ஆசிரியர் வருமானத்தை கண்காணிக்க முடிவு: வங்கி கணக்கு விவரங்களை சமர்ப்பிக்க கல்வித் துறை உத்தரவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 1, 2019

ஆசிரியர் வருமானத்தை கண்காணிக்க முடிவு: வங்கி கணக்கு விவரங்களை சமர்ப்பிக்க கல்வித் துறை உத்தரவு


ஆசிரியர்களின் வங்கிக் கணக்கு விவரங்களை எமிஸ் இணைய தளத்தில் பதிவேற்றம் செய்ய பள்ளிக்கல்வித் துறை உத்தர விட்டுள்ளது.

தமிழக பள்ளிக்கல்வி துறையின் கீழ் 37,211 அரசுப் பள்ளிகள் இயங்கு கின்றன. இவற்றில் சுமார் 2.3 லட்சம் ஆசிரியர்கள் பணி புரிகின்றனர். இதற்கிடையே அரசுப் பள்ளிகளின் தரத்தை மேம் படுத்த அரசு பல்வேறு நட வடிக்கைகளை மேற்கொண்டு வரு கிறது. அதன் தொடர்ச்சியாக ஆசிரியர்கள் செயல்பாடுகளைக் கண்காணிப்பதில் பள்ளிக்கல்வித் துறை தீவிரம் காட்டுகிறது.

கற்றல் பணிவிவர தின பதிவேடு, சொத்து விவரம், பிள்ளைகள் எந்த பள்ளியில் படிக்கின்றனர் என ஆசிரியர்கள் தொடர்பான அனைத்து தகவல்களும் கல்வி தகவல் மேலாண்மை முகமை (எமிஸ்) இணையதளம் வழியாக சேகரிக்கப்பட்டு வருகின்றன.இந்நிலையில் ஆசிரியர்கள் வைத்துள்ள அனைத்து வங்கி கணக் குகள் மற்றும் பான் கார்டு விவ ரங்களைஎமிஸ் இணையதளத்தில் பதிவு செய்ய பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இதற்காக எமிஸ் இணையதளத்தில் பிரத் யேக வசதிகள் செய்யப்பட்டுள் ளன. இந்த பணிகளை விரை வாக முடிக்கவும் அறிவுறுத்தப் பட்டுள்ளது.

ஆசிரியர்களின் வரு மானம், பணப் பரிமாற்றம் உள்ளிட்ட செயல்பாடுகளைக் கண்காணிக்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டுள்ளதாக துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

7 comments:

  1. அரசிடம் சம்பளம் பெறும் அனைத்து வகை ஊழியர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சர்கள் அனைவருடைய வங்கி கணக்கு விபரங்களையும் பதிவிட வழி செய்யப்பட வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. வீதிக்கு வீதி போர்டு வைத்து Trb Coching center வைத்து மாணவர்களிடம் கொள்ளையடிக்கும் அரசு ஊழியர்களிடம் கணக்குக்கேட்டு Tax ஒழுங்க கட்டச்சொல்லுங்க. தமிழ்நாடு முழுவதும் கணக்கெடுங்க.

      Delete
    2. All employees and politicians also submit their income and bank transactions..

      Delete
    3. Ssss Pg trb coaching nu one person Ku 17 thousands fees vanguranga .... Minimum 800 people padikuranga. Bill gates Vida athhigama earn panranga oru sila govt teachers ( not all)pls find them out...it's happening lot in Madurai ...

      Delete
    4. நாட்டில் எந்தத் துறையிலும் நேர்மையற்றவர்கள் பணிபுரியலாம். ஆனால் சமுதாயத்திற்கு நேர்மையையும் ஒழுக்கத்தையும் கற்றுக்கொடுப்பதற்கென நியமிக்கப் படும் ஆசிரியர்கள் தங்கள் வருமாணத்தை மறைப்பது ஏற்றுக்கொள்ளப்படாதது.கல்வியை வியாபாரமாக்கிக் கொண்டு ஏமாற்றிப் பிழைக்கும் பதருகள் ஆசிரியப்பணியில் இருந்து விரட்டியடிக்கபப வேண்டும். சிலர் கேட்கலாம் மருத்துவர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் மட்டும் மமறைமுகமாக பணம்சம்பாரிக்கலாமா அவர்களும் கணக்குக்காட்டவேண்டும் என்று இவர்களை எல்லாம் உருவாக்கும் ஆசிரியர்களே தவறு செய்வதை எப்படி ஏற்பது. தமிழ்நாடு முழுவதும் உள்ள கோட்சிங் சென்டர் என்ற பெயரில் கொள்ளையடிக்கும் திருட்டுக்கும்பலை பணியில் இருந்து விரட்டியடிக்கவேண்டும்.காலிப்பணியிடங்கள் இன்னும் அதிகரிக்கும்..

      Delete
  2. Namakal la coachjng institute la per head 25000 vanguranga, govt clg lecture, oru batch ku 150+ students padikiranga. 5 or 6 batch podranga... Epdi ithellam govt ku theriyama nadakkuthu... Anga mattum ila.. ela pakamum

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி