நாளை 14.01.2020 சிறப்பு விடுமுறை அறிவிக்க ஆசிரியர் சங்கம் கோரிக்கை! - kalviseithi

Jan 13, 2020

நாளை 14.01.2020 சிறப்பு விடுமுறை அறிவிக்க ஆசிரியர் சங்கம் கோரிக்கை!


மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களுக்கு ஐபெட்டோ அகில இந்திய செயலாளர் எழுதும் நேர்முக கடித வேண்டுகோள்.

பொதுமக்கள் கொண்டாடுகின்ற விழாக் காலங்களில் மாணவர்களின் நலன், பெண் ஆசிரியர்களின் நலன், ஊழியர்களின் நலனை கருத்திற்கொண்டு விடுமுறையினை தமிழக அரசு தொடர்ந்து அறிவித்து வருவது பாராட்டுக்குரிய நடைமுறையாக இருந்து வருகிறது.

தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளுக்கு முதல் நாள் 14-ம் தேதி போகிப் பண்டிகை தினம் ஆகும். தற்போது விடுமுறை பட்டியலில் பள்ளி வேலை நாளாக இருந்து வருகிறது. மாணவர்களின் வருகை குறைவு பெரிதும் பாதிக்கும் என்பது பள்ளிக்கல்வித்துறை அறிந்த ஒன்றுதான். அது போல் 90 விழுக்காடு பெண் ஆசிரியைகள், ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள். தாங்கள் கனிவுடன் பரிசீலனை செய்து 14 ஆம் தேதி அன்று விடுமுறையாக அறிவித்து உதவிடுமாறு தமிழக ஆசிரியர் கூட்டணியின் சார்பிலும் ஒட்டுமொத்த ஆசிரியர் சமுதாயத்தின் வேண்டுகோளாகவும் தங்களை பெரிதும் வேண்டிக் கேட்டுக் கொள்கிறோம்.

மதிப்புமிகு பள்ளிக்கல்வி இயக்குநர் அவர்களையும், மதிப்புமிகு தொடக்கக் கல்வி இயக்குநர் அவர்களையும் நாம் கேட்டுக் கொண்டதன் பேரில் உடன் மிக விரைவில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களை சந்தித்து அறிவிப்பு வெளியிட வாய்ப்பு உள்ளதாகவும் நம்மிடம் தெரிவித்தார்கள்.

தங்களின் நல்ல அறிவிப்பிற்கு நன்றியுடன்,

வா.அண்ணாமலை,
ஐபெட்டோ அகில இந்திய செயலாளர், AIFETO (ALL INDIA FEDERATION OF ELEMENTARY TEACHERS ORGANISATIONS) தமிழக ஆசிரியர் கூட்டணி

12 comments:

 1. அரசாங்கத்திடம் ஷு நக்குற வெலய விடுங்க, நீங்க பன்ற அரசியல் எல்லாருக்கும் தெரியும், எங்க கோரிக்கை ஏற்று விடுமுறை அளித்த அரசுக்கு நன்றி... இது தானே உங்க பிளான்???

  ReplyDelete
 2. Macro jeo porratt nadakkum,solliputtan parthukka

  ReplyDelete
 3. நாங்கள் விடுமுறை கேட்கவில்லை

  ReplyDelete
 4. போகிப் பண்டிகைக்கு விடுமுறை கேட்பது தவறில்லையே பொங்கல் பானை வாங்கும் விழாவாக வட மாவட்டங்களிலும் காப்பு கட்டாக மத்திய மாவட்டங்களிலும் கொண்டாடப் படுகிறது மேலும் இன்று(13/01/2020) மாணவர்கள் வருகை 40 சதவீதம் தான் உள்ளது நாளை பள்ளி வைத்தால் 10 முதல் 15 சதவீத மாணவர்கள் தான் வருவார்கள்

  ReplyDelete
 5. ஐபெட்டோ சங்கம் வாழ்க..

  ReplyDelete
 6. விடுமுறை விடுமுறை என்று ஏன் விரும்புகிறீர்கள்.
  ஆசிரிய சங்க தலைவர்களும், பொறுப்பாளர்களும் விடுமுறை வேண்டும் என்று யாரிடமும் யாசகம் கேட்காதீர்கள். மக்களும் சரி ஆட்சியாளர்களும் நாம்(ஆசிரியர்கள்) வேலை செய்யாமல் ஊதியம் வாங்குகிறோம் என்று எண்னுகிறார்கள். ஊடகங்கள் நம்மளை வைத்து செய்கிறார்கள்...
  நாம் இந்த அற்ப ஒருநாள் விடுமுறைக்காக நமது மானத்தை விலை பேசுகிறோம்...
  ஆண்டுக்கு 15 விடுமுறை, 17 EL, மருத்துவ விடுப்புகள் உள்ளவற்றை பயன்படுத்துங்கள்...
  நாம் விடுமுறைகளை யாசகம் வாங்காமல் நமது உரிமைகளை வாங்குங்கள்...

  ReplyDelete
 7. இந்தபா பக்கத்து எலைக்கு பாயாசம் வேனுமா பாரு

  ReplyDelete
 8. எனக்கு விடுமுறை தேவையில்லை...தேவைப்படுபவர்கள் சொந்த CL or RL எடுத்துக்கொள்ளலாமே...விடுமுறை கேட்பதால் நாம் ஆசிரியர்கள்தான் விடுமுறை கேட்கிறார்கள் என்று இளக்காரமாக நினைக்கிறார்கள்...!

  ReplyDelete
 9. அரசே விடுமுறை விட்டாலும் ஆசிரியர்கள் கேட்டதால் விடுமுறை என்று தானே சொல்கிறார்கள் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றநாள் அதற்கு அடுத்த நாள் அவர்களே விட்டு விட்டு ஆசியர்கள் கேட்டதால் விடுமுறை என்று தானே சொன்னார்கள்

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி