ஆங்கிலம், ஹிந்தி, குஜராத்தியில் ஜே.இ.இ., நுழைவு தேர்வு!! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 3, 2019

ஆங்கிலம், ஹிந்தி, குஜராத்தியில் ஜே.இ.இ., நுழைவு தேர்வு!!


பிளஸ் 2 படித்து முடிக்கும் மாணவர்கள், தேசிய உயர் கல்வி நிறுவனமான, ஐ.ஐ.டி.,யில், இன்ஜினியரிங் படிப்பில் சேர, ஜே.இ.இ., எனப்படும், ஒருங்கிணைந்த நுழைவு தேர்வில், தேர்ச்சி பெற வேண்டும்.

இந்த தேர்வு, இந்த கல்வி ஆண்டில், இரண்டு முறை நடத்தப்படுகிறது. முதல் தேர்வானது, ஜனவரியில் நடத்தப்பட உள்ளது. இதற்கான, ஆன்லைன் பதிவுகள் முடிந்துள்ளன.

இரண்டாவது தேர்வு ஏப்ரலில் நடக்கிறது.
இந்த கல்வி ஆண்டில், ஜே.இ.இ., தேர்வை பொருத்தவரை, ஆங்கிலம், ஹிந்தி மற்றும் குஜராத்தி மொழியில் மட்டும் நடத்தப்படும் என, தேசிய தேர்வு முகமையான, என்.டி.ஏ., அறிவித்துள்ளது.

குஜராத்தி மொழியில் வினாத்தாளை மொழி மாற்றம் செய்து வழங்க வேண்டும் என, குஜராத் அரசு கேட்டு கொண்டதால், குஜராத்தி மொழியில் வினாத்தாள் இடம்பெறும்.

மற்ற மாநிலங்கள் எதுவும், தங்கள் மாநில மொழிகளில் தேர்வை நடத்த கோரிக்கை வைக்கவில்லை என, என்.டி.ஏ., அறிவித்துள்ளது.
இதன் வழியாக, தமிழில் தேர்வை நடத்துவது குறித்து, தமிழக அரசும் கோரிக்கை வைக்கவில்லை; ஆந்திரா, கேரளா உள்ளிட்ட தென் மாநிலங்களும், ஜே.இ.இ., தேர்வை மாநில மொழிகளில் நடத்தும்படி கேட்கவில்லை என, தெரிகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி