School Morning Prayer Activities - 13.01.2020 - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 13, 2020

School Morning Prayer Activities - 13.01.2020


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 13.01.20

திருக்குறள்


அதிகாரம்:மெய்யுணர்தல்

திருக்குறள்:357

ஓர்த்துள்ளம் உள்ளது உணரின் ஒருதலையாப்
பேர்த்துள்ள வேண்டா பிறப்பு.

விளக்கம்:

உண்மையை ஆராய்ந்து உறுதியாக உணர்பவர்கள் மீண்டும் பிறப்பு உண்டு எனக் கருத மாட்டார்கள்.

பழமொழி

If you can't bite never show your teeth.

 செய்யமுடியாத காரியத்திற்கு வாக்குறுதி கொடுக்காதே.

இரண்டொழுக்க பண்புகள்

1. எனது பள்ளி வளாகத்தின் தூய்மை, பசுமை எனது படிப்பு எனது முக்கிய குறிக்கோள்கள்.

2. இந்த வருடம் முழுவதும் என் குறிக்கோள்கள் நிறைவேற பாடுபடுவேன்.

பொன்மொழி

நினைத்த காரியங்கள் நினைத்த நேரத்தில் முடிக்க முயற்சி செய்யவில்லை எனில் வளர்ச்சிக்கு அதுவே முட்டுக்கட்டை ஆகும்..

------ராபர்ட் கோடார்ட்

பொது அறிவு

1.NABARD என்பது என்ன?

தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கி(National Bank of agriculture and rural development).

 2. உலக அளவில் காய்கறி  உற்பத்தியில் முதல் இடம் பெற்றிருக்கும் நாடு எது?

 சீனா.

English words & meanings

Radiochemistry – study of ordinary chemical reactions under radioactive circumstances. கதிர் வீச்சு உள்ள இடத்தில் நடைபெறும் வேதிவினைகள் குறித்த படிப்பு.

Reassuring - to say or do something in order to stop somebody worrying. நம்பிக்கையூட்டுதல்.

ஆரோக்ய வாழ்வு

சுண்டைக்காயை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொண்டால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டில் இருக்கும்.

Some important  abbreviations for students

Capt. - Captain.

Col. - Colonel

நீதிக்கதை

திருக்குறள் நீதிக்கதைகள்

கல்வியே அழியாத செல்வம்

குறள் :
கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு
மாடல்ல மற்றை யவை.

விளக்கம் :
கல்வி ஒன்றே அழிவற்ற செல்வமாகும். அதற்கொப்பான சிறந்த செல்வம் வேறு எதுவுமில்லை.

கதை :
கடலோரப் பகுதி கிராமமான நல்லூரில் வசித்து வந்த இரத்தினசாமி என்ற எளிய விவசாயிக்கு சொந்தமாக இருந்தது இரண்டு ஏக்கர் நிலம் மட்டுமே. அவருக்கு மாணிக்கம், முத்து என்ற இரு மகன்கள் இருந்தனர். இருவரும் பள்ளிப் படிப்பை முடித்தனர்.

இரத்தினசாமி தனது வறுமையின் காரணமாக மகன்கள் இருவரையும் அழைத்து, நீங்கள் உங்கள் கல்வியை இத்துடன் முடித்துக் கொண்டு என்னைப்போல் விவசாயத்தில் ஈடுபடுகிறீர்களா? என்று கேட்டார்.

கல்வியில் பெரிதும் நாட்டம் கொண்டிருந்த மாணிக்கம், அப்பா, நான் பொறியியல் கல்லூரியில் சேர்ந்து படித்து, எனக்கு ஒரு வளமான வாழ்க்கையை அமைத்துக் கொள்ள விரும்புகிறேன் என்றான். இளையவன் முத்து, எனக்கு படிப்பில் நாட்டமில்லை. விவசாயம் செய்யவும் விருப்பமில்லை. நான் வியாபாரம் செய்ய விரும்புகிறேன் என்றான்.

இருவருக்குமே, விவசாயத்தில் நாட்டம் இல்லாததால், இரத்தினசாமி தன் நிலத்தை விற்று, கிடைத்த தொகையை இருவருக்கும் சமமாகப் பங்கிட்டு அளித்தார். மாணிக்கம் பொறியியல் கல்லூரியில் சேர்ந்து செவ்வனே பயின்று தேறி, நல்லதொரு வேலையில் அமர்ந்தான். முத்து தனக்குக் கிடைத்த தொகையை வியாபாரத்தில் முதலீடு செய்து வியாபாரம் தொடங்கினான்.

ஆனால், சில ஆண்டுகளில் வியாபாரத்தில் பெருத்த நட்டம் ஏற்பட்டு முதலீடு செய்த தொகையை முற்றிலும் இழந்து நின்றான். மனமுடைந்து பரிதாபமாக நின்ற முத்துவை நோக்கி மாணிக்கம், தம்பி கல்வி ஒன்றே அழிவற்ற செல்வம். நான் பெற்றுள்ள கல்வி எனும் செல்வத்தினால்தான், எனக்கு நிரந்தர வருமானம் தரக்கூடிய வேலை கிடைத்தது.

ஒருவன் பெற்றுள்ள கல்வி எனும் செல்வம் காலத்தால் அழியாதது. அதை யாரும் திருடிச் செல்ல முடியாது. அதை யாராலும் சேதமாக்கவும் முடியாது. ஆனால் பணம் அவ்வாறு அல்ல, பணம் எனும் செல்வம் நிலையற்றது என்று கல்வியின் பெரும்மையை உணர்த்தினார்.

நீதி :
கல்வி யாராலும் அழிக்க முடியாத செல்வம்.

இன்றைய செய்திகள்

13..01.20

🌸பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 15, 16, 17 ஆகிய தேதிகளில் அரசு விடுமுறை என்பதால் மெட்ரோ ரயிலில் 50 சதவீதம் கட்டணத் தள்ளுபடி வழங்கப்படும் என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

🌸நிகழ் கல்வியாண்டு முதல் நடைபெறவுள்ள 5, 8-ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தோ்வுகள் எழுத ஜாதி, பிறப்புச் சான்றிதழ்கள் கட்டாயம் என்று பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.

🌸பொள்ளாச்சியை அடுத்த வடக்கிப்பாளையம் பிரிவு அருகே உள்ள மைதானத்தில் பலூன் திருவிழா சனிக்கிழமை துவங்கியது.

🌸அரபிக் கடலில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள ஐஎன்எஸ் விக்ரமாதித்யா போா்க்கப்பலில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இலகு ரக போா் விமானம் தரையிறக்கப்பட்டு, பின்னா் மீண்டும் புறப்படச் செய்து வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது.

🌸ஆஸ்திரேலியாவில் பிப்ரவரி மாதம் நடைபெறவுள்ள மகளிர் டி20 கிரிக்கெட் உலகக் கோப்பைக்கான ஹர்மான்பிரீத் தலைமையிலான 15 பேர் கொண்ட இந்திய அணி ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்பட்டது.

🌸ஆக்லாந்து கிளாஸிக் மகளிா் டென்னிஸ் போட்டி இறுதிச் சுற்றுக்கு செரீனா வில்லியம்ஸ்-பெகுலாதகுதி பெற்றுள்ளனா்.

Today's Headlines

🌸Metro rail management has announced 50% rebate in train fare due to  the government holidays declared  for pongal during January 15, 16 and 17.

🌸The School  Education Department has announced that to write public exams for 5th and 8th standards, birth certificate and community certificate are compulsory from this academic year onwards.

🌸Balloon festival was started on last saturday in vadakipalayam pirivu near pollachi.

🌸In INS-Vikramaditya battleship, which is being landed in the Arabian sea, light aircraft manufactured in India was landed and tested successfully by starting  again.

🌸For the Women T-20 Cricket World Cup, to be held in Australia during the month of February, Indian team  was announced which comprises  15 members including Harmaan Preeth.

🌸Serena Williams and Pegula got qualified  for the final round in Auckland Classic Women tennis.

Prepared by
Covai women ICT_போதிமரம்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி