அரசுப் பள்ளிகளில் 'உயர் தொழில்நுட்ப லேப்' வசதி வரும் கல்வியாண்டில் முழுமையாக அமல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 29, 2020

அரசுப் பள்ளிகளில் 'உயர் தொழில்நுட்ப லேப்' வசதி வரும் கல்வியாண்டில் முழுமையாக அமல்


அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் கணினித் திறனை மேம்படுத்த,' ஹைடெக் - லேப்' அமைக்கப்பட உள்ளன.தமிழகத்தில் பள்ளி படிப்பை முடித்ததும், உயர்க்கல்விக்கு செல்லும் போது, அதற்கான நுழைவுத்தேர்வு, போட்டித்தேர்வுகள், அலுவலகப் பணிகள் பெரும்பாலும், கணினி சார்ந்தவையாகவே உள்ளன.

இதனால், அரசுப் பள்ளி மாணவ, மாணவியருக்கு, கணினிப் பயிற்சியை வழங்க பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது.இதுகுறித்து, கல்வித் துறை அதிகாரிகள் கூறியதாவது:அரசுப் பள்ளிகளில் உயர் தொழில்நுட்ப ஆய்வகம் (ெஹ டெக் - லேப்) அமைக்கும் பணி துவங்கியுள்ளது.

உயர்நிலைப்பள்ளிகளில், 11 கணினிகளும், மேல்நிலைப்பள்ளிகளில், 21 கணினிகளும் வழங்கப்பட உள்ளன.கடந்த மாதம், ஒன்பதாம் வகுப்பு முதல், பிளஸ் 2 மாணவர்களுக்கு, கணினி வழியில் திறன் சோதனை தேர்வுகள் நடத்தப்பட்டன.புதிய பாடத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில், பாடம் சார்ந்த விரிவாக கூடுதல் தகவல்களுக்கு,'க்யூஆர்' கோடு என்ற வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த வசதியை மாணவர்கள் கணினி வழியாக பயன்படுத்தி கொள்ளலாம்.

பாடவாரியாக, எளிமையான முறையில் பதிவேற்றம் செய்து புரிந்து கொள்வது, ஆன்லைன் தேர்வு குறித்த தெளிவுகளை பெறுவது என பல வகைகயில் மாணவர்களுக்கு,' ஹை டெக் லேப்'பில் பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன.அதற்கேற்ப, ஒவ்வொரு வகுப்புக்கும் வாரத்துக்கு, இரண்டு பாட வேளை, கணினி சார்ந்த வகுப்புக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், கால அட்டவணை தயார் செய்யப்பட உள்ளது. வரும் கல்வியாண்டு முதல் முழுமையாக அமல்படுத்தப்பட உள்ளது.இவ்வாறு, அவர்கள் கூறினர். 

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி