Feb 6, 2020
ஊதிய குறை தீர்க்கும் கமிட்டி கூட்டம் பகுதிநேர ஆசிரியர்கள் பங்கேற்பு.
5.2.2020ல் அழைப்பின் பேரில் பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர்கள் ராஜாத்தி, சத்தியராஜ் என மூன்று நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இதில் கடந்த 9 ஆண்டுகளாக ரூ.7700 குறைந்த தொகுப்பூதியத்தில் குடும்பங்களை கவனிக்க முடியாமல் மிகுந்த சிரமப்படுவதை வேதனையுடன் தெரிவித்து உள்ளார்கள். ஊதிய உயர்வுக்கு வழி வகுக்கும் வகையில் பணிநியமன அரசாணை 177ன்படி ஒரு பகுதிநேர ஆசிரியரே 4 பள்ளிகளில் பணிபுரிந்து அதற்குரிய சம்பளத்தை அந்தந்த பள்ளிகளிலே பெற்று கொள்ளலாம் என்றுள்ளதை அரசு அமுல்செய்தால் ஒவ்வொருவரும் ரூ. 30ஆயிரம் பெற முடியும். எனவே அரசுக்கு இதனை பரிந்துரை செய்யுங்கள் என வலியுறுத்தி உள்ளனர்.
மேலும் 110ன்கீழ் தமிழ்நாடு சட்டமன்றத்தில் முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு செய்தபடி ஒரு ஆண்டின் அனைத்து மாதங்களுக்கும் சம்பளம் வழங்க அரசுக்கு பரிந்துரை செய்ய கேட்டு கொண்டனர். இதில் ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் சம்பளம் தராமல் இந்த 9 ஆண்டுகளுக்கும் ரூ.53400 ஒவ்வொரு பகுதிநேர ஆசிரியருக்கும் இழப்பு ஏற்பட்டுள்ளதை சுட்டிகாட்டி உள்ளனர்.மேலும் அரசின் பண சலுகைகளை கிடைக்க செய்வதில்லை என்பதையும் சொல்லி உள்ளனர். உதாரணமாக போனஸ் கூட இத்தனை ஆண்டுகளில் ஒருமுறை கூட தரப்பட்டதில்லை, ஊதியக்குழு பரிந்துரைப்படி ஊதிய உயர்வு தருவதில்லை என்பதையும் எடுத்து சொல்லி உள்ளனர்.
அதே நேரத்தில் இதே வேலையை செய்து வரும் ஆந்திர மாநில பகுதிநேர ஆசிரியர்களுக்கு ரூ.14203 தரப்படுவதையும் சுட்டிக்காட்டி கேட்டு உள்ளனர். நியமனம் செய்யப்பட்ட
16549 பகுதிநேர ஆசிரியர்களில் மரணம், பணி ஓய்வு,பணி ராஜினாமா உள்ளிட்ட காரணங்களால் ஏற்பட்ட 5000 காலியிடங்களின் நிதியை தற்போது பணிபுரியும் 12ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வாக பகிர்ந்து அளித்தால் அரசுக்கு நிதி செலவு ஏற்படாது என்பதையும் குறிப்பிட்டு வலியுறுத்தி உள்ளனர். தற்காலிக பணியாளர்களுக்கு 9 மாதம் மகப்பேறு விடுப்பு என்பதை பகுதிநேர பெண் ஆசிரியர்களுக்கும் உறுதி செய்திட ஊதிய குறை தீர்க்கும் கமிட்டியிடம் முறையிட்டு உள்ளனர்.
இதனை கோரிக்கை புத்தகமாகவும் கொடுத்துள்ளனர். அனைத்தையும் கவனமாக கேட்ட நீதியரசர் முருகேசன் தலைமையிலான கமிட்டி தமிழக அரசுக்கு பரிந்துரை செய்வதாக சொல்லி இருக்கின்றனர். 10வது கல்வியாண்டு தொடங்க உள்ள நிலையில் மாணவர்கள் கல்வி நலனுக்காக இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டப்படி நியமிக்கப்பட்ட இந்த பகுதிநேர ஆசிரியர்களுக்கு விடிவு காலம் பிறக்குமா என வரவுள்ள தமிழக அரசின் பட்ஜெட்டை எதிர்பார்த்து வருகின்றனர். அரசு கவனிக்குமா? இவர்களின் கனிவான கருணை மனு கோரிக்கையை!!!!.
தொடர்புக்கு
செந்தில்குமார்
மாநில ஒருங்கிணைப்பாளர்
தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு
செல் 9487257203.
Recommanded News
Related Post:
11 comments:
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி
Subscribe to:
Post Comments (Atom)
Kandippaga namakkum nallakalam pirakkum miga veraivil.All the best.
ReplyDeleteNoooooo
ReplyDeleteRomba sandhosam ne muditu unoda velaya mattum paru
DeleteAvan avan Tet trb pass pannittu job ku poga mudiya kasta padaran. Nenga entha exam pass panni antha velaiku poninga?
DeleteYenda adhi pudhi sali andha posting potapa tet exam irudhucha
DeletePoi sethurua unoda urimaya vaga thuppila aparam ye aduthava urimaila thalayidara
DeleteNo way raja. Nenga ethana kaalam work pannalum permeant job vaanga mudiyaaathuuu
DeleteAma ivaru soilitaru so nadadhurum yena ivaru periya lord so yelarum feel panalam vaga
DeleteAvaru unmaiyaaa thaan solranga frd.
DeleteYedhu sir unma unagaluku venum na nega job keluga irukavana la anupitu yenaku podu nu kekadha yena nalaiku una thorathitu adhey place ku vara inorutha nippa unakana urimaiya neya ketuvagu aduthavanta irukaradha puduga parkatha adhu pitchaiya vida kevalam
DeleteIppoooo nenga kekarathu mattum...
Delete