வனக்காப்பாளர் பணிக்கான தேர்வுக்கு, ஆன்லைன் வாயிலாக இன்று முதல் விண்ணப்பம்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 25, 2020

வனக்காப்பாளர் பணிக்கான தேர்வுக்கு, ஆன்லைன் வாயிலாக இன்று முதல் விண்ணப்பம்!


வனக்காப்பாளர் பணிக்கான தேர்வுக்கு, ஆன்லைன் வாயிலாக இன்று முதல் விண்ணப்பிக்கலாம். அதற்கான வழிமுறைகளை, வனத்துறை ளியிட்டுள்ளது.

வனத்துறையில், 320வனக்காப்பாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான ஆன்லைன் தேர்வு, விரைவில் நடக்க உள்ளது. தேர்வில் பங்கேற்க விரும்புவோர், ஆன்லைன் முறையில் விண்ணப்பங்களை பதிவு செய்வது, இன்று துவங்கி, பிப்., 14 வரை நடைபெற உள்ளது. வனத்துறை இணையதளத்தில், இதற்கான பிரத்யேக வசதி செய்யப்பட்டுள்ளது. அந்தந்த பகுதிகளில் உள்ள, இ - சேவை மையங்கள் வாயிலாகவும், விண்ணப்பங்களை பதிவு செய்யலாம். அதற்கான நடவடிக்கையையும், வனத்துறை எடுத்துள்ளது.

விண்ணப்பதாரர்கள் தங்கள் விபரங்களை உள்ளீடு செய்வது, ஆவணங்களை ஸ்கேன் செய்து இணைப்பது, கட்டணம் செலுத்துவதற்கான வழிமுறைகளை, இணையதளத்தில் வனத்துறை வெளியிட்டுள்ளது. தவறான விவரங்கள், போலி சான்றுகள் உள்ளீடு செய்யப்பட்டால், விண்ணப்பம் நிராகரிக்கப்படும் என்றும், வனத்துறை எச்சரித்துள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி