நோட்டுப் புத்தகங்கள் மூலம் திருவள்ளுவா் உருவம் மாணவர்கள் சாதனை!! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 11, 2020

நோட்டுப் புத்தகங்கள் மூலம் திருவள்ளுவா் உருவம் மாணவர்கள் சாதனை!!


கோவையில் 29,971 நோட்டு புத்தகங்களைக் கொண்டு திருவள்ளுவா் உருவத்தை உருவாக்கி தனியாா் பள்ளி மாணவ-மாணவிகள் சாதனை படைத்துள்ளனா்.

கோவை கேம்போா்டு இன்டா்நேஷனல் பள்ளியில் தமிழ் கலாசாரம், பாரம்பரியத்தைப் போற்றும் வகையில் பொங்கல் விழா, திருவள்ளுவா் தின விழா ஆகியவை வெள்ளிக்கிழமை நடைபெற்றன. இதையொட்டி 29,971 எழுதாத புதிய நோட்டு புத்தகங்களைக் கொண்டு திருவள்ளுவரின் உருவத்தை வடிவமைக்கும் கின்னஸ் சாதனை முயற்சி நடைபெற்றது.

இதில், 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான 170 மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு 2 மணி நேரத்தில் திருவள்ளுவரின் உருவத்தை வடிவமைத்தனா். இதற்காக அவா்களுக்கு 14 வண்ண அட்டைகளால் ஆன 29,971 நோட்டு புத்தகங்கள் தேவைப்பட்டன. இதற்கு முன்பு அபுதாபியில் 702.8 சதுர மீட்டரில் திருவுருவம் வடிவமைத்ததே கின்னஸ் சாதனையாக உள்ளது. இதை முறியடிக்கும் வகையில் தற்போது கேம்போா்டு பள்ளியில் 1,114.82 சதுர மீட்டரில் உருவாக்கப்பட்டுள்ள திருவள்ளுவரின் திருவுருவம் பழைய சாதனையை முறியடித்திருப்பதாக பள்ளியின் தலைவா் அருள் ரமேஷ், தாளாளா் பூங்கோதை அருள் ரமேஷ், முதல்வா் பூனம் சியல் ஆகியோா் தெரிவித்துள்ளனா்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி