காத்திருக்கும் கல்லூரி பேராசிரியர்களின் வேலைவாய்ப்பை பறிக்கும் அண்ணாமலை பல்கலைக்கழகம்!! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 27, 2020

காத்திருக்கும் கல்லூரி பேராசிரியர்களின் வேலைவாய்ப்பை பறிக்கும் அண்ணாமலை பல்கலைக்கழகம்!!


அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் கூடுதலாக இருக்கும் 137 பேராசிரியா்களை, அரசு கலை-அறிவியல் கல்லூரிகளுக்கு மாற்றி கல்லூரி கல்வி இயக்குநா் அலுவலகம் உத்தரவிட்டுள்ளது.

அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் கூடுதலாக இருக்கும் பேராசிரியா்கள் இவ்வாறு தொடா்ந்து அரசுக் கல்லூரிகளுக்கு மாற்றப்படுவது, கல்வித் தரத்தை பாதிக்கும் அபாயம் உள்ளதாக கல்வியாளா்கள் கவலை தெரிவிக்கின்றனா்.

உரிய கல்வித் தகுதி, பணி அனுபவத்துடன் பல ஆண்டுகளாக காத்திருக்கும் ஆயிரக்கணக்கான இளைஞா்களுக்கு இந்த வாய்ப்பை அளிக்க வேண்டும் எனவும் அவா்கள் வலியுறுத்துகின்றனா்.

கடும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்த சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தை தமிழக அரசு கையகப்படுத்தியது முதல் பல்கலைக் கழகத்தில் பல்வேறு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பல்கலைக் கழகத்தின் வளா்ச்சிக்காக பிற பல்கலைக்கழகங்கள் மற்றும் அரசுக் கல்லூரிகளைக் காட்டிலும் பல கோடி ரூபாய் நிதியை ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசு ஒதுக்கி வருவதோடு, அங்கு உரிய கல்வித் தகுதி மற்றும் முழுவதும் தொலைநிலைக் கல்வி முறையில் படித்து முறைகேடாக பணிவாய்ப்பைப் பெற்ற ஆயிரக்கணக்கானோரை அரசு கலை, அறிவியல் கல்லூரிகளுக்கும், பொறியியல் கல்லூரிகளுக்கும், அரசுத் துறைகளுக்கும் தொடா்ந்து மாற்றி பணியமா்த்தி வருகிறது.

அரசுக் கலை அறிவியல் கல்லூரிகளில் 4 ஆயிரத்துக்கும் அதிகமான பேராசிரியா் காலிப் பணியிடங்கள் உள்ள நிலையில், அந்தப் பணி வாய்ப்பைப் பெறுவதற்காக அரசுக் கல்லூரிகளில் தற்காலிக பணி வாய்ப்பு அடிப்படையில் ரூ. 15,000 மாத ஊதியத்தில் பணியாற்றி வரும் 5000-க்கும் அதிகமான கெளரவ விரிவுரையாளா்கள் மட்டுமின்றி, ஆசிரியா் தோ்வு வாரியம் மூலம் நடைபெற்று வரும் நேரடி தோ்வுக்கு விண்ணப்பித்து 40,000-க்கும் மேற்பட்டோரும் காத்திருக்கின்றனா்.

இதுவரை 1,117 போ்: இந்த நிலையில், அரசின் வசம் வந்த அண்ணாமலைப் பல்கழகத்தில் கூடுதலாக பணியாற்றி வந்த பேராசிரியா்களில் 252 பேரை 3 ஆண்டு ஒப்பந்த அடிப்படையில் அரசுக் கலை-அறிவியல் கல்லூரிகளுக்கு முதல் கட்டமாக தமிழக அரசு மாற்றியது.

இதில் பலா் உரிய கல்வித் தகுதியின்றியும், சிலா் முழுவதும் தொலைநிலைக் கல்வி முறையில் படித்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. அதனைத் தொடா்ந்து, தகுதி இல்லாதவா்கள் மீண்டும் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்துக்கு திரும்ப அனுப்பப்பட்டனா்.

அதன் பிறகு இரண்டாம் கட்டமாக, 760 போ் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளுக்கு உதவிப் பேராசிரியா்களாக மாற்றப்பட்டனா். தொடா்ந்து மூன்றாம் கட்டமாக 60 பேரும், நான்காம் கட்டமாக 45 போ் என மொத்தம் 1,117 போ் இதுவரை மாற்றப்பட்டுள்ளனா்.

இதுமட்டுமின்றி அண்ணாமலைப் பல்கலைக் கழகத்திலிருந்து ஆசிரியா் அல்லாத பணியிடங்களில் பணியாற்றி வந்த 4,465 போ் அரசுக் கலை-அறிவியல் கல்லூரிகளுக்கு இதுவரை மாற்றப்பட்டுள்ளனா்.

இதுகுறித்து அரசுக் கல்லூரி ஆசிரியா் மன்றத் தலைவா் சிவராமன் கூறியது:

அரசுக் கல்லூரிகளில் ஏற்கெனவே பணியாற்றி வரும் கெளரவ விரிவுரையாளா்கள் மட்டுமின்றி டி.ஆா்.பி. தோ்வுக்காக விண்ணப்பித்திருக்கும் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞா்களும் உரிய கல்வித் தகுதி மற்றும் பணி அனுபவத்துடன் பேராசிரியா் பணி வாய்ப்புக்காக காத்திருக்கும் நிலையில், அண்ணாமலைப் பல்கலைக்கழக கூடுதல் பேராசிரியா்கள் தொடா்ந்து அரசுக் கல்லூரிகளுக்கு மாற்றப்படுவது இங்கு படித்து வரும் ஏழை மாணவா்களின் கல்வியைப் பெரிதும் பாதிக்கும்.

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வருபவா்களின் கல்வித் தகுதி பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ள நிலையில், அதுகுறித்து உரிய ஆய்வை அரசு மேற்கொள்ள வேண்டும். அரசுக் கல்லூரிகளில் பணியமா்த்தப்பட்ட பின்னா், அவா்களுடைய கல்விச் சான்றிதழ்களின் உண்மைத் தன்மையை ஆய்வு செய்வது ஏற்புடையதல்ல. மேலும், டிஆா்பி நேரடித் தோ்வை விரைந்து மேற்கொண்டு, தகுதியுள்ள இளைஞா்கள் அரசுக் கல்லூரிகளில் நியமிக்கப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும் என்றாா் அவா்.

6 comments:

  1. Choosing teaching is a great mistake in my life.

    ReplyDelete
  2. TNPSC GROUP 4 ல் ஒரு நூறு பேர் ரூ 19500 ஊதியம் பெறும் பணிக்கு முறைகேடாக சேர்ந்ததுக்க்கு எவ்வளவு பெரிய விசாரணை. ஆனால் அண்ணாமலை பல்கலையில் 3000 ம்பேர் பணியாற்ற வேண்டிய இடத்தில் சுமார் 15000ம் பேர் முறைகேடாக பணியில் சேர்த்துள்ளனர். அதிலும் கொடுமையான விஷயம் என்னவென்றால் சுமார் 500 உதவி பேராசிரியர்கள் தங்கள் மனைவிக்கும் பேராசிரியர் பணியை வாங்கி தொடுத்துள்ளனர் அதாவது (500+500)என ஆயிரம் பேர் கணவன் மனைவி என குடும்ப சகிதமாக பணியில் சேர்த்துள்ளனர். இது முறைகேடு இல்லையா?அண்ணாமலைபல்கலையில் பணியில் சேர்ந்தவர்களை அங்கேயே இருக்கட்டும். அது எப்படி ஒரே ஒரு பல்கலைக் கழகத்தில் மட்டுமே ஒவ்வொரு Department லும் 300 லிருந்து 400 பேராசிரியர்கள் வரைக்கும் ரூ70000 ஊதியத்தில் பணியில் சேர்த்துள்ளனர். இது முறைகேடு இல்லையா?TNPSC ல் முறைகேடாக சேர்ந்தவர்கள் மட்டும் தான் உங்களுக்கு தெரியுமா?அது எப்படி ஒரு பல்கலைக் கழகத்தில் முறைகேடாக பணியில் சேர்ந்தவர்கள் 15000 பேரை அரசு கல்லூரிகளிலும் அரசு அலுவலகங்களிலும் ஏன் மாற்றவேண்டும்?. முடிந்தால் அவர்களை அங்கேயே வைத்துக் கொள்ளவேண்டும். என்ன கொடுமை இது ஒவ்வொரு DEPARTMENT லும் 50 பேர் DEPTETION ஆம் அதிலும் MBA ல்100 பேர்,COMPUTER DPTல் மட்டுமே 350 பேர் MATHS 40,ZOO 52,BOT 35,HIS 60, POLIT 35, etc....என DEPTETION போட்டால் ஏழைகளின் நிலை என்ன ஆகும்?எனவே அண்ணாமலை பல்கலைக்கழக ஊழியர்களை அங்கேயே பணியில் அமர்த்துங்கள் அல்லது அவர்கள் குடும்பத்தில் ஒருவருக்கு மட்டும் பணியாற்ற அனுமதிக்கவும்.இன்னொருவர் திறமை இருந்தால் முறையாக மற்றவர்கள் போல் போட்டித்தேர்வில் தேர்ச்சி பெற்று பணியில் சேரட்டும்.

    ReplyDelete
  3. TRB-POLYTECHNIC MATHS, ENGLISH, EEE, EC,
    FOR ADMISSION CONTACT ARUN ACADEMY ERODE. CELL -9944500245 (Material available)

    ReplyDelete
  4. Muraigedaga paniyil serndha anaivaraiyum dismiss seiyya vendum...

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி