CTET - மத்திய ஆசிரியர் தகுதி தேர்வு அறிவிப்பு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 23, 2020

CTET - மத்திய ஆசிரியர் தகுதி தேர்வு அறிவிப்பு!


மத்திய ஆசிரியர் தகுதி தேர்வு, ஜூலை, 5ல் நடத்தப்படும்' என, சி.பி.எஸ்.இ., அறிவித்துள்ளது.இதுகுறித்து, மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., வெளியிட்ட செய்திக் குறிப்பு:பள்ளி ஆசிரியர் தகுதிக்கான மத்திய ஆசிரியர் தகுதி தேர்வு, ஜூலை, 5ல் நடக்க உள்ளது. நாடு முழுவதும், 112 நகரங்களில், 20 மொழிகளில் தேர்வு நடத்தப்படும்.தேர்வு விபரங்கள் அடங்கிய முழுமையான அறிவிக்கை, வரும், 24ம் தேதி வெளியிடப்படும்.

ஆன்லைன் விண்ணப்ப பதிவும், அன்றே துவங்கி, பிப்ரவரி, 24ல் முடியும். தேர்வு கட்டணத்தை, பிப்., 27க்குள் செலுத்த வேண்டும்.இந்த தேர்வில், ஒரு தாள் எழுத வேண்டும் என்றால், பட்டியலினத்தவர், பழங்குடியினர் மற்றும் மாற்று திறனாளிகள், 500 ரூபாயும், இரண்டு தாள் எழுத வேண்டும் என்றால், 600 ரூபாயும் கட்டணம் செலுத்த வேண்டும். மற்ற பிரிவினர், ஒரு தாளுக்கு, 1,000 ரூபாயும், இரண்டு தாளுக்கும் சேர்த்து, 1,200 ரூபாயும் கட்டணம் செலுத்த வேண்டும்.

இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

1 comment:

  1. அமுதசுரபி பயிற்சி மையம்
    PG TRB தமிழ்
    கிருஷ்ணகிரி

    கடந்த ஆண்டு தேர்வில் (தமிழ் பாடத்தில்)மாநிலத்தில் இரண்டாம் இடம்.....
    Contact :9344035171, 98421385171

    (Tamil + Education ) Materials available...class starts on 01/02/2020

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி