சேமிப்புக்கான வட்டி விகிதம் குறைகிறது!! - kalviseithi

Feb 9, 2020

சேமிப்புக்கான வட்டி விகிதம் குறைகிறது!!


பாரத ஸ்டேட் வங்கி ( எஸ்பிஐ ) மற்றும் மூன்று பொதுத் துறை வங்கிகளில் சேமிப்பு மற் றும் கடன்கள் மீதான வட்டி குறைக்கப்பட்டுள்ளது . ரிசர்வ் வங்கி சமீபத்திய நிதிக் கொள் கையில் வங்கிகளுக்கு அளிக் கும் கடன் மீதான வட்டியைக் குறைத்தது .

அதாவது இந்த வட்டி காலத்தை ஓராண்டு வரை யாக நீடித்துள்ளது . இதனால் வங்கிகளும் தங்களிடம் பொது மக்கள் சேமிக்கும் நிரந்தர சேமிப்புகளுக்கான வட்டியைக் குறைத்துள்ளன . வழங்கும் கட னுக்கானவட்டியும் கணிசமாகக் குறைக்கப்பட்டுள்ளது.

எஸ்பிஐ நிரந்தர சேமிப்புக்கான வட்டியை 6 சதவீதமாக
நிர்ணயித்துள்ளது . கடனுக்கான வட்டி
 7 . 90 % லிருந்து 7 . 85 % ஆக குறைக்கப்பட்டுள்ளது . ரிசர்வ் வங்கி ஒரு லட்சம் கோடியை வங்கிகளுக்கு கடன் வழங்குவதற்காக ஒதுக்கியுள்ளது . இந்தக் கடனுக்கான வட்டி விகிதம் ஓராண்டுக்கு மாறா மலிருக்கும்.

 இதனால் வங்கி களும் தாங்கள் அளிக் கும் கடனுக்கான வட்டியைக் குறைத்துள்ளன . பாங்க் ஆஃப் இந்தியா 6 மாதம் வரையிலான சேமிப்பு களுக்கான வட்டி விகி தத்தை 10 புள்ளிகள் வரை குறைத்துள்ளது . வீட்டுக்கடனுக் கான வட்டி விகிதத்தை 8 சதவீதம் என அறிவித்துள்ளது.

கனரா வங்கி சேமிப்புகள் மீதான வட்டி விகிதத்தை 25 புள்ளிகள் வரை குறைத்துள் ளது . கடன்கள் மீதான வட்டி விகிதம் 15 புள்ளிகள் வரை குறைக்கப்பட்டுள்ளது . ஓரியண்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ் வங்கியும் சேமிப்பு கள் மீதான வட்டி விகிதத்தை 10 புள்ளிகள் அளவிலும் கடன் கள் மீது ஓராண்டுக்கான வட்டியை 8 . 15 % அளவிலும் குறைத்துள்ளது.

1 comment:

  1. TRB apply panni panni semippe kuraiyuthaam....
    Vatti kuraiyuthaam .... poviyaa....!

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி