தேசிய கட்டுரை போட்டிக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் - ஜனவரி 17 - ம் தேதி கடைசி நாள் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 8, 2020

தேசிய கட்டுரை போட்டிக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் - ஜனவரி 17 - ம் தேதி கடைசி நாள்


மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் நடத்தும் தேசிய கட்டுரைப் போட்டிக்கு விண்ணப் பிக்க வரும் 17 - ம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது .

இந்திய அரசியலமைப்பு மற்றும் அடிப்படை கடமைகள் பற்றி மத்திய மனிதவள மேம் பாட்டு அமைச்சகம் , 2 - வது கர்த்தவ்ய ( கடமை ) தேசிய கட்டு ரைப் போட்டியை நடத்துகிறது . ‘ நமது தேசிய சுதந்திரப் போராட் டத்தை ஊக்கப்படுத்திய உன்ன தமான கொள்கைகளை மதிப் பதும் , பின்பற்றுவதும் ' என்பதே இந்தப் போட்டிக்கான தலைப்பு . உயர்கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவ - மாணவியரும் இதில் கலந்துகொள்ளலாம் . விண்ண ப்பதாரர்கள் kartavya . ugc . ac . in என்ற இணையதளமுகவரியில் விண்ண ப்பிக் கலாம் . ஜன . 27 - ம் தேதி நடைபெற விருக்கும் போட்டிக்கு விண்ணப் பிக்க வரும் 17 - ம் தேதி கடைசி நாளாகும் . இதற்கான அனுமதி அட்டை 21 - ம் தேதி வழங்கப்படும் . ஆங்கிலம் அல்லது இந்தியில் கட்டுரை எழுதலாம் . பிப் . 11 - ம் தேதி முடிவுகள் வெளியிடப் படும் . சான்றிதழ்களோடு , ரூ . 15 ஆயிரம் , ரூ . 12 ஆயிரம் , ரூ . 10 ஆயிரம் , ரூ . 7 , 500 என 4 பரிசுகள் வழங்கப்படும் .

போட்டிக்கான மேலும் விவரங்க ளை ntaessay @ gmail . com என்ற மின்னஞ்சல் மூலம் தெரிந்துகொள்ளலாம் . மத்திய அரசு பத்திரிகை தகவல் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது .

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி