தேர்வு வினாத்தாள்கள் தொடர்ந்து லீக் போலீசில் புகார் தர கல்வித்துறை முடிவு!! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 21, 2019

தேர்வு வினாத்தாள்கள் தொடர்ந்து லீக் போலீசில் புகார் தர கல்வித்துறை முடிவு!!


தமிழக பள்ளி கல்வித்துறை பாட திட்டத்தில் அரையாண்டு தேர்வு டிசம்பர்11ல் துவங்கி நடந்து வருகிறது.டிச., 23ம் தேதி அனைத்து தேர்வுகளும் முடிகின்றன. இந்நிலையில் அரையாண்டு தேர்வில் பல்வேறு பாடங்களின் வினாத்தாள்கள் தேர்வுக்கு முன்பே வெளியாகி விட்டன.

ஏற்கனவே பிளஸ் 1, பிளஸ் 2 வேதியியல் வினாத்தாள்கள் டிச. 17 18ல் 'யூ டியூப்' வழியாக வெளியாகின. நேற்று நடந்த 10ம் வகுப்பு அறிவியல் தேர்வுக்கான வினாத்தாளும் சமூக வலைதளங்களில் நேற்று காலை வெளியானது.

தமிழகம் முழுவதும் பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 அரையாண்டு தேர்வுக்கான வினாத்தாள்கள் அரசு தேர்வுத்துறை இயக்குனரகத்தால் தயாரிக்கப்பட்டு மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டன.

இந்த வினாத்தாள்கள் தேர்வுக்கு முன் வெளியாகி வருவதால் தேர்வு துறையின் மீதான நம்பகத்தன்மை கேள்விக்குறியாகி உள்ளது.இதையடுத்து வினாத்தாள் வெளியாகும் சம்பவங்கள் குறித்து போலீசில் புகார் அளிக்க பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளது.

மார்ச்சில் நடத்தப்பட உள்ள பொதுத்தேர்வில் வினாத்தாள் வெளியாகாமல் தடுக்கும் வகையில் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க உள்ளதாக அதிகாரிகள்தெரிவித்தனர்.

1 comment:

  1. This is not acceptable, how is possible ??all are not good ur professional.... U got many????

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி