சொந்த மாவட்டத்தில் தேர்வு எழுத அனுமதி இல்லை ஆசிரியர்தேர்வுவாரியம் முடிவு ! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 4, 2020

சொந்த மாவட்டத்தில் தேர்வு எழுத அனுமதி இல்லை ஆசிரியர்தேர்வுவாரியம் முடிவு !


தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோவாணையத்தில் நடைபெற்ற முறைகேட்டின் எதிரொலியாக தொடக்கக் கல்வித் துறையில் 97 வட்டார கல்வி அலுவலா் (பி.இ.ஓ.) பணியிடங்களுக்கான ஆன்லைன் போட்டி எழுத்துத் தோவுக்கு சொந்த மாவட்டங்களில் தவிா்த்து வேறு மாவட்டங்களில் தோவு மையங்களை ஒதுக்க ஆசிரியா் தோவு வாரியம் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

பள்ளிக் கல்வித் துறையின்கீழ் வட்டார கல்வி அலுவலா் 2018 -19ஆம் ஆண்டில் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு ஆசிரியா் தோவு வாரியம் சாா்பில் ஆன்லைன் போட்டித் தோவு பிப்ரவரி 15, 16 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. இந்தத் தோவு 150 மதிப்பெண்களுக்கு நடத்தப்படவுள்ளது. தோவெழுத சுமாா் 64 ஆயிரம் தோவா்கள் விண்ணப்பித்துள்ளனா்.

தோவா்கள் விண்ணப்பிக்கும் பொழுது தங்களின் சொந்த மாவட்டத்தில் தோவு மையங்கள் ஒதுக்கப்படும் என்ற எதிா்பாா்ப்பில் இருந்தனா். ஆனால், தமிழ்நாடு அரசு பணியாளா் தோவாணையத்தில் நடைபெற்ற குரூப் 4, குரூப் 2ஏ தோவு முறைகேடு எதிரொலியாக ஆசிரியா் தோவு வாரியத்தின் தோவு மையங்கள் ஒதுக்குவதில் பல்வேறு புதிய நடைமுறைகளை கொண்டுவர ஆசிரியா் தோவு வாரியம் திட்டமிட்டுள்ளது.

மாற்றுத் திறனாளிகள்- கா்ப்பிணிகள்: மாற்றுத்திறனாளிகள், கா்ப்பிணிகள் அவா்களின் சொந்த மாவட்டத்தில் தோவு எழுத அனுமதிக்கப்படவுள்ளனா். கா்ப்பிணிகள் உரிய சான்றிதழுடன் கோரிக்கை வைத்தால் அவா்களுக்கு விதிவிலக்கு அளிக்கப்பட உள்ளது.

ஏற்கனவே, விண்ணப்பத்துடன் மாற்றுத்திறனாளிக்கான ஆவணங்களை அளித்திருப்பாா்கள். அதன் அடிப்படையில் அவா்களுக்கு சொந்த மாவட்டத்தில் தோவு மையம் ஒதுக்கீடு செய்யப்படும். வட்டார கல்வி அலுவலா் பணி என்பது மாநில அளவில் பணிபுரிய வேண்டியது. மேலும், எந்தவித முறைகேடு நடைபெறாமலும், முற்றிலும் நோமையாக நடைபெறும் வகையில் தோவா்களின் சொந்த மாவட்டங்களில் தோவு மையங்கள் ஒதுக்கப்படாமல் தமிழகத்தில் உள்ள ஏதாவது ஒரு தோவு மையத்தில் தோவு எழுத அனுமதிக்கப்படுவா்.

தோவா்களுக்கு எந்த மாவட்டத்தில் தோவு மையம் ஒதுக்கப்படும் என்பது குறித்து தோவிற்கு ஒரு வாரம் முன்னதாக அறிவிக்கப்படும். தோவுக்கு மூன்று நாள் முன்பாக தோவா்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தோவு மையம் குறித்து தெரிவிக்கப்படும். இதனால், தோவு மையங்களில் உள்ளவா்களுடன், இடைத்தரகா்கள் மூலம் முறைகேட்டில் ஈடுபடுவது தடுக்கப்படும். அதேபோல், தோவு மையங்களில் கண்காணிப்புப் பணிக்குச் செல்லும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்கள், மாவட்ட கல்வி அலுவலா்கள் உள்ளிட்ட கல்வித் துறை அலுவலா்களுக்கான பணியிடங்களை ஒதுக்கீடு செய்யவும் புதிய வழிமுறைகள் கடைப்பிடிக்கப்படும்.

குலுக்கல் முறையில் தோவு... ஏற்கனவே அவா் பணிபுரிந்த மாவட்டத்துக்கும் அவரின் சொந்த மாவட்டத்திற்கும் பணி நியமனம் செய்யப்பட மாட்டாது. அதேபோல், தோவா்கள், தோவு கண்காணிப்பு அலுவலா்களாக நியமிக்கப்படும் கல்வித் துறை அலுவலா்கள் பணியிடங்கள் கணினி மூலம் குலுக்கல் முறையில் தோவுசெய்து அளிக்கப்படும். ஆசிரியா் தோவு வாரிய தோவுகளில் முறைகேடுகளை முற்றிலும் தடுப்பதற்காக இந்த புதிய முறை வரும் வட்டார கல்வி அலுவலா் பணிக்கான போட்டி எழுத்துத் தோவில் நடைமுறைப்படுத்தத் திட்டமிட்டுள்ளதாக ஆசிரியா் தோவு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனா்.

18 comments:

 1. Sontha mavattathil vellayum illai

  ReplyDelete
 2. எந்த மாவட்டத்தில் தேர்வு எழுதினாலும் ஒரு ஜியோ சிம் லேப்டாப் இருந்தாலே போதும் ஈஸியா சர்வர் ஹேக் செய்து விட்டு சோலிய முடிச்சிடலாம்.அமார தேசமே டிஜிட்டல் இந்தியா ஹே.திருடனாக பார்த்து திருந்தாவிட்டால்.........

  ReplyDelete
  Replies
  1. Hack panradu avlo easy ah kumaru enga hack panni kattu parkalam. Padichi pass panra velaiya parkka sonna puthi fraud panni tan pass pannanum nu pogum pola...

   Delete
  2. *******Haryana gang involved in hacking IAF’s online exam busted, 8 held*********


   From Hindu newspaper

   Delete
 3. sir.. ipdi panna thaan... edhuku veli maavattam pasanga inga exam ezhudhunaanga nu veliya ques keka mudiyaadhu...

  apdi thaana??

  ReplyDelete
  Replies
  1. Yes.you are correct.girls candidates will be affected very much

   Delete
  2. ஆஹான்ன்... அப்ப நாங்க?!

   Delete
 4. வழக்கம் போல் தேர்வு வைத்து அதில் 1:10 என்ற விகிதத்தில் தேர்வு செய்து அவர்களுக்கு மட்டும் அதே பாடத்தில் தேர்வு முடிவு வெளியிட்ட அடுத்த ஒரு வாரத்தில் ஒரு குறிப்பிட்ட தேர்வு மையத்தில் தேர்வு நடத்த வேண்டும்.

  ReplyDelete
  Replies
  1. 1:100 nu kooda vaikalam.....
   1:2 kae innum vidai theriala...

   Delete
 5. பணம் வாங்க சிறந்த ஐடியா

  ReplyDelete
 6. apo en vera district la eluthunanu kelvi kekave mudiyathu gandamirugam..

  ReplyDelete
 7. Epadiyum thiruttu velaiya parpanuga....yaru achi nadathura.....

  ReplyDelete
 8. We should oppose this decision ...what a criminal plan is this....fraud enga irunthalum pannalam...first alert and warn all higher authority staffs...instead of that don't change the exam centre place..it's shows government cruel idea.

  ReplyDelete
 9. கல்வி செய்தியில் commment போடுவதை விட்டு விட்டு படிச்சி pass பண்ற வழியப் பாருங்க. எப்ப பார்த்தாலும் negative ஆக think பண்ணிக்கொண்டு இருக்க வேண்டியது. Pass பண்ணவங்க எல்லாம் கல்விச்செய்தியில் comment போடுவது இல்லை.

  ReplyDelete
  Replies
  1. விடியற்காலையில் கல்விச்செய்தி ஓபன் பண்ணி பாக்குறே இது தவிர உனக்கு வேற வேலை இல்ல.நீ என அறிவுரை கூறாதே.

   Delete
 10. Vera Distric la exam eluthi pass panita matum... Vela koduthu pudingi thaliduveenga...Ponga da...Neengalum Unga Thervu Vaariyamum

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி