5ந்தே நிமிடத்தில் எவ்வாறு PAN அட்டை பெறுவது? எளிய வழிமுறைகள்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 25, 2020

5ந்தே நிமிடத்தில் எவ்வாறு PAN அட்டை பெறுவது? எளிய வழிமுறைகள்!


மத்திய நேரடி வரிகள் வாரியம் (Central Board of Direct Taxes CBDT) உடனடி நிரந்தர கணக்கு எண் (Permanent Account Number - PAN)'ஐ விண்ணப்பதாரர்களுக்கு வழங்கும் வசதியை உருவாக்கியுள்ளது.

விண்ணப்பதாரர்கள் ஐந்து வினாடிகளில் தங்கள் ஆதார் அட்டையின் உதவியோடு பான் எண்ணை உடனடியாக உருவாக்கி கொள்ள முடியும். புதிய பான் எண் பெற விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் இந்த வசதியை வருமான வரித்துறை இணையதள முகவரியில் //www.incometaxindiaefiling.gov.in/home பெறலாம்.

இந்த இணையதள முகவரிக்கு சென்று இடது புறத்தில் உள்ள Quick Links என்ற மெனுவுக்கு கீழ் தோன்றும் 'Instant PAN through Aadhaar' என்பதை சொடுக்கவும். இந்த தேர்வை சொடுக்கியவுடன் ஒரு புதிய சாளரம் (window) திறக்கும் அதில் இரண்டு தேர்வுகள் இருக்கும் -
ஒன்று புதிய பான் பெற (Get New PAN) மற்றொன்று ஏற்கனவே விண்ணப்பித்துள்ள பான்' எண்ணை பதிவிறக்கம் செய்ய அல்லது அதன் நிலையை தெரிந்து கொள்ள (Check Status/ download PAN).
Get New PAN என்பதை சொடுக்கியவுடன் அடுத்து வரும் சாளரத்தில் பயனர் தனது ஆதார் எண் மற்றும் 'Captcha' உறுதி செய்யும் (confirmation code) குறியீடையும் உள்ளீடு செய்ய வேண்டும். மேலும் பயனர் ஆதார் மூலம் பான் பெறும் அனைத்து விதிமுறைகளையும் நிறைவேற்றியுள்ளார் என்பதையும் உறுதி செய்ய வேண்டும்.
அடுத்து ஒரு ஒருமுறை பயன்படுத்தும் கடவுச்சொல் (one time password) விண்ணப்பதாரரின் கைபேசி எண்ணிற்கு வரும் அதை உள்ளீடு செய்த உடன் ஆதாரில் உள்ள தகவல்கள் சரிபார்க்கப்படும். சரிபார்த்த பிறகு விண்ணப்பதாரருக்கு பான் எண் வழங்கப்படும்.

ஆதார் அட்டை மூலம் பான் பெற விண்ணப்பிக்க, பயனாளர் கீழ் குறிப்பிட்டுள்ள நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டும் இதற்கு முன்பு விண்ணப்பதாரருக்கு பான் எண் ஒதுக்கப்பட்டிருக்க கூடாது விண்ணப்பதாரரின் கைபேசி எண் ஆதார் எண்ணோடு இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.

ஆதாரில் விண்ணப்பதாரரின் முழு பிறந்த தேதி இருக்க வேண்டும். விண்ணப்பிக்கும் போது விண்ணாப்பதாரர் 18 வயதுக்கு கீழ் உள்ளவராக இருக்க கூடாது. எதற்காக நீங்கள் உடனடி பான் வசதியை பயன்படுத்த வேண்டும்.
ஆதார் மூலமான பான் அட்டை பெற விண்ணப்பிப்பதில் பல நன்மைகள் உள்ளன. ஆதார் மூலமாக பான் பெற விண்ணப்பிப்பது முற்றிலும் இலவசம் விண்ணப்பிக்கும் நடைமுறை முற்றிலும் எளிதானது மேலும் காகிதமற்ற நடைமுறை.

5 comments:

  1. TRB-POLYTECHNIC MATHS, ENGLISH, EEE, EC,a nd MECH
    FOR ADMISSION CONTACT ARUN ACADEMY ERODE. CELL -9944500245 (Material available)

    ReplyDelete
  2. After Pan number generates then how should we get Pancard

    ReplyDelete
  3. My mother does not have mobile number connected with Aadhar card. Do we need to update the Aadhar card first and then apply PAN card ?

    ReplyDelete
  4. Its simple in Income Tax online site. Choose Instant PAN through Aadhar. Click Get New PAN option. Provide your Aadhar number and validate with OTP. Then PAN card number will be generated in 15-20 mins and sent to your mobile number.

    Then go to same Income tax site (Instant PAN through Aadhar), click "Check Status/Download PAN" option. Enter your Aadhar number and validate OTP. You can download PAN card after OTP validation.

    Thats all. Simple process.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி