Flash News : உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் தேதி மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 2, 2019

Flash News : உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் தேதி மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு


 ஊரகப் பகுதிக்கான உள்ளாட்சி தேர்தல் அட்டவணை : 

1ம் கட்ட தேர்தல்: டிசம்பர் 27

2ம் கட்ட தேர்தல்: டிசம்பர் 30

வேட்பு மனு தாக்கல் தொடங்கும் நாள்: டிசம்பர் 6

வேட்பு மனு தாக்கல் கடைசி நாள்: டிசம்பர் 13

திரும்ப பெற கடைசி நாள்: டிசம்பர் 18

தேர்தல் முடிவு: ஜனவரி 2, 2020

பதவியேற்பு : ஜனவரி 6 , 2020


உச்ச நீதிமன்றத்தில் மாநிலத் தோ்தல் ஆணையம் உறுதியளித்ததன் அடிப்படையில், தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தோ்தல் தேதி திங்கள்கிழமை (டிச. 2) காலை 10 மணியளவில் வெளியிடப்பட்டது.

மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது,ஊரக, உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக நடத்தப்படும்.

இதற்கான தேர்தல் அறிவிக்கை டிசம்பர் 06-ஆம் தேதி வெளியிடப்படும், மேலும் அன்றைய தினம் முதல் வேட்புமனு தாக்கல் தொடங்கப்படும். வேட்புமனு தாக்கல் செய்ய இறுதிநாள் டிசம்பர் 13-ஆம் தேதியும், வேட்புமனு ஆய்வு 16-ஆம் தேதியும், வேட்புமனு திரும்பப்பெறுவது 18-ஆம் தேதியும் நடைபெறும்.

வாக்குப்பதிவு காலை 7 மணி தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெறும். வாக்கு எண்ணிக்கை 02.1.2020-ஆம் தேதி காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெறும் என்று அறிவித்தார்.

நிர்வாக காரணங்களுக்காக மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி உள்ளிட்ட நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கான தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. பின்னர் அறிவிக்கப்படும் என தமிழக தேர்தல் ஆணையர் பழசனிசாமி தகவல்.

6 comments:

  1. உள்ளாட்சி தேர்தல் அறிவித்ததால் முதுகலை ஆசிரியர் பணி நியமனம் தள்ளி போக வாய்ப்பு இருக்கிறதா?

    ReplyDelete
  2. அப்படியெல்லாம் இல்லை govt rules உட்பட்டு கொடுக்க வாய்ப்பு இருக்கிறது

    ReplyDelete
  3. Goindha goindha goindha goindha goindha goindha goindha

    ReplyDelete
  4. ADMK KU mattum vote podaathinga teachers

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி