வனக்காப்பாளர் பணி தேர்விற்கு இன்றுமுதல் நுழைவுச்சீட்டு! - kalviseithi

Feb 29, 2020

வனக்காப்பாளர் பணி தேர்விற்கு இன்றுமுதல் நுழைவுச்சீட்டு!


வனத்துறையில் காலியாக உள்ள, 320 வனக்காப்பாளர் பணிக்கான தேர்வில் பங்கேற்க, 66 ஆயிரத்து, 750 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

இவர்களுக்கான, 'ஹால் டிக்கெட்' இன்று முதல் வழங்கப்படும் என, வனச்சீருடை பணியாளர் தேர்வு குழுமம் அறிவித்துள்ளது.தமிழக வனத்துறையில், 320 வனக்காப்பாளர் பணியிடங்களை நிரப்ப, மார்ச், 8ல் ஆன்லைன் தேர்வு நடக்க உள்ளது. இதில் பங்கேற்க, ஆன்லைன் முறையில் விண்ணப்ப பதிவு மற்றும் திருத்த பணிகள் முடிவடைந்துள்ளன; 66 ஆயிரத்து, 750 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

இவர்களுக்கான தேர்வு மையங்கள் ஒதுக்கும் பணிகள், இறுதி கட்டத்தை அடைந்துள்ளன.தேர்வுக்கான, ஹால் டிக்கெட் இன்று முதல் வழங்கப்பட உள்ளது. விண்ணப்பதாரர்கள், வனச்சீருடை பணியாளர் தேர்வு குழும இணைய தளத்தில் இருந்து, ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.இதற்கான வழிமுறைகள், விண்ணப்பதாரர்களுக்கு அனுப்பப்பட்டு உள்ளதாக வனத்துறை அறிவித்துள்ளது.

1 comment:

  1. TRB-POLYTECHNIC MATHS, ENGLISH, FOR ADMISSION CONTACT
    ARUN ACADEMY ERODE. CELL -9944500245 (Material available)

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி