கணினி ஆசிரியர் காலிப் பணியிடங்கள் : தற்காலிக தெரிவு பட்டியல் வெளியீடு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 12, 2020

கணினி ஆசிரியர் காலிப் பணியிடங்கள் : தற்காலிக தெரிவு பட்டியல் வெளியீடு!


அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள கணினி ஆசிரியர் பணியிடங் களுக்கான தற்காலிக தெரி வுப்பட்டியல் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது .

இது தொடர்பாக ஆசிரி யர் தேர்வு வாரியம் சனிக்கி ழமை வெளியிட்ட செய்தி :

ஆசிரியர் தேர்வு வாரியம் சார் பில் கணினி பயிற்றுநர் நிலை 1 - க்கான ( முதுநிலை ஆசிரி யர்நிலை ) கணினி வழியிலான தேர்வு கடந்த ஜூன் 23 , ஜூன் 27 ஆகிய நாள்களில் நடை பெற்றது .

இந்தத் தேர்வுக்கான மதிப்பெண் முடிவுகள் கடந்த நவம்பர் 25 - ஆம் தேதி ஆசிரி யர் தேர்வு வாரிய இணையத ளத்தில் வெளியிடப்பட்டன . இதைத் தொடர்ந்து சான்றி தழ் சரிபார்ப்புக்கு அழைக்கப் படும் பணிநாடுநர்கள் பட்டி யல் தயார் செய்யப்பட்டது . இந்தப்பட்டியலில் உள்ளவர்க ளுக்கு சான்றிதழ் சரிபார்ப்புப் பணி சென்னையில் கடந்த 8 ஆம் தேதி முதல் 10 - ஆம் தேதி வரை நடைபெற்றது . அதன் அடிப்படையில் தற்போது தற்காலிக தெரிவுப் பட்டியல் தயார் செய்யப்பட்டு ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத் தில் ( www . trb . tn . nic . in ) வெளியிடப்பட்டுள்ளது .

2 comments:

  1. மீதமுள்ள 114 பணியிடங்கள் ஏன் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது?????

    ReplyDelete
  2. மாற்று திறனாளிகளுக்காக

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி