10, 12-ம் வகுப்புகளுக்கு மாதிரி வினாத்தாள்: பெற்றோர் ஆசிரியர் கழகம் வெளியீடு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 24, 2020

10, 12-ம் வகுப்புகளுக்கு மாதிரி வினாத்தாள்: பெற்றோர் ஆசிரியர் கழகம் வெளியீடு.


10, 12-ம் வகுப்புகளுக்கு மாதிரி வினாத்தாள்களை பெற்றோர் ஆசிரியர் கழகம் விற்பனை செய்ய உள்ளது.

10, 12-ம் வகுப்புகளுக்கு பெற்றோர் ஆசிரியர் கழகம் தயாரித்துள்ள மாதிரி வினாத்தாள் தொகுப்பு, ஜனவரி 27-ம் தேதி முதல் விற்பனை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கழகத்தில் தற்போது கட்டுமானப் பணி நடந்து வருவதால், அங்கே இந்த ஆண்டு மாதிரி வினாத்தாள் விற்பனை இல்லை என்று கூறப்பட்டுள்ளது. இதனால் சென்னை எம்எம்டிஏ அரும்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஜனவரி 27 முதல் மாதிரி வினாத்தாள் விற்பனையாகிறது. அதேபோல சென்னை சேத்துப்பட்டு எம்.சி.சி. மேல்நிலைப் பள்ளியிலும், சைதாப்பேட்டை ஜெயகோபால் கரோடியா மகளிர் மேல்நிலைப் பள்ளியிலும் மாதிரி வினாத்தாள்கள் விற்பனையாக உள்ளன.

மாதிரி வினாத்தாளுக்கான கட்டணங்கள் திருத்தப்பட்டு, அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழ் மற்றும் ஆங்கில வழித் தேர்வுக்கு ஒரே தொகுதியாக 60 ரூபாய்க்கு விற்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழ் மற்றும் ஆங்கில வழியில் தனித்தனியாக ரூ.80-க்கு மாதிரி வினாத்தாள் தொகுப்பு விற்கப்பட உள்ளது.

1 comment:

  1. அமையான தகவல் எப்பெ ாழுது மாதிாி வினாத்தாள் கிடைக்கும்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி