துவக்கப்பள்ளிகளில் பணியாற்றி ஓய்வுபெற்ற ஹெச்.எம்.களுக்கு சிறப்பு நிலை ஊதியம், பணபலன்: பள்ளிகல்வித்துறை பரிசீலிக்க உத்தரவு!! - kalviseithi

Dec 12, 2019

துவக்கப்பள்ளிகளில் பணியாற்றி ஓய்வுபெற்ற ஹெச்.எம்.களுக்கு சிறப்பு நிலை ஊதியம், பணபலன்: பள்ளிகல்வித்துறை பரிசீலிக்க உத்தரவு!!


கன்னியாகுமரி மாவட்டம், புத்தேரியைச் சேர்ந்த லலிதா பாய், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:இடைநிலை ஆசிரியராக கடந்த 1971ல் நியமிக்கப்பட்டேன்.


 எனது பணி வரன்முறை செய்யப்பட்டு 73ல் தகுதி காண் பருவத்தை முடித்தேன். கடந்த 1981ல் தேர்வு நிலை, 1991ல் சிறப்பு நிலையும் வழங்கப்பட்டது. 21.8.1996ல் துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியராக பணியமர்த்தப்பட்டேன்.


அப்போது முதல் துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியருக்கான ஊதியம் பெற்று வருகிறேன். உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்களாக பணியாற்றியவர்களுக்கு, இடைநிலை தரத்தில் தேர்வு நிலை மற்றும் சிறப்பு நிலை தகுதி வழங்கப்பட்டது.


அப்போது முதல், துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியருக்கான தேர்வு நிலை மற்றும் சிறப்பு நிலை வழங்கப்பட்டு ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டு, ஓய்வூதியம் மற்றும் பணப்பலன்கள் வழங்கப்படுகிறது.

ஆனால், துவக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியர்களாக பணியாற்றி ஓய்வு பெற்ற பலருக்கு இதுபோன்று பணப்பலன்கள் வழங்கப்படவில்லை.


எனவே, துவக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியர்களாக பணியாற்றியவர்களில் இடைநிலை ஆசிரியர் தரத்தில் தேர்வுநிலை மற்றும் சிறப்பு நிலை தகுதி பெற்ற நாள் முதல் துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியருக்கான தேர்வு நிலை மற்றும் சிறப்பு நிலை ஊதியம் நிர்ணயம் செய்து பணப்பலன்களை வழங்குமாறு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.


இதேபோல் மேலும் பலர் மனு செய்திருந்தனர். இந்த மனுக்களை நீதிபதி வி.எம்.வேலுமணி விசாரித்தார். இதையடுத்து நீதிபதி, ''மனுதாரர்கள் தங்களது கோரிக்கை குறித்து பள்ளி கல்வித்துறை செயலருக்கு 2 வாரத்திற்குள் புதிதாக மனு அளிக்க வேண்டும்.


அந்த மனுவை பள்ளி கல்வித்துறை தகுதி, முன்னுரிமை மற்றும் முந்தைய வழக்குகளின் தீர்ப்புகள் அடிப்படையில் 16 வாரத்திற்குள் பரிசீலித்து உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்'' என்று உத்தரவிட்டது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி