வருமான வரி குறையும்:பரிசீலிப்பதாக நிர்மலா தகவல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 8, 2019

வருமான வரி குறையும்:பரிசீலிப்பதாக நிர்மலா தகவல்


பொருளாதாரத்தை மீட்டெடுக்க மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்துள்ளது. வருமான வரி முறையை சீரமைப்பு உள்ளிட்ட மேலும் சில நடவடிக்கைகளும் எடுக்கப்படும்' என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

நாட்டில் பொருளாதார மந்தநிலை நிலவி வருகிறது.ஜி.டி.பி. எனப்படும் மொத்த உள்நாட்டு உற்பத்தி நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் 4.5 சதவீதமாக சரிந்தது. இது ஆறு ஆண்டுகளில் இல்லாத சரிவாகும்.பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் வகையில் கார்ப்பரேட் வரி சமீபத்தில் குறைக்கப்பட்டது. அப்போதே வருமான வரி விகிதங்களும் மாற்றி அமைக்கப்படும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.இந்நிலையில் டில்லியில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பா.ஜ.வைச் சேர்ந்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். அதில் அவர் கூறியதாவது:பொருளாதாரத்தை சீரமைக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். நுகர்வை அதிகரிப்பதற்கான முயற்சிகளும் எடுக்கப்பட்டுள்ளன.

 பாதிக்கப்பட்ட ஒவ்வொரு துறைக்கும் பல்வேறு நிதி திட்டங்களை அறிவித்துள்ளோம்.இதன் மூலம் கீழ் நிலையில் உள்ளவர்களுக்கு பணம் போய் சேரும். அதன் மூலம் நுகர்வு அதிகரிக்கும் என்பதே அரசின்எண்ணமாகும்.அவ்வாறு வருமான வரி விகிதங்களிலும் மாற்றம்செய்யப்படுமா என்று கேள்வி எழுந்துள்ளது. ஆமாம் என்று நான் கூறினால் எப்போது என்ற கேள்வி எழும். மேலும் ஆமாம் என்று கூறினால் பட்ஜெட் தான் மிக விரைவில் வர உள்ளதே;இப்போது எதற்கு அறிவிக்க வேண்டும் என்றும் என்னை கேள்வி எழுப்புவர். ஆமாம் என்று சொல்ல நினைத்தாலும் அதைநான் சொல்ல மாட்டேன். அதேபோல் இல்லை என்றும் கூற மாட்டேன். ஏனென்றால் அது குறித்து ஆய்வு செய்து வருகிறோம்.வருமான வரி முறைகளை சீரமைப்பது உள்ளிட்டவை மத்திய அரசின் பரிசீலனையில் உள்ளன.வரி செலுத்துவோர் துன்புறுத்தப்பட மாட்டார். அதனால்தான் வரி முறைகளை எளிமையாக்குவதுடன் விலக்குகளும் நீக்கப்பட வேண்டும்.

வருமான வரி உள்ளிட்ட நேரடி வரி முறையில் கணக்குகளை சரி பார்ப்பது யார் என்பது தெரியாது. அதுபோல மறைமுக வரி முறையிலும் இந்த திட்டத்தை செயல்படுத்த திட்டமிட்டுள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி