DEE - ஆசிரியர்களின் விவரங்களை EMIS இணையதளத்தில் உள்ள Staff profile - ல் 31.01.2020 - க்குள் Update செய்ய இயக்குநர் உத்தரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 14, 2020

DEE - ஆசிரியர்களின் விவரங்களை EMIS இணையதளத்தில் உள்ள Staff profile - ல் 31.01.2020 - க்குள் Update செய்ய இயக்குநர் உத்தரவு.


தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைக் கடிதத்தில் , 31 . 08 . 2019 நிலவரப்படி ஆசிரியர் / மாணவர் பணியாளர் நிர்ணயம் செய்வது சார்பான நெறிமுறைகள் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது .

அதன் தொடர்ச்சியாக பள்ளிக் கல்வித் துறை அரசு முதன்மைச் செயலாளர் அவர்களால் ஆய்வுக் கூட்டத்தில் அறிவுறுத்தியதின் அடிப்படையில் EMIS இணையதளத்தில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கை மற்றும் ஆசிரியர்களின் எண்ணிக்கை விவரங்களின் அடிப்படையில் 2019 - 2020ஆம் கல்வியாண்டிற்கான பணியாளர் நிர்ணயம் நடைபெற இருப்பதால் , அனைத்து அரசு / அரசு நிதியுதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் உள்ள ஆசிரியர்களின் விவரங்களை EMIS இணையதளத்தில் உள்ள Staff profile - ல் 31.01.2020 - க்குள் Update செய்யும் பணி முடித்தல் வேண்டும் எனத் தெரிவிக்கப்படுகிறது . மேலும் , இனிவரும் காலங்களில் நிர்வாக மாறுதல் ஏதேனும் வழங்க நேரிடின் , EMIS இணையதளம் வாயிலாக மட்டுமே செய்யப்பட வேண்டும் எனவும் அதைத் தவிர்த்து பிற வழிகளில் ( Manual order ) ஆணை எதுவும் வழங்கக் கூடாது எனவும் திட்டவட்டமாகத் தெரிவிக்கப்படுகிறது .

மாவட்ட அளவில் குழு அமைத்து இந்தப் பணியினை விரைந்து முடித்திட நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது .

              - தொடக்கக் கல்வி இயக்குநர்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி