விருப்பமுள்ள மாற்றுத் திறனாளிகளை தேர்தல் பணியில் ஈடுபடுத்தலாம் - மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 21, 2019

விருப்பமுள்ள மாற்றுத் திறனாளிகளை தேர்தல் பணியில் ஈடுபடுத்தலாம் - மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு.



இவ்வாணைய சுற்றறிக்கையில் பார்வை மாற்றுத் திறனாளிகளுக்கு உள்ளாட்சி தேர்தல் பணியிலிருந்து விலக்களித்து உத்திரவிடப்பட்டுள்ளது . அனைத்து அரசுப்பணி மாற்றுத் திறனாளிகள் நலச்சங்கம் விருப்பமுள்ள மாற்றுத் திறனாளிகளை மட்டும் தேர்தல் பணியில் ஈடுபடுத்திக்கொள்ளுமாறும் , விருப்பமில்லாத மாற்றுத் திறனாளிகளை கட்டாயப்படுத்த வேண்டாம் என்றும் இவ்வாணையத்தை கேட்டுக் கொண்டுள்ளது . மாற்றுத் திறனாளிகளின் திறன் / விருப்ப அடிப்படையில் மட்டுமே தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட வேண்டும் என தேர்தல் நடத்தும் அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் .

3 comments:

  1. அரசு படித்துவிட்டு திரியும் யாருக்கும் வேலை வழங்கப்போவதில்லை. டெட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்பது கட்டாயம். ஆனால் இவர்களுக்கு வேலை வாய்ப்பும் வழங்கிவிடக் கூடாது. இவர்கள் படித்துக் கொண்டே இருக்க வேண்டும். தேர்ச்சி பெற்றுக் கொண்டே இருக்க வேண்டும். அப்படியே வேலை கொடுத்தாலும் 7000 மற்றும் 8000 ரூபாய் சம்பளத்தில் கொடுக்க வேண்டும். இன்னும் மத்திய அரசு வழிகாட்டுதலின்படி அனைத்து பணியிடங்களும் குறைக்கப்பட்டு வேலைவாய்ப்பே வழங்கமுடியாத சூழல் ஏற்பட்டு வருகிறது. படித்தவர்கள் எங்கே செல்வது? தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு என்னதான் வழி? தனியார் பள்ளிகளிலும் உரிய வாய்ப்பும் கிடையாது? அப்புறம் எதற்கு தகுதித் தேர்வு எழுதிக் கொண்டே இருக்க வேண்டும்? 2013 -ல் தேர்ச்சிபெற்று தற்போது அது ஏழாண்டுகளில் காலாவதி ஆகப் போகிறது. இதற்காக எவ்வளவு கஷ்டப்பட்டு படித்து என்ன பிரயோஜனம்? இப்படி உள்ள சூழ்நிலையில் இப்போது பணிபுரிந்து கொண்டிருப்போரின் வயிற்றில் அடிப்பதும் பாவமே! படித்தவர்கள் சிந்திக்க வேண்டும். ஏற்கனவே பி.எட் கல்லூரிகள் பொறியியல் கல்லூரிகள் அதிகமாகத் திறக்கப்பட்டு கல்லூரிகளை நடத்தியவர்கள் நன்றாக இருக்கிறார்கள். லட்சக்கணக்கானோர் வேலைவாய்ப்பின்றி தவித்து வருகிறார்கள். இந்த நிலையில் வேலைவாய்ப்பு என்பதையே இல்லாமல் செய்து கொண்டிருக்கும் நிலையை மாற்றவும் அரசு முன்வரவேண்டும். நிறைய ஏழைக்குடும்பங்கள் இப்படி அரசு வேலைவாய்ப்பு மூலம் தான் நடுத்தர நிலைக்கு உயர்கிறார்கள். இப்படி வேலைவாய்ப்பு என்பது மறுக்கப்பட்டால் இன்னும் கீழ்நிலைக்குத் தான் செல்ல வேண்டும். தயவு செய்து தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றோருக்கு வாழ்வளியுங்கள். அனைத்து பணியிடங்களையும் நிரப்புங்கள். அதை குறைத்து விடாதீர்கள் என்பதை கோரிக்கையாக வைக்கின்றோம். செவிசாய்க்குமா அரசு???????????????????

    ReplyDelete
  2. இப்படிப்பட்ட சூழ்நிலையில் 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கும் பொதுத் தேர்வு. வாழ்க தமிழ்நாடு.... மைக்கை நீட்டினால் வாய் கிழிய பேசுவார்கள். வாக்குறுதிகளை அள்ளி வீசுவார்கள். பணியிடங்கள் முற்றிலும் குறைக்கப்பட்டு வருகிறது. இனி வேலைவாய்ப்பு இருக்காது. அப்படி போட்டாலும் 7000 தான் சம்பளம். அரசியல் வியாதிகளுக்கு தான் கொண்டாட்டம். இனி படித்தவர்களுக்கெல்லாம் திண்டாட்டம் தான்.

    ReplyDelete
  3. I am a disabled private teacher I feel very happy that the Tamil Nadu govt give me a chance to work in the election duty. At the same time i request you kindly arrange the election duty for the disabled teachers nearby our house to the election duty upto 3 kms It is very helpful to us. Thanking you

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி