ஆசிரியர்களுக்கு 3 நாள் யோகா பயிற்சி - முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 8, 2020

ஆசிரியர்களுக்கு 3 நாள் யோகா பயிற்சி - முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்!


மாநிலத் திட்ட இயக்குநர் அவர்களின் செயல்முறைக் கடிதத்திற்கிணங்க ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்திட்டம் ( இடைநிலை ) சார்பாக விழுப்புரம் மாவட்டத்தில் அரசு , நிதி உதவி பெறும் உயர்நிலை / மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் உடற்கல்வி இயக்குநர்கள் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்களுக்கு மாணவர்களின் உடல் மற்றும் மன வளம் மேம்படுத்தும் வகையில் உடல் , மனம் மற்றும் ஆளுமை வளர்ச்சி அடைதலுக்கான மனவளக்கலை யோகா பயிற்சி 12 . 10 . 2019 , 14 . 10 . 2019 , மற்றும் 15 . 10 . 2019 ஆகிய 3 நாட்களில் வழங்கப்பட்டது .

அந்த தேதிகளில் கலந்து கொள்ளாத இணைப்பில் உள்ள பள்ளிகளைச் சேர்ந்த உடற்கல்வி மற்றும் உடற்கல்வி இயக்குநர்கள் மற்றும் பகுதிநேர உடற்கல்வி ஆசிரியர்கள் மட்டும் 07 . 01 . 2020 , 08 . 01 . 2020 , 09 . 01 . 2020 ஆகிய நாட்களில் கீழே குறிப்பிட்டுள்ள மையத்தில் நடைபெற உள்ள பயிற்சியில் கலந்து கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் .


1 comment:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி