பொதுத்தேர்வு எழுதும் பிளஸ் 1 மாணவர்களுக்கு செய்முறைத் தேர்வு தொடங்கியது.! - kalviseithi

Feb 21, 2020

பொதுத்தேர்வு எழுதும் பிளஸ் 1 மாணவர்களுக்கு செய்முறைத் தேர்வு தொடங்கியது.!


தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் பிளஸ் 1 மாணவ, மாணவிகளுக்கான பொதுத்தேர்வு மார்ச் 4-ம் தேதி தொடங்கி 26-ம் தேதி வரைநடைபெறுகிறது. இத்தேர்வை எழுதும் மாணவர்களுக்கான அறிவியல் செய்முறைத் தேர்வு கோவையில் புதன்கிழமை தொடங்கியது.

கோவை மாவட்டத்தில் உள்ள 200-க்கும் மேற்பட்ட பள்ளிகளில்படிக்கும் சுமார் 15 ஆயிரம் மாணவர்கள் அந்தந்த பள்ளிகளிலேயே செய்முறைத் தேர்வில் ஈடுபட்டு வருகின்றனர்.

இது குறித்து பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் கூறும்போது, "பொதுத்தேர்வு எழுதும் மேலும், பிளஸ்1 மாணவர்களுக்கான செய்முறைத்தேர்வு பிப்ரவரி 26-ம் தேதி வரை நடைபெறுகிறது. மொத்தம் 235 மையங்களில் இரண்டு கட்டங்களாக இத்தேர்வு நடைபெற்று வருகிறது. பொதுத்தேர்வைப் போலவேதேர்வு கண்காணிப்பாளர்கள், முதன்மைக் கண்காணிப்பாளர்கள், பறக்கும் படையினர் என பல்வேறு பிரிவில் 1,500 முதுகலை ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

21-ம் தேதி எஸ்எஸ்எல்சி மாணவர்களுக்கு செய்முறைத் தேர்வு நடைபெறுகிறது. அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இதேபோல் பொதுத்தேர்வு வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்கள் கண்காணிப்பு, வினாத்தாள் அனுப்புவதை ஒளிப்பதிவு செய்தல் ஆகிய பணிகளும் நடக்கின்றன" என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி