சி.இ.ஓ.,க்கள் பணியிடங்களை நிரப்புவதில் இழுபறி! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 16, 2020

சி.இ.ஓ.,க்கள் பணியிடங்களை நிரப்புவதில் இழுபறி!


தமிழகத்தின் புதிய மாவட்டங்களில் கலெக்டர், எஸ்.பி., நியமிக்கப்பட்ட நிலையில் பொதுத் தேர்வுகளை மனதில் வைத்து முதன்மை கல்வி அலுவலர்களையும் (சி.இ.ஓ.,) விரைவில் நியமிக்க வேண்டும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

சமீபத்தில் செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, தென்காசி, திருப்பத்துார், ராணிப்பேட்டை மாவட்டங்கள் உருவாக்கப்பட்டு, கலெக்டர், எஸ்.பி.,க்கள் நியமிக்கப்பட்டனர். வருவாய்த்துறையும் முழு அளவில் செயல்பட்டு வருகிறது. ஆனால் கல்வித்துறையை மட்டும் அரசு கண்டுகொள்ளவில்லை. சி.இ.ஓ.,க்கள் பணியிடங்களை நிரப்புவதில் இழுபறி நீடிப்பதால் புதிய மாவட்டங்களில் கல்வித்துறை முடங்கும் அபாயத்தில் உள்ளது.கல்வி அதிகாரிகள் கூறியதாவது:பத்தாம் வகுப்பு, பிளஸ் 2வுக்கு மட்டுமே இருந்த பொதுத்தேர்வு தற்போது 5, 8, பிளஸ் 1 வகுப்புக்கும் நடக்கிறது. சி.இ.ஓ., நியமிக்கப்படாததால் மாணவர்களுக்கான ரோல் நம்பர் தயாரிப்பு, தேர்வு மையம் ஏற்படுத்துதல், பள்ளி ஆய்வு உள்ளிட்ட பணிகள் பாதிக்கின்றன.

புதிய மாவட்டத்தை கூடுதலாக சி.இ.ஓ., கண்காணிப்பது பெரும் சவாலாக உள்ளது. விரைவில் புதிய சி.இ.ஓ.,க்களை நியமிக்க துறை செயலர் பிரதீப் யாதவ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

2 comments:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி