ஆசிரியர்கள் நியமனத்தில் மீண்டும் சமூக அநீதி: ராமதாஸ் கொந்தளிப்பு!! - kalviseithi

Jan 5, 2020

ஆசிரியர்கள் நியமனத்தில் மீண்டும் சமூக அநீதி: ராமதாஸ் கொந்தளிப்பு!!


ஆசிரியர்கள் நியமனத்தில் மீண்டும் சமூக அநீதி இழைக்கப்படுவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு அரசு பள்ளிகளுக்கு முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களை நியமிப்பதில் மீண்டும் ஒருமுறை  இடஒதுக்கீட்டு விதிகள் மீறப்பட்டுள்ளன. பலமுறை சுட்டிக்காட்டியும் இட ஒதுக்கீட்டை நடைமுறைப் படுத்துவதில் சமூக நீதிக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் துரோகம் செய்வது கண்டிக்கத்தக்கதாகும்.

அரசு பள்ளிகளில் காலியாக இருக்கும் 17 பாடங்களுக்கான 2144 முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித்தேர்வு கடந்த ஆண்டு செப்டம்பர் 27, 28, 29 ஆகிய தேதிகளில் ஆன்லைன் முறையில் நடத்தப்பட்டது. அவற்றில் ஆங்கிலம், கணிதம், இயற்பியல் உள்ளிட்ட 12  பாடங்களுக்கு  தேர்ந்தெடுக்கப் பட்டவர்களின் பட்டியல் கடந்த ஆண்டு நவம்பர் 20-ஆம் தேதி வெளியிடப்பட்டது. 

மீதமுள்ள பாடங்களில் தமிழ், வரலாறு, பொருளாதாரம் ஆகிய பாடங்களுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட  முதுநிலை ஆசிரியர்கள் பட்டியல் கடந்த 2-ஆம் தேதி வெளியிடப்பட்டுள்ளது. முதலில் செய்யப்பட்ட நியமனங்களில் இடஒதுக்கீட்டு விதிகள் எவ்வாறு அப்பட்டமாக மீறப்பட்டனவோ, அதேபோல், இப்போதும்  மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு விதிகள் காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளன.

உதாரணமாக தமிழ் பாடத்திற்கு மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான பின்னடைவுப் பணியிடங்கள் 54, பொதுப்பிரிவில் ஆட்டிசம் மற்றும் கற்றல் குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர்களுக்கான பின்னடைவுப் பணியிடங்கள் 3 என மொத்தம் 57 பின்னடைவுப் பணியிடங்கள், 245 நடப்புக் காலியிடங்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு 4 பணியிடங்கள், கள்ளர் சீரமைப்பு பள்ளிகளுக்கு ஓர் காலியிடம் என மொத்தம்  319 ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும். 

இவர்களில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான  பின்னடைவுப் பணியிடங்களில் அச்சமுதாயத்தினரை நியமித்து விட்டு, மீதமுள்ள பணியிடங்களுக்கு மட்டும் தான் 69% இடஒதுக்கீட்டின் அடிப்படையில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். அவ்வாறு செய்வதன் மூலம் தான் உண்மையான சமூகநீதியை நிலைநிறுத்த முடியும்.


ஆனால், பின்னடைவுப் பணியிடங்கள், நடப்புக் காலியிடங்கள் என அனைத்துக்கும் ஒன்றாக சேர்த்து ஒரே தரவரிசைப் பட்டியல் தயாரித்துள்ள ஆசிரியர் தேர்வு வாரியம், அதில் மட்டும் ஒட்டுமொத்தமாக 20% இட ஒதுக்கீடு வழங்கியுள்ளது. அதுமட்டுமின்றி, பொதுப்பிரிவில்  தேர்ந்தெடுக்கப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரையும் இடஒதுக்கீட்டுப் பிரிவினராக தேர்வு வாரியம் கணக்குக் காட்டியுள்ளது. தமிழ் பாடத்திற்கான  நடப்புக் காலியிடங்கள் 245 என்பதால், அதில் 31%, அதாவது 76 இடங்கள் பொதுப்பிரிவினருக்கானதாகும். அவற்றில் 28 இடங்களை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் கைப்பற்றியுள்ளனர். 

அந்த 28 இடங்களையும் பொதுப்பிரிவு இடங்களாக கருதி, அவர்கள் தவிர்த்து மீதமுள்ள மிகவும் பிற்படுத்தப் பட்டோருக்கு 20% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அவ்வாறு செய்யப்படவில்லை.
இட ஒதுக்கீட்டு விதி முறையாக பின்பற்றப்பட்டிருந்தால், பின்னடைவுப் பணியிடங்களில் 54 பேர், பொதுப்பிரிவில் 28 பேர், இட ஒதுக்கீட்டில் 49 பேர் என மொத்தம் 131 மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு ஆசிரியர் பணி கிடைத்திருக்க வேண்டும். ஆனால், 28 பேர் குறைவாக 103 பேருக்கு மட்டும் தான் வேலை கிடைத்துள்ளது. 

அதேபோல், பொருளாதார ஆசிரியர்கள் நியமனத்தில் 12 பணியிடங்கள், வரலாற்று ஆசிரியர்கள் நியமனத்தில் 6 பணியிடங்கள் என்று மொத்தம் 46 மிகவும் பிற்பட்டோருக்கு  சமூக நீதி மறுக்கப்பட்ட்டிருக்கிறது. மேலும், பட்டியலினத்தவர்கள் 6 பேருக்கும், அருந்ததியர் 2 பேருக்கும் இதேபோல் சமூக அநீதி இழைக்கப்பட்டிருக்கிறது. இதை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது.


முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களின் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவர்களுக்கு இழைக்கப்படும் அநீதியை புரிந்து கொள்ளவும், சமூக நீதியை காப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் ஆசிரியர் தேர்வு வாரியம் தயாராக இல்லை. 

எனவே, இந்த விஷயத்தில் முதலமைச்சரும், பள்ளிக்கல்வி அமைச்சரும் தலையிட்டு ஆசிரியர்கள் நியமனத்தில் சமூக நீதியை நிலை நிறுத்த முன்வர வேண்டும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

55 comments:

 1. Ramadass sir romba kastapattu pass panni ippadan select ahirukom nangalum BC dan correct a dan irruku enga life a waste pannadeenga

  ReplyDelete
  Replies
  1. Select Ahium innum evlo kastatha thaa thangurathu pothum yaa engala Vaala vidunga🙏🙏🙏🙏🙏🙏

   Delete
  2. Sam sir உங்களுக்காவது 31%இருக்கு.எங்களுக்கு இருப்பதே 20%தான். அந்த உரிமையையும் தட்டிப் பறிப்பது. எஎந்த விதத்தில் நியாயம்
   அஉங்களைப்போல்தான் மற்றவரும் படித்திருப்பார்கள்

   Delete
  3. அப்போ நீங்க பிசி catagory ல வாங்க.. backlog எல்லாம் general ல அதே பன்னிடுவாங்க பரவால்லயா???

   Delete
  4. சரியா சொன்னீங்க ரொம்ப நன்றி

   Delete
  5. yes bc ku category um varithu GT um varithu.. GT na bc ya..? GT na all cast top marks eduthavanga than irupanga ela exam selection list laium.. but intha selection list la matum rank nu sola kaaranam..? so corruption kandipa nadanthiruku..

   Delete
 2. Sengottayan good and honest minister ennoda vote always sengottayan team Ku dan engalae madri kastapatavanga nermaya select ahirukom thanks sengottayan sir

  ReplyDelete
  Replies
  1. Aama pottuttu po.. tamilnadu innum 5 varusam bjp ku arumaiyaave irukkattum.
   Nee padicha kalvi unakku ithayam kaththu koduchuchaa .. unakku nadakkura visayatha vachu naatula nadakkura athanai visayathai yum kadanthu poiduveenga.. intha suyanalam kurugiya sinthanai arasiyalvaathigalin aruvadai

   Delete
  2. டே வாழவிடுங்கடா .

   Delete
  3. டே வாழவிடுங்கடா .

   Delete
  4. Rajavelsr.welcome ur coment
   சுயநலமின்றி பொதுத்தலத்தில் சீந்திப்போர். உங்கள் கருத்தினை ஏற்றுக்கொள்வர். உண்மையைத் தான் சொல்லியுள்ளீர்கள்..General turn
   அனைத்து சமூகத்திற்கும் பங்கிட்டுக்கொடுக்க வேண்டும். Gt இல் 69%பின்பற்றப்படவேண்டும்.என்று நான் சொல்லவில்லை.Rajavel sir சொல்லவில்லை சட்டம் சொல்கிறது.

   Delete
  5. இதற்கு முன் நடந்த தேர்வில் கடைபிடித்தை தான் தற்பொழுதும் கடைபிடித்துள்ளனர்..GT community கடைபிடிப்பார்கள்...

   Delete
  6. நான் ராமதாஸ் அறிக்கையை சரி என்று சொல்லவே இல்லை

   அதே சமயம் சுயநலத்திற்காக ஒருவருக்கு வாக்களிப்பது எவ்வளவு மடத்தனம் என்று சொன்னேன் அவ்ளோ தான்.. நானும் BC catagory தான்..

   Delete
 3. BC இன மக்களே விழித்துக்கெ ாள்

  ReplyDelete
 4. BC இன மக்களே விழித்துக்கெ ாள்

  ReplyDelete
  Replies
  1. எதுக்கு பாரதி Mam மீதியிருக்கிற Sc mbc சீட்டையும் திருடுவதற்கா

   Delete
  2. 2017 Trb exams மீதமுள்ள 400 vacant BC COMMUNITY loss

   Delete
  3. 2017 Trb exams மீதமுள்ள 400 vacant BC COMMUNITY loss

   Delete
  4. 2017 Trb exams மீதமுள்ள 400 vacant BC COMMUNITY loss

   Delete
  5. Backlog vacant loss என்றால் சட்டப்படிகோர்ட்டுக்குச் சென்று கேளுங்கள். அவரவர் உரிமை அவரவர்க்கே

   Delete
  6. அதான் நாங்களும் சொல்றோம் mbc எல்லாம் court கு போங்க.. இங்க அறிக்கைல கம்பு சுத்த வேண்டாம் . எல்லாம் rule படி தான் நடக்கும்..

   Delete
 5. ராமதாஸ் கூறியது சரிதான் தமிழ் 114 மதிப்பெண் எந்த பிரிவில் வரவேண்டும் பொதுப்பிரிவிலா அல்லது இடஒதுக்கீடு பிரிவில் கூறுங்கள்

  ReplyDelete
  Replies
  1. அறிவாளி backlog தான் முதலில் நிரப்ப வேண்டும் என்ற விதி உள்ளது.. வேண்டுமானால் கோர்ட்ல கேஸ் போடுங்கள்

   Delete
  2. ராஜவேல் sir u r correct, Mr unknown first backlog thaan fill up pannavendum oruvela backlog il GT irunthirunthaal 114 GT il thaan fill up panniyiruppargal but backlog GT 2017 pg trb il fill seithuvittanar so ipo backlog il community mattum thaan irukku poi check pannunga

   Delete
 6. BC.26.5 ku bathil 16.5 koduthal sammathama.

  ReplyDelete
 7. பாரதி Mam நீங்கள் வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்கள் வெற்றி எதிர்பார்த்து அது இல்லை எனும் எங்கள் மனவலியை புரிந்து கொள்ளுங்கள்

  ReplyDelete
  Replies
  1. Hai Dont waste your to kalviseithi study to the bro exam (I tried past 10 years but this time my no came provisional list)

   Delete
  2. Hai Dont waste your to kalviseithi study to the bro exam (I tried past 10 years but this time my no came provisional list)

   Delete
  3. Correct sir ellarum next exam ippavavae paddeenga don't waste your time

   Delete
 8. Trb does not follow quota wise for all cast

  ReplyDelete
 9. Replies
  1. Trb board done a good job, wellprepare for next exam .ADmk one of best government

   Delete
 10. 6GTSG.BC க்கும்
  1GTSG.SC க்கும் கொடுத்துவிட்டு MBCக்கு GTSG.பட்டை நாமம் போட்டுள்ளான் துரோகி என் பாவம் உன்னை சும்மாவிடாதுடா😭

  ReplyDelete
 11. Very worst govt.very very worst trb.இப்பொழுது வேலைகிடைக்கும் என்ற நம்பிக்கையில் மற்றவர் இடஒதுகீட்டை பறிக்ககூடாது.மற்வாயில் மண்ணைப்போடகூடாது.நீதி அனைவருக்கும் சமம்.Very worst govt.

  ReplyDelete
 12. BC backlog vacancy fill panatha intha govt...

  ReplyDelete
 13. BC backlog this year expired nu oru go vanthathe so next trb pg la BC ku athigamaga fill pannuvaanga appavum backlogil thaan fill pannuvaanga

  ReplyDelete
 14. Pg trb second list Varuma friends?

  ReplyDelete
 15. When can we expect next notification?

  ReplyDelete
 16. ம.க., நிறுவனர் ராமதாஸ்: தமிழக அரசு பள்ளிகளில், முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்தில், இட ஒதுக்கீடு பின்பற்றப்படாமல் புறக்கணிக்கப்பட்டுள்ளது. பல முறை சுட்டிக்காட்டியும், ஆசிரியர் தேர்வு வாரியம், இட ஒதுக்கீடு முறையை பின்பற்றாதது வருத்தம் அளிக்கிறது.

  'டவுட்' தனபாலு: நீங்கள் தினமும் ஏதாவது ஒரு பிரச்னை பற்றி, அறிக்கை அளிப்பதை, ஜனநாயக கடமையாக கொண்டுள்ளீர்கள். ஆனால், உண்மையான ஜனநாயக கடமையை பின்பற்றும் அரசு மற்றும் அரசு அலுவலர்களுக்கு என்னென்ன நிர்பந்தம் இருந்ததோ தெரியவில்லை. அதைப்பற்றி நீங்கள் யோசிக்க மாட்டீர்களோ என்பதே தேர்வர்களுக்கு, 'டவுட்' ஆக உள்ளது.

  ReplyDelete
 17. ம.க., நிறுவனர் ராமதாஸ்: தமிழக அரசு பள்ளிகளில், முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்தில், இட ஒதுக்கீடு பின்பற்றப்படாமல் புறக்கணிக்கப்பட்டுள்ளது. பல முறை சுட்டிக்காட்டியும், ஆசிரியர் தேர்வு வாரியம், இட ஒதுக்கீடு முறையை பின்பற்றாதது வருத்தம் அளிக்கிறது.

  'டவுட்' தனபாலு: நீங்கள் தினமும் ஏதாவது ஒரு பிரச்னை பற்றி, அறிக்கை அளிப்பதை, ஜனநாயக கடமையாக கொண்டுள்ளீர்கள். ஆனால், உண்மையான ஜனநாயக கடமையை பின்பற்றும் அரசு மற்றும் அரசு அலுவலர்களுக்கு என்னென்ன நிர்பந்தம் இருந்ததோ தெரியவில்லை. அதைப்பற்றி நீங்கள் யோசிக்க மாட்டீர்களோ என்பதே தேர்வர்களுக்கு, 'டவுட்' ஆக உள்ளது.

  ReplyDelete
 18. ம.க., நிறுவனர் ராமதாஸ்: தமிழக அரசு பள்ளிகளில், முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்தில், இட ஒதுக்கீடு பின்பற்றப்படாமல் புறக்கணிக்கப்பட்டுள்ளது. பல முறை சுட்டிக்காட்டியும், ஆசிரியர் தேர்வு வாரியம், இட ஒதுக்கீடு முறையை பின்பற்றாதது வருத்தம் அளிக்கிறது.

  'டவுட்' தனபாலு: நீங்கள் தினமும் ஏதாவது ஒரு பிரச்னை பற்றி, அறிக்கை அளிப்பதை, ஜனநாயக கடமையாக கொண்டுள்ளீர்கள். ஆனால், உண்மையான ஜனநாயக கடமையை பின்பற்றும் அரசு மற்றும் அரசு அலுவலர்களுக்கு என்னென்ன நிர்பந்தம் இருந்ததோ தெரியவில்லை. அதைப்பற்றி நீங்கள் யோசிக்க மாட்டீர்களோ என்பதே தேர்வர்களுக்கு, 'டவுட்' ஆக உள்ளது.

  ReplyDelete
 19. Backlog vacancy correct follow panni potrukanga ethuku munadi irutha trb la evalavu backlog vacancy illa so athanala yarukum theriya villai yarum kekala epa bulk ah vacancy irukarathu nalla ellorum kekaringa

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி