அரசியல் கட்சிகளின் நிகழ்ச்சிகள், கூட்டங்களில் அரசு ஊழியர்கள் கலந்து கொள்வது சட்டத்துக்கு புறம்பானதல்ல என்று திரிபுரா உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 12, 2020

அரசியல் கட்சிகளின் நிகழ்ச்சிகள், கூட்டங்களில் அரசு ஊழியர்கள் கலந்து கொள்வது சட்டத்துக்கு புறம்பானதல்ல என்று திரிபுரா உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.


திரிபுரா மீன்வளத்துறை அதிகாரியான லிபிகா பால் 2018ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஓய்வு பெற இருந்தார்.

ஓய்வுபெறுவதற்கு 4 நாள்கள் இருந்த நிலையில், அரசியல் கட்சி கூட்டத்தில் கலந்து கொண்ட காரணத்துக்காகவும், பாஜகவுக்கு எதிராக சமூகவலைதளத்தில் கருத்துகளை பதிவிட்ட காரணத்துக்காகவும் பணியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டார்.

அவருக்கு எதிராக விசாரணை கோரி தொடுக்கப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்ட உயர்நீதிமன்றம், அரசியல் கூட்டங்களில் கலந்து கொண்டதை வைத்து மட்டும், அரசியலில் அரசு ஊழியர் ஈடுபாடு கொண்டுள்ளார் என முடிவு செய்ய முடியாது என்று தெரிவித்தது.

அதேபோல் அரசு ஊழியர்கள் சுதந்திரமாக சமூகவலைதளங்களில் கருத்துகளை பதிவிடலாம் என்றும் உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.

1 comment:

  1. ஜவ்வாது மலையில் ஓர் ஆசிரியை வெளியில் சமூக நலன் எனும் பெயரில் வசூல் செய்து தனது பள்ளி முழுவதும் தான் சார்ந்த அரசியல் கட்சியின் நிறத்தையே அடித்துவிட்டதாக தகவல்... அதுமட்டுமின்றி தன்னிடம் பயிலும் பிள்ளைகளிடம் வாழ்க்கைத் திறன் வளர்ப்பு எனும் பெயரில் தனது கட்சி சார்ந்த சிந்தனைகளை ஊட்டி வருவதாக தகவல்.....

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி