியாண்டுக்கான (2019-20) பயிற்சி வகுப்பு கடந்த செப்டம்பர் மாதம் தொடங்கியது. ராஜஸ்தானை சேர்ந்த‘ஈடூஸ் இந்தியா’ என்ற நிறுவனம் ஆசிரியர்களுக்கு சிறப்புபயிற்சி அளித்து நடத்தி வருகிறது.

இந்த நிலையில் அமெரிக்காவை சேர்ந்த ஒரு நிறுவனம் ‘நீட்’ தேர்வுக்கு பயிற்சி அளிக்க இருப்பதாக பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்து இருக்கிறார்.இதுகுறித்து அவர் டுவிட்டர் பக்கத்தில், ‘மாணவர்களுக்கு ‘நீட்’ தேர்வுக்கான இலவச பயிற்சி அளிப்பதற்காக ஒரு வாரத்துக்குள் அமெரிக்க நிறுவனத்தினர் வருகை தர உள்ளனர். சிறந்த முறையில் ‘நீட்’ தேர்வுக்கு பயிற்சி அளிப்பதற்கான ஒப்பந்தம் ஒரு வாரத்துக்குள் நிறைவேற்றப்பட இருக்கிறது’ என்றார்.ஏற்கனவே பயிற்சி அளிக்கும் ராஜஸ்தான் நிறுவனத்துடன் அமெரிக்க நிறுவனமும் சேர்ந்து பயிற்சி அளிப்பார்கள் என்று கல்வித்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து கல்வியாளர் நெடுஞ்செழியன் கூறுகையில், ‘பயிற்சி மையமே தேவையற்ற ஒன்று தான். இதில் அமெரிக்க நிறுவனத்தை கொண்டு வருவதில் எந்த பயனும் இல்லை’ என்றார்.

18 comments:

  1. கேக்கிறவன் கேனையனா இருந்தா எருமைமாடு எகிப்து ல ஏரோபிளான் ஓட்டுதாம்.

    ReplyDelete
  2. மங்குனி அமைச்சரே !

    ReplyDelete
  3. மங்குனி அமைச்சரே !

    ReplyDelete
  4. இங்க இருக்கிறவன் அறிவை எல்லாம் ஒதுக்கி விட்டு வெளியூர் காரனை மெச்சி பேச தான் ஒட்டு போட்டு உங்களை மக்கள் தேர்ந்தெடுத்தார்கள்

    ReplyDelete
  5. intha manguniya veetuku ponathan naaduvurupadum..Jayalalitha ilamal intha mangunikaluku kulirvitu pochu.. tamil naata intha mangunikalta irunthu kadavulthan kaapathanum..

    ReplyDelete
  6. Punda vaaya mududaaa. Irukara verikku unna thukki pottu......

    ReplyDelete
  7. mr.minister neenga yeppo degree complete pannuveenga.

    ReplyDelete
  8. TET passed candidate ku posting poda vakkilla.ithellam govt.thuuu.....

    ReplyDelete
  9. naan solvathellam poi.poiyai thavira verondrum illai-BY EDUCATION MINISTER

    ReplyDelete
  10. FLASH NEWS: DONALD TRUMP APPOINTED SENGOTTAIYAN AS AMERICAN EDUCATION MINISTER

    ReplyDelete
  11. FLASH NEWS: DONALD TRUMP APPOINTED Mr.SENGOTAIYAN AS AMERICA EDUCATION MINISTER

    ReplyDelete
  12. வாயால் வடை சுடுவது எப்படி ?

    ReplyDelete
  13. அரசு பள்ளிகளை சீரழித்ததில் மிக முக்கியபங்கு தி.மு.க.விற்கும் உண்டு

    ReplyDelete
  14. Sir pls கட்சி ரீதியாக பேசாதீங்க நானும் ADMK ஆனால் அம்மா செய்த ஆட்சி வேற லெவல் இவங்க கேவலமா செய்றாங்க அம்மா இவர்களை ஒதுக்கி வைத்திருந்தார்கள்

    ReplyDelete
  15. Sir pls கட்சி ரீதியாக பேசாதீங்க நானும் ADMK ஆனால் அம்மா செய்த ஆட்சி வேற லெவல் இவங்க கேவலமா செய்றாங்க அம்மா இவர்களை ஒதுக்கி வைத்திருந்தார்கள்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி