பாலிடெக்னிக் மாணவர்களுக்கு இடமாறுதல் வழங்க அனுமதி!! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 5, 2019

பாலிடெக்னிக் மாணவர்களுக்கு இடமாறுதல் வழங்க அனுமதி!!


பாலிடெக்னிக் கல்லுாரிகளில், டிப்ளமா இன்ஜினியரிங் படிக்கும் மாணவர்கள், ஒரு கல்லுாரியில் இருந்து மற்றொரு கல்லுாரிக்கு மாற, தமிழக உயர் கல்வித்துறை அனுமதி அளித்துள்ளது.

இதுகுறித்து, தமிழக தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் சார்பில், அரசு மற்றும் தனியார் பாலிடெக்னிக் கல்லுாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது; பாலிடெக்னிக் கல்லுாரிகளில், டிப்ளமா இன்ஜினியரிங் படிக்கும் மாணவர்கள், வேறு ஊர்களில் உள்ள பாலிடெக்னிக்களுக்கு மாற வேண்டும் என்றால், அதற்கு, ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். தாங்கள் படிக்கும் கல்லுாரிகளில், என்.ஓ.சி., என்ற, ஆட்சேபனை இல்லாத சான்றிதழ் பெற்று, தாங்கள் விரும்பும் கல்லுாரிகளில் இடம் இருந்தால் சேர்ந்து கொள்ளலாம்.

இதற்கான அனுமதியை, தொழில்நுட்ப கல்வி இயக்குனரகத்தில் பெற வேண்டும். இதுவரை, மூன்று, ஐந்து மற்றும் ஏழு ஆகிய, ஒற்றை பருவ தேர்வுகளின் போது மட்டுமே, மாணவர்கள், கல்லுாரிகள் மாற அனுமதிக்கப்பட்டு வந்தனர். தற்போது, இரண்டு, நான்கு மற்றும் எட்டு ஆகிய, இரட்டை பருவ தேர்வுகளிலும், அனுமதிக்கப்பட உள்ளனர். அரசு கல்லுாரி என்றால், அரசு கல்லுாரிக்கும்; அரசு உதவி கல்லுாரி என்றால், அரசு உதவி கல்லுாரிக்கும் மற்றும் சுயநிதி கல்லுாரி என்றால், சுயநிதி கல்லுாரிக்கும் மட்டுமே மாறுதல் பெற முடியும்.

இதற்கு, வரும், 16ம் தேதிக்குள், ஆன்லைன் வழியே விண்ணப்பிக்க வேண்டும். படிப்பை முழுமையாக முடிக்காமல் இடைநிற்றலாகி இருந்தால், மீண்டும் நடப்பு பருவ தேர்வில் சேரலாம். இடைநிற்றல் மாணவர்கள், தாங்கள் படிப்பில் சேர்ந்து, ஆறு ஆண்டு களுக்குள் 
 சேர்ந்து, ஆறு ஆண்டு களுக்குள் இருந்தால் மட்டும், மீண்டும் கல்லுாரியில் சேரலாம். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி