10,11,12ஆம் வகுப்பு - பொதுத்தேர்வுக்கு வருகைபுரியாதவர்கள் விவரம்கோரி தேர்வுத்துறை இயக்குநர் உத்தரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 28, 2020

10,11,12ஆம் வகுப்பு - பொதுத்தேர்வுக்கு வருகைபுரியாதவர்கள் விவரம்கோரி தேர்வுத்துறை இயக்குநர் உத்தரவு.


முதன்மைக் கல்வி அலுவலர்கள் , தங்களது மாவட்டத்தில் உள்ள அனைத்து உயர்நிலை / மேல்நிலை தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்களுக்கும் / தலைமையாசிரியர்களுக்கும் , நடைபெறவுள்ள மார்ச் 2020 மேல்நிலை முதலாமாண்டு / இரண்டாமாண்டு / இடைநிலை பொதுத்தேர்வுகள் நடைபெறும் நாட்களில் , தேர்வுக்கு வருகைப்புரியாதோர் விவரத்தினை பின்வரும் அறிவுரைகளைப் பின்பற்றி அரசுத் தேர்வுகள் இயக்கக இணையதளத்தின் வழியாக பதிவேற்றம் செய்வதற்கு உரிய அறிவுரைகளை வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது .

1 . தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்கள் , தங்கள் தேர்வு மையத்தில் தேர்வுக்கு வருகைப்புரியாதோர் விவரத்தினை ( பாடவாரியாக ) தேர்வு நடைபெறும் நாளன்றே பிற்பகல் 4 : 00 மணிக்குள் தங்கள் தேர்வு மையத்திற்கான USER ID மற்றும் Password - ஐ பயன்படுத்தி , அரசுத் தேர்வுகள் இயக்கக இணையதளத்தின் வாயிலாக ( www . dge . tn . gov . in - - - click here to access online portal - - Higher Secondary Second Year March 2020 | Higher Secondary First Year March 2020 | SSLC March 2020 - - User ID - - Password - - கொண்டு - - Absentees Details பதிவேற்றம் செய்திட வேண்டும்.

2 . தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்கள் , தங்கள் தேர்வு மையத்தில் தேர்வுக்கு வருகை புரியாதவர்கள் எவரும் இல்லை எனில் , கண்டிப்பாக இணையதளத்தின் வாயிலாக NIL REPORT - ஐ ( Day | Subject wise ) பதிவு செய்திட வேண்டும் .

3 . தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்கள் , தேர்வு நடைபெறும் நாட்களில் ஒவ்வொரு நாளும் பிற்பகல் 4 : 00 மணிக்குள் இப்பணியினை கண்டிப்பாக செய்து முடிக்கவேண்டும்.


No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி