10 , 12 - ம் வகுப்புகளுக்கான வினா வங்கி புத்தகம் கிடைப்பதில் தட்டுப்பாடு!! - kalviseithi

Feb 7, 2020

10 , 12 - ம் வகுப்புகளுக்கான வினா வங்கி புத்தகம் கிடைப்பதில் தட்டுப்பாடு!!


10 , 12 - ம் வகுப்புகளுக்கான வினா வங்கி புத்தகம் கிடைப்பதில் தட்டுப்பாடு நிலவுவதால் மாண வர்கள் , பெற்றோர் அதிருப்தி அடைந்துள்ளனர்.

இதுகுறித்து மாணவர்கள் , பெற்றோர் கூறும்போது , “ கடந்த 3 நாட்களாக சென்னையில் உள்ள அனைத்து மையங்களிலும் 10 ம் வகுப்பு வினா வங்கி புத்த கம் காலியாகி விட்டதாக கூறுகின் றனர் . பிளஸ் 2 வகுப்புக் கும் சில பாடங்களுக்கே கிடைக்கிறது . கூடுதல் பிரதிகள் எப்போது வரும் என கேட்டாலும் உரிய பதில் இருப்பதில்லை . இதற்காக தினமும் விற்பனை மையங்களுக்கு அலைய வேண்டி யுள்ளது . மற்ற மாவட்டங்களிலும் இதே நிலையே நீடிக்கிறது . பொதுத்தேர்வுக்கு இன்னும் ஒரு மாதம்கூட முழுமையாக இல்லை . மாணவர்கள் நலன்கருதி அனைத்து பள்ளிகளிலும் வினா வங்கி கிடைக்கும்படி தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் . குறைந்தபட்சம் இ - புத்தகங் களை இணையதளத்தில் வெளி யிட்டாலும் பிரதி எடுத்து படிக்க லாம் ” என்றனர் .


1 comment:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி